Friday, December 05, 2008

கோளாறு நூறு !

சென்ற வார மழை நாட்கள் முடிந்து ஆபீஸ் சென்றால், அவரவர் பிரச்சனைகளின் டிஸ்கஷன்கள் குவிய ஆரம்பித்தன. வீட்டுத் தெருவில் தண்ணீர், வீட்டின் உள்ளே தண்ணீர், சாக்கடை கலந்த தண்ணீர், இரண்டு நாட்கள் கரெண்ட் கட், போன் கட், கரண்ட் வந்தாலும் கேபிள் இல்லை... இப்படி பலப்பல ப்ரச்சனைகள்.

தெருவில் தண்ணீர் இருந்ததைத் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாத நான் எல்லாவற்றையும் ஒரு பெருமித உணர்வுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். "எங்க வீடு ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கு.. சோ, ப்ரச்சனையே இல்லை.." என்றும்... "எங்க ஏரியாவில் ஒரு துளி கூட பவர் கட் ஆகல்லே.. ரெண்டு நாளும் விடாம டைம்ஸ் நௌ ஓடிச்சே !" என்றும் ஹாயாக சொல்லி வில்லிவாக்கத்துக்கு பெருமை தேடித் தந்தேன். வீட்டிற்குத் திரும்பினால், இன்டர்னெட் காலி. ! வில்லிவாக்கம் பூராவும் பிரச்சனை. நான்கரை நாட்கள் கழித்து, இன்றுதான் மறுபடி மோடம் மூச்சுவிடுகிறது. நான்கு நாட்களில் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

நாளை எழுதுகிறேன்.

1 comment:

Shreekanth said...

Enakku internet kooda cut aagala..... So no problem because of rain.... The so called "Shahar"..heart of the city T nagar ans west mambalam were affected like anything...
No power till last Sunday night in main places of chennai...