Tuesday, December 09, 2008
தொலை-திருப்பம்
நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைக்காட்சி பெட்டி முன்னால் உட்காரத் தீர்மானித்து "டாட்டா ஸ்கை"காரர்களை கூப்பிட்டால், இரண்டு நாட்களில் கொண்டுவந்து இறக்கி, ஏற்றி விட்டார்கள். துல்லியமான ஒளிபரப்பு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த பல நிகழ்ச்சிகள், இன்னுமும் ஸ்டார் வேர்ல்டில் வந்துகொண்டிருப்பது பழைய நாட்களை நினைவுக்கு அழைத்துவந்தது. "ஹெச்.பி.ஓ" பார்க்கும்போது பால்ய சினேகிதனைப் பார்க்கும் பரவசம் வருகிறது.
தீண்டத்தகாத ஒரு ஜீவனாய், ஓரமாய் கம்ப்யூட்டர் தட்டிக்கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்திவிட்டு, ஹாலுக்குப்போய் குடும்பமாக சேனல் சண்டை போடுவது, பள்ளி நாட்கள் போல இனிமையாக இருக்கிறது. அப்பாவுடன் சீரியல் சமரசம் செய்துகொண்டாகிவிட்டது. 'தச்சு'வுடன் "Active Wizkids" சேனலுக்கு நேரம் ஒதுக்கியாயிற்று.
"தேடிச் சோறு நிதம் தின்று
சில சின்னஞ்சிறுகதைகள் பேசி
உள சேனல்களில் அளவிலாது தினம் உழன்று
பல கோடி களிப்பு நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ந்து
கொடுஞ் சோம்பலுக்கு இறையெனப்பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
இனி நானும் ஆவேன் என நினைத்தாயோ !
...
Well,
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்... "
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழ்த்துக்கள்!
Keerthi...the snap covering dish and sky for TATA Sky is awsome!Nice creativity.
Hope you came out of ur sad mood:)
வேலன், நன்றி.
வெங்கட், நன்றி ! :)
ராக்ஸ், அடுத்த பதிவு பார்க்கவும் :(
இதுக்கு பாரதியார் பாட்டு டூ மச்....
Enjoy the TV shows :)
ஒரு சின்ன கரெக்ஷன் -- இரை -- எழுத்துப்பிழை உள்ளது. இப்போது நீங்கள் எழுதியிருப்பது இறைவனைக் குறிக்கும்.
Post a Comment