
"கோவிந்த நாம சங்கீர்த்தனம் !! கோவிந்தா ! கோவிந்தா !" முழக்கங்களுடன் 2009 இனிதே ஆரம்பித்து உள்ளது.
--
"சத்யமேவ பயதே !" என்று சத்யம் கம்பெனி நேற்று கவிழ ஆரம்பித்த நேரம் சுமார் பதினொன்றரை. அந்தக் கம்பெனியில் அந்த நொடி வரை சி.இ.ஓ. ஆக இருந்த ராமலிங்க ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார். சும்மா செய்யவில்லை.. அந்தக் கம்பெனியின் எதிர்காலத்தையே (அதாவது சுமார் ஐம்பதாயிரம் சாஃப்ட்வேர் தொழிலாளர்களின் எதிர்காலத்தையே) ஊசி முனையில் நிற்க வைத்துவிட்டுப் போய்விட்டார்.
MAYTAS என்ற நிறுவனத்தை வாங்க நினைத்தார் ராஜு. இந்த நிறுவனம், ராஜுவின் மகனால் நடத்தப்பட்டுவரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (MAYTAS - திருப்பி படிச்சா SATYAM... அடெடே!) சத்யம் போர்ட் உறுப்பினர்கள் அதை நிராகரிக்க, அதற்குள் பங்குதாரர்கள் கடுப்பாகி விற்க ஆரம்பிக்க - அப்பொழுதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை. ரூ. 260ல் இருந்து தட தட என இறங்கி ரூ. 160-ரூ 180க்கு வீழ்ந்தது. இதற்கு நடுவில் "WORLD BANK" வைத்த ஆப்பு வேறு.
எல்லாமாக முடிந்தது என்று நினைக்கும் வேளையில், ராஜு நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில், Inflated cash balance, Understated liability என்று அத்தனை கோல் மால்களையும் செய்து தான் "சத்யம்" குவார்டர்லி ரிஸல்டுகளில் ரேஞ்சு காமித்துவந்தது என்று தெரிவித்துள்ளார். இந்த "இல்லாத பணத்தை" (ஏழாயிரம் கோடிகள்) ஈடு கட்டுவதற்காகவே, MAYTAS நிறுவனத்தை வாங்க நினைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படிச் செய்திருந்தால், இந்த இல்லாத பணத்தை MAYTASக்கு கொடுத்துவிட்டு, நிம்மதியாக இருந்திருக்கலாம்.
இதனால், நேற்று ரூ. 160ல் இருந்து டம்ம்ம்மால் என்று ரூ. 40க்கு விழுந்துவிட்டது. நம்ம ஊரில் இந்த சாக்ஸ் ஆக்ட்(SOX Act) போன்று ஏதாவது செயல்படுவதே இல்லையோ ? எது எப்படியோ... நான் 2009 பற்றி ஒரு ஜோஸ்யம் சொன்னேனல்லவா ? பாருங்கள்.. ஆரம்பமே அசத்தல்...
இதிலிருந்து தெரியும் விஷயம்... ராமலிங்க ராஜு - திறமைசாலி (இவரது சத்யம் வரலாறு மெய்யாகவே inspiring).. தைரியசாலி.. புத்திசாலி.. ஆனால், 2009ல் அதிர்ஷ்டசாலி இல்லை.. !! குவார்டர் ரிஸல்டுகளில் சின்னதாக ஆரம்பித்த பித்தலாட்டம், கம்பெனியின் ஆணி வேரையே பதம் பார்த்து இருப்பதில் இருந்து உணரும் விஷயம் -
"உண்மையை என்றும் குழி தோண்டி புதைக்க முடியாது"
"சத்யமே கடைசியில் வெல்லும் !".
பெருமாளே !! காப்பாற்று !
2 comments:
"உண்மையை என்றும் குழி தோண்டி புதைக்க முடியாது"
"சத்யமே கடைசியில் வெல்லும் !".
Fantastic...
தைரியசாலி.. புத்திசாலி.. ஆனால், 2009ல் அதிர்ஷ்டசாலி இல்லை.
gud rhyming.........
Post a Comment