
வில்லிவாக்கம் லோக்கல் அசோசியேஷன் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் இசை, நடனம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை அரங்கேறின.. அதில் பரத நாட்டிய நிகழ்ச்சியில் நடனமாடி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய நான்காம் வகுப்பு மாணவி அக்ஷயா - தான் மேலே நீங்கள் பார்ப்பது.
இவர் நடனத்தை போட்டோ பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. அவ்வளவு வேகமான அசைவுகள். இது போதாதென்று பானை மீது நடனம் வேறு. ஒரு வழியாக ஒரு ஆறேழு போட்டோக்கள் தேறியது.
அபாரமாக ஆடி, பலத்த கரகோஷங்களைப் பெற்றார். ஓரமாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில், ஒரு பெரியவர் வந்து "அவள் என் பேத்தி.. " என்றார். "ரொம்ப நன்னா ஆடறா மாமா !" என்றேன். நானும் அவரும் அந்த மண்டபத்தின் ஓரத்தில் நின்று கொண்டு பாக்கி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தோம். கடைசியில் பானை மேல் நின்று நடனம் ஆடியதைப் பார்த்து அதிசயித்த அனைவரும் எழுந்து நின்று கைகளை மேலே எழுப்பி கைதட்டினார்கள். பெரியவர் புன்னகையோடு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.
2 comments:
பானை மேல் நடனமாடின் போஸ் எங்கே?!
இந்த புகைப்படமும் அசத்தலா இருக்கு!
வெங்கட்ரமணன்!
Photo-va post process pannuveengala? Andha black background eppdi add pannuveenga? Konjam helpungalen?
KK
Post a Comment