Saturday, December 20, 2008
விஜய் சிவா !
விஜய் சிவாவை பல பேருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் காலத்தில் இவரது குரலைப் பல தடவை கேட்டிருக்கிறேன், தலையாட்டி இருக்கிறேன். அதற்குப் பிறகு பல வருடங்கள் கேட்கவே இல்லை. சென்ற வருடம் யூட்யூபில் மாயவரம் பற்றித் தேடிக்கொண்டிருக்கும்போது, மயூரனாதம் என்ற பாடல் பாடிக்கொண்டிருந்த விஜய்சிவாவைக் கண்டுகொண்டேன்.
விஜய் சிவா எம்.காம் படித்திருக்கிறார். சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமனின் சீடர். நன்றாக மிருதங்கமும் வாசிப்பாராம். இவர், தன் பங்குக்கு YACM (Youth Association for Classical Music) என்ற குழுமத்துக்கு செயலாளராக இருந்திருக்கிறார். YACMல் பல பிரபலங்களின் பெயர்களைக் காணலாம்.
விஜய் சிவாவின் இந்த குறிப்பிட்ட கச்சேரி, காவேரி சம்பந்தமானது. காலத்தைத் தாண்டி அழியாமல் இருக்கும் பாடல்கள் சரித்திரக் குறிப்பாகவும் உணரப்படுகின்றன. எந்தெந்தப் பாடல்களில் "காவேரி" பாடப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து ஒரு தொகுப்பாக விஜய் சிவா வழங்கிய நிகழ்ச்சியை அப்லோட் செய்த இசைநேயர் வாழ்க.
அதன் முதல் பகுதி கீழே காண்க. அங்கிருந்து வரிசையாக கேட்டுக்கொண்டே செல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment