Sunday, November 23, 2008
Sweeney Todd - the demon அம்பட்டன்
அதிகாலை எழுந்ததும் சினிமா பார்க்கும் பழக்கம் இந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து குறைய ஆரம்பித்தது.
ரத்தம் சொட்டச் சொட்ட நினைவுகள் சுழலும் படம். ஜானி டெப்பின் மற்றுமொரு எக்ஸென்ட்ரிக் கதாபாத்திரம் - ஸ்வீனி டாட். இந்தப் படம் ஒரு ம்யூசிகல் திரில்லர். நம்ம ஊர் ஹரிதாஸ் படம் மாதிரி, படம் நெடுக பாடிக்கொண்டிருப்பார்கள். முக்கியமான டையலாகுகள் எல்லாம் பாடலாக வரும்.. ஹீரோ பாடுவார்.. ஹீரோயின் பாடுவார்.. ஏன், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் தகறாறு நடக்கும்போது கூடப் பாடிக்கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கவும். நம்ம ஊரில் பூசனிக்காயை தலையால் உடைக்கும் ஹீரோக்கள் அறிமுகத்தை மட்டும் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது புதிதாய் இருக்கும். இதுதான் ஸ்வீணி டாட் படத்தின் அறிமுக ஸீன்.
எப்படி ?
ஜானி டெப்பை உங்களுக்கு "பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்" மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால், நான் முதலில் பார்த்தது "நிக் ஓஃப் டைம்" என்ற படம். ப்ரமாதமான கான்ஸெப்ட்.. மனிதர் நடிப்பில் அசத்தியிருப்பார். ஆனால் ஏனோ அதற்குப் பிறகு, பெருவாரியாக ஒரு கிறுக்குத்தனமான அல்லது இருள் சூழ்ந்த கதாபாத்திரங்கள் ஏற்று வருகிறார். அதை சிறப்பாகவும் செய்கிறார். அதுவும் ஸ்வீனி டாட் படத்தைப் பார்த்த பிறகு, அந்த கதாபாத்திரத்தை அவரைத்தவிர யாராலும் தாங்கியிருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஹீத் லெட்ஜரின் மறைவுக்குப் பிறகு அவரது ஜோக்கர் கதாபாத்திரத்தையே இவரை வைத்து முடிக்கலாமா என்று யோசித்த காலம் உண்டு.
ஸ்வீனி டாட் படத்துக்கு வருவோம். மஹா த்ராபையான 1980 டைப் கதை. புளித்த மாவு. ஒரு பார்பர் - அதாவது நாவிதர் சந்தோஷமாக மனைவி குழந்தையுடன் லண்டனில் வசிக்கிறார். அவர் மனைவி மீது மோகம் கொள்ளும் ஒரு நீதிபதி, அந்த நாவிதரை ஆஸ்திரேலியாவுக்கு தண்டனையாக அனுப்புகிறார். சில பல வருடங்கள் கழித்து அந்த நாவிதர் புதிய பெயருடன் - அதாவது ஸ்வீனி டாட் என்ற பெயரில் லண்டன் திரும்புகிறார். எதிர்பார்த்தது போலவே குடும்பம் சின்னாபின்னமாகி இருக்கிறது. பழிவாங்க நினைக்கிறார்.. அதற்கு வெறி வந்து பல பேரை - முடிவெட்டும் சேரில் அமர வைத்து ஷேவிங் பிளேடால் கொடூரமாக (அதுவும் பாட்டுப்பாடியபடியே) கொலை செய்கிறார். கடைசியாக அதே நிதிபதியையும் கொல்கிறார்.. தானும் எதிர்பாராமல் கொல்லப்படுகிறார். "சுபம்" (இது ஒண்ணுதான் குறைச்சல்).
ஆனால் இப்படி முகத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை ஒரு மியூசிகலாக செய்திருப்பது படத்தையே ரசிக்க வைக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது - இது.
"கடைசியாக மறுபடியும் என் கை முழுமையாகிவிட்டது" என்று ஸ்வீனி சொல்வது கலக்கல். இதில் இன்னுமொரு அட்ராக்ஷன் - ஜானி டெப்பே பாடியிருக்கிறார் - நன்றாகவே.
உடனே என் தமிழ் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. நம்ம படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட மியூசிக்கல்தான் என்று பல பேர் சொல்கிறார்கள். ஆகம விதிகள் மாதிரி, படத்துக்கு ஐந்துபாட்டு என்று வைத்து ஒப்பேற்றிவிடுகிறார்கள். இந்த மாதிரி இருப்பத்து ஆறு பாடல்கள் வைத்து, படம் நெடுக பாடல்களாகவே இருந்தால் ?
பாடல்களுக்கு சிகரெட் பிடிக்க செல்பவர்கள், நூறு ரூபாய் டிக்கெட் கொடுத்து வந்தவர்கள் படம் முடியும் வரையில் வாய் ஓயாமல் புகைக்க வேண்டியதுதான். ஒன்ஸ் மோர் கேட்டால், படம் முழுவதும் திரும்ப ஓட்ட வேண்டியது தான். படத்தின் கதா பாத்திரங்களே பாடிக்கொள்வதால், தொப்பையில் சிங்கம் புலி வரைந்து கொண்டு நடனமாடும் குரூப் டான்ஸர்களுக்கு வேலை போய்விடும். இசையமைப்பாளர்கள் ட்யூன் தேடித் தேடி தேய்ந்துவிடுவார்கள். மறுபடியும் பாடத்தெரிந்த நடிகர்களுக்கு மவுசு வந்துவிடும்.. காரணம்.. படம் முழுக்க எஸ்.பி.பி பாடினால், அஜித் வாயசைக்க மட்டும் கோடி ரூபாய் காசா ?
எது எப்படியோ.. வியாபாரத்துக்கு ஒத்துவராது என்ற ஓட்டை காரணத்தைச் சொல்லி இம்மாதிரி படங்கள் தமிழில் வரப்போவது இல்லை. வராவிட்டாலும், குறையொன்றுமில்லை. ஆனால், இந்தப் படத்தின் பாதிப்பில் ஆளவந்தானையும், புதுப்பேட்டை ஆகிய படங்களை இப்படிப் பண்ணலாம் என்று தோன்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice review.. Seeny Todd in tamil must be = Haridas + Vettaiyadu Vilaiyadu. Lets see if Gautham menon could try it.
BTW, thanks for reminding on 'Nick of Time'.. I've downloaded it :)
Padaththoda attraction -- goramaaana kaatch + inimayaana padal + asaththalaana lyrics = vidhyaasamaana combo.
Udhaaranam, Anthony mattrum Sweeney iruvarum paadum duet - Johanna. Padal mattum kettal sugamo sugam. Kaatchiamaippu - kazhuththai seeviduvaar raththam sotta sotta.
Naan rendu tharam paathen indha padatha. Theater-la. Inga oru tharam repeat kettanga, theater kaararum kanbiththar. "Pretty woman" duetku. :)
Padathula enakku pidiththa character - Mrs. Lovett. Sema voice!
Post a Comment