
சென்னை போட்டோவாக் (Photowalk) நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வரை பயணித்து புகைப்படம் எடுத்துத்தள்ளியது. நான் வள்ளுவர் கோட்டத்தை மட்டும் படம் எடுத்துவிட்டு கிளம்ப நேர்ந்தது.

இந்தப் படம் புரிகிறதா ? வள்ளுவர் சிலைக்கு முன் ஒரு கேட் போட்டு அதில் "தாண்டிச் செல்ல அனுமதி இல்லை. மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்று எழுதியிருந்தது. வள்ளுவர் சிலையையும், "மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்ற வாசகத்தையும் மட்டும் படம்பிடித்தேன்.

தேர்க்காலடி

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.


இதற்கு ஒரு கவித்துவமான தலைப்பு, நீங்களே வையுங்களேன்.



2 comments:
படங்கள் அருமை
Karka kasadara karpavai katrapin
kaadhalpuriveer adharku thaga..
Post a Comment