
UTV புண்ணியத்தில் இந்த "உலக சினிமா" சேனல், என் வீட்டுக் கூடத்தில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. நாடு, மொழி பேதமில்லாமல் படங்கள் போட்டுத்தள்ளுகிறார்கள். சில படங்கள் பார்க்க வேண்டியவை. பர்மா பஜாரில் கால் தேய தேடி அலைந்தாலும் கிடைக்காத பொக்கிஷங்கள்.. இந்த சேனலில் பார்க்கலாம்.
இதில் "டிக்கெட் வாங்கும் முன் பார்க்கவேண்டிய ஐம்பது படங்கள்" என்றொரு சீரீஸ் வருகிறது (50 movies you must watch before you die). இதில் திரையிடப்படும் படங்கள் அனைத்தும் நம்மை உலுக்குபவை அல்லது உருக்குபவை.
இந்த நிகழ்ச்சி அல்லாது, இன்று மதியம் "பேரடைஸ் நௌ" என்ற படம் பார்த்தேன். பாலஸ்தீன இளைஞர்கள் இருவர், இஸ்ரேலின்மீது தற்கொலைத் தாக்குதல் நடக்கத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஆரம்பித்து, அந்த இளைஞர்களின் கடைசி நாளை உணர்ச்சி கொப்பளிக்க படம் பிடித்துக் காண்பிக்கின்றனர். இந்தப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், ஒரு மாதிரியாக "ஹெவி" டோஸ் கொடுக்கும் படம்.
அடுத்த படம் போடுவதற்குள் போய் டிவி முன் சென்று ஐக்கியமாகிறேன்
No comments:
Post a Comment