விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுப்பது உண்டா?
கமல்:- தெருவில் நடந்து போகும்போது, யார் யார் பேச்சுக்கெல்லாம் செவி மடுப்பது என்று எல்லோருக்கும் ஒரு நிர்ணயம் இருப்பது போல்தான் இதுவும்.தெருவில் வழி கேட்பவருக்கோ, மணி கேட்பவருக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். "பள்ளம், பார்த்துச் செல்லுங்கள்'' என்பவருக்கு செவி சாய்ப்பது தற்காப்பு.
தன் நிலையே உணராமல் குடித்துவிட்டு போதையில் பினாத்துபவனிடமோ, பெண் குலத்தார் அங்க பாகங்களை கிண்டலடிக்கும் மட்டரகமான ஆட்களையோ, நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். ரொம்பச் சேட்டை கூடிப்போனால் பதிலடியும் கொடுப்போம் அல்லவா? அது மாதிரித்தான் விமர்சனங்களும். நியாயம், தரம் ஆகியவை மட்டுமே என்னை விமர்சனங்களை மதிக்கச் செய்யும்.
----------------
இந்தியா டுடேவின் ஒரு சிறப்பிதழாக - "கமல்ஹாசன் சிறப்பிதழ்" வெளியிட்டிருக்கிறது. சில அரிய படங்களுடன், பலபேரின் பார்வையில் கமல்ஹாசனைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பர் ஷங்கர் கைங்கர்யத்தில் ஓசியில் படித்துமுடித்துவிட்ட அந்த இதழைப்பற்றி நானும் எழுதியாக வேண்டும் என்ற அல்ப-சபலத்தில் எழுதுகிறேன்.பாராட்டுக்கள் அனைவரும் அறிந்ததே. அவர் வித்தியாசமாக சிந்திப்பவர், மிகச்சிறப்பாக நடிப்பவர், ஆழ் கருத்துக்கள் பகர்பவர்... அப்படி, இப்படி என்று பாராட்டல்கள் ஒருபுறமிருக்க, பல விதமான வசைச் சொற்களும் அதிகமாக தட்டுப்பட்டன. அதிலும் அதிகமாக "உலக சினிமா" என்ற ('களுக்' என்று சிரிப்பு வருகிறது) கருத்தில் அனேகமாக பலரும் கமல் மீது கோபத்தில் இருப்பதாக உணர்கிறேன்.
மணுஷ்யபுத்திரன் விருமாண்டிக்கும் பருத்திவீரனுக்கும் உண்டான வித்தியாசங்களை அளக்கிறார் (பருத்திவீரன் அவ்வளவு நல்ல படமா ? இன்னும் பார்க்கவில்லை. விருமாண்டி பதினாறு முறை பார்த்தாயிற்று). அருள்மொழி என்பவர் கமல் தனது நாத்திகத்தை திரையில் காண்பித்து தன் ரசிகப்பட்டாளத்தை பகுத்தறிவாளர்கள் ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஒரு ஓவியர் உலக சினிமாக்கள் உண்டாக்கும் தாக்கத்தை கமல் சினிமாக்கள் உண்டாக்குவதில்லை என்கிறார். எல்லாவற்றிர்க்கும் மேலாக சாருநிவேதிதா (இவர் ஒரு எழுத்தாளர் போலும்) கமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி சினிமா எடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலே முன்னுரையில் கண்ட கேள்வியின் பதிலிலிருந்தே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட விமர்சனங்கள் கமலின் சிந்தனைக்கு வித்திட்டிருக்கும், எத்தனை விமர்சனங்கள் வெறும் காகிதத் திருப்புதலில் கரைந்து போகும் என்று.
ஆனால், ஏனோ ஒரு உந்துதல்.. தலைவனுக்காக ஒரு தொண்டன் வரிந்துகட்டி சண்டைபோடுவதுபோல் (தலைவன் அதை விரும்பாவிட்டாலும்) செய்யவேண்டும் என்ற ஒரு உந்துதல்.. கலைஞனுக்காக ஒரு ரசிகன்
அமீர் இயக்கிய ஒரே ஒரு படத்தை மட்டும்தான் நான் பார்த்தேன் - "மௌனம் பேசியதே". ஆகவே, அவரைப்பற்றியோ, அவரது "பருத்திவீரன்" குறித்தோ எழுத எனக்குத் தகுதி இல்லை. ஆனால், விருமாண்டி ஒரு தரமான படம் என்ற நம்பிக்கையில் அந்த ஒப்பீட்டை நான் வெறுக்கிறேன். விஸ்தாரமான கிராமப்புறச் சூழலுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தமுடியாத சர்சைவாய்ந்த நிலையில், கிண்டி கேம்பகோலா வளாகத்தில் ஒரு கிராமப்படத்தை எடுத்த நேர்த்தி என்னை வியப்பில் ஒவ்வொரு முறையும் திளைக்கச் செய்கிறது. மரண தண்டனை விதிக்கப்படும்பொழுது கேட்கப்படும் / சொல்லப்படும் / வாதிடப்படும் விவாதங்கள் ஒரு சம்பவத்தை ஒட்டி நிகழும்போது, அதில் இரண்டு பேர் சொல்லும் ஒரே நிகழ்வு எப்படி வேறுபட்ட பரிணாமத்தைக் கொடுக்கிறது என்றும், அப்படி சந்தர்ப்பசாட்சியங்களைக் கொண்டு இழைக்கப்படும் மரண தண்டனைகள் விவாதத்திற்கு உரியது என்றும் வாதிடும் ஒரு கதை - விருமாண்டி. இதை ஒரு கமர்ஷியல் சினிமா என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கை. "உலக சினிமா" பார்க்கும் என்னைப் பொருத்தமட்டில், விருமாண்டி, ஹே-ராம், நம்மவர், மஹாநதி, குருதிப்புனல் ஆகியவை - உலகத் தரம்வாய்ந்த சினிமாக்களே !
நாத்திகம் - கமலஹாஸன் தன்னை எங்கே நாத்திகன் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார் என்று நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.. இன்னும் கிடைத்தப்பாடில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஆத்திகவாதிகளிடம் புழங்கும் மூட நம்பிக்கைகளில் சரியளவு மூடத்தனமான அவ-நம்பிக்கை தங்களை 'நாத்திகர்கள்' என்று கூறிக்கொள்பவர்களிடம் இருக்கிறது. பெரியாருக்கு சந்தனமாலை அணிவித்தால் அதை அவமானமாக நினைக்கிறார்கள். ஆத்திகத்துக்கு நேரெதிர் நாத்திகம் என்று நம்புகிறார்கள். நாத்திகம் போதிக்கும் அனைவரும் ஜாதி வெறுக்கிறார்கள். அடிப்படையில் நாத்திகத்துக்கும் ஜாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு கற்பனையில் அதை இணைத்து அந்தக் கொள்கைகளின் பாதுகாவலராய் தம்மை அற்வித்துக்கொள்வதன் மூலம் தம்மை ஒரு போராளியாக பாவித்து மகிழ்கிறார்கள். உண்மையில் பலபேர் இவர்களைக் கண்டுகொள்வது இல்லை. எனக்கே இப்படி யோசிக்கத்தோன்றுகிறது என்றால் கமலஹாசனுக்கு எவ்வளவு தோன்றியிருக்கும். ஏதோ ஒரு பத்திரிக்கையில் வேலு பிரபாகரன், கமல்ஹாசன் தன் படங்களில் வைணவ சம்பிரதாயங்களை காட்டியிருப்பதாகச் சாடியிருந்தார்.
சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'இராமநுஜர்' என்ற புஸ்தகம் படித்ததில் கமலது இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்திருக்கும் என்று புரிகிறது. ராமானுஜர் உண்மையில் மற்ற துறவிகளைப் போலல்லாமல் உலக வாழ்க்கையை நேசிக்கிறார். இறக்க விரும்பவில்லை. 'பக்தி' 'ரஸம்' என்று உருகி திளைக்கிறார். அவர் கூறுவதெல்லாம், இறைவன் ஒருவனே ! அவன் ஸ்வரூபமற்றவன் என்று நீங்கள் கூறலாம். நான் அவனை நாராயணனாக பாவித்து வணங்குகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம் என்கிறார். கிட்டத்தட்ட ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்திருக்கிறார் இராமானுஜர்.
சோ, நாத்திகவாதத்தை கமல் மூலம் திரையில் சொல்லிக்கேட்க வேண்டும் என்று கேட்க முனைபவர்களுக்கு இணையாக, நானும் இன்னும் பல ஸ்லோகங்களையும், பாசுரங்களையும் கேட்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் உண்டு (மர்மயோகியில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு சிவன் ஸ்துதி இருப்பதாக கேள்விப்பட்டேன். நாராயணன் அருளால் நல்லபடியாக வெளிவரவேண்டும்).
அடுத்து - உலக சினிமா உருவாக்கும் தாக்கம். எளிமையாகச் சொல்வதானால்... மாடர்ன் ஆர்ட் ரசிகர்கள் மாதிரிதான் 'உலக சினிமா' விரும்பிகளும் (வேடிக்கயான விஷயம் ஆங்கிலப்படங்களையெல்லாம் உலக சினிமா என்று நம்புவது). எல்லாரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டிய 'Lives of Others' என்ற படம் எனக்குள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் யாருமே பாராட்டாத 'The Assassination of Jesse James by the coward Robert Ford' என்ற படம் ஆழமான எண்ணப்பதிவுகளை விட்டுச் சென்றது. ஆகவே, உலக சினிமா என்பது லோக்கல் சினிமாதான்... அதன் ரசனையின் அளவுகோல் அனைவருக்கும் பொதுவானதன்று. ஆனால் கதையின் தரமும், சினிமாவின் எல்லை நிலங்களும் கருத்தில் இருந்தால் போதும்.
முக்கியமாக, சினிமா என்பது வாழ்க்கையை யதார்த்தமாக காட்டவேண்டும் என்ற அவசியம் "நிச்சயமாக" இல்லை. முக்கியமாக இந்த இலக்கியவாதிகளிடம் சினிமா பற்றி கருத்து கேட்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் கொசுறாக ஒரு கருத்து - 'கூத்துப் பட்டறைகள்'.. சினிமாவைவிட அவை ஒசத்தி என்ற எண்ணம் பலபேரிடம் (இந்த இதழில்) இருப்பதாகத் தெரிகிறது. கேன்வாஸ் ஓவியத்தைவிட அரிசிமாவு கோலம் ஒசத்தி என்ற எண்ணத்தை ஒத்த கருத்துதான் அது. அது அது அந்தந்த விஷயங்களில் ஒசத்தி..
முடிவுரை :
கேள்வி:- நீங்கள் நடித்த பழைய மசாலாப் படங்களை இப்போது பார்க்கும்போது, குற்ற உணர்ச்சி ஏற்படுமா?
கமல்:- நான் சிறு வயதில் செய்த பிழைகளை திருத்திக்கொண்டு விட்டதால் குற்ற உணர்வு இல்லை. வளர்ந்த உணர்வுதான்.
21 comments:
Hi,
Your review to the India today special issue is detailed and to the point. Do write more such reviews.
THanks
Pattayai kelapitinga...Neethiyadi..Iruthanlum oru nappasai,Charu nivethavuku innum konjam strong reply koduthu irukkalam.
Nice... Nice...
//நியாயம், தரம் ஆகியவை மட்டுமே என்னை விமர்சனங்களை மதிக்கச் செய்யும்//
//குற்ற உணர்வு இல்லை. வளர்ந்த உணர்வுதான்.//
KAMAL - One of the Great Man who knows, understands and respects the freedom of his own and others, ever!
Anons, thanks.
Vas, thanks. Infact I forgot to write about the ugly comparison of Amithabh Bachan & Kamal.. Will write separately about it.
India Today is not a yellow magazine like Anantha Vikatan. AV is a pure Kamal's slave magazine. Hope you are also one of those monkeys belong to Kamal.
I didn't take much care about Kamal or you. I just avoided it. But for your information, it is funny that you watched Virumaandi so many times, but you didn't like Lives of others. But do not worry. Kamal will copy the movie someday and add to his list of world cinema. Then you guys say he made another world cinema.
And could you please tell me, how many Kamal's films won National award in National category? None. But Kamal won Actor category more that anyone. This show that he makes movies to show his acting talents, not to tell a story. He is a curse for Tamizh cinema.
kamal is a very good actor.no question about that.one think is he acted almost 100 masala movies.last 5 to 7 years only he was doing very selcted movies.
do not think all other persons are waste. appreciate if some one is doing really good whether he is kamal or Paruthi veeran karthick"
even vadivelu acted very well in some movies.
see SURYA , In :varanum ayeeerammm: he acted very well (movie is not good, ok) but he has put lot of effort....i think this is his 20 th or 25 movie.......
Hari, i thought of various ways to respond.. then i thought, what the heck.. it is enough if i said "Poda !".
Anon, I do not think, nor have i said that other persons are waste.
Ha Ha Ha. You thought several answers but cannot say one. Ha Ha Ha. "Welcome to your senses.". Like Kamal, you too think that just naming means revolutions. Ha Ha Ha.
Hari,
After all unlike you, Kamal never preached to poke one's nose voluntarily and attack others personal sentiments and 'senses'. Making an attacking stance, and attacking others is different. Following public etiquette is something on the volumes of Kuselan movie Profits for some fan boys..
Nee pesu raaja.. All bandwidth is yours.. Google has a lot of reserves !
what is "world cinema?
what are the tamilmovies coming under world cinema?
do not write all the kamal movies are world cinema?
@Srini, "never preached to poke one's nose voluntarily".
Then what he does in his movies? Same thing.
@Hari
I am with you.I will accept sivaji,kuselan and baba are world class movies that could have been nominated for best film category.I do not know why they did nominate that.Golden globe awards koda announce panniyacha,,what a crime..athuleyum kuselan perru illaya..enna kodumai...Namma oscaruku wait pannellam.
World cinema irukkattum, First let Kamal prevent his producers from committing suicide after producing his movies.
What happened to the "Oscar" producer after the so-called "successful" Bussavataram?
Ballelakka said...
World cinema irukkattum, First let Kamal prevent his producers from committing suicide after producing his movies.
Appadiya ayyo pavam...
So called dhanu who said aalvanthan azikavanthan is still producing top budget movies like crap movies like sakarakatti,kandhaswami..is he dead...
Rajini closed two of the big producers..one is eswari productions(kannada ravichandran father) who gave rajini superhit movie called padikathvan..and samne producer was bankrupt after producing nattakku oru nallavan,ravichandran wanted rajini to make a movie to come out of his father's debts but rajini said he will do later and ravichandran's father passed away..that is history now..then came the all in all pyramid samira..avan edho china budget padam edthu pozhaichitu iruthan avan perusa kuniya vaichu bondi akkinathau yaruu...aparam rajini ira nenjikarar achey...when is gurunathar balchander was in bad debts...freeya padam koduka vendithaney...27 crores yepam vittaru illai...dasavatharam bussavatharam cinema pathi therinnja pesunga illaina odi poidunga...dasa collected more than 300 crores and oscar is in talks with jackie to make a movie with a maginitude of close to 400 crores...you know what kamal panra nalla visayamtheku cheap publicty rajini mathiri panrathilai...when gn.rangarajan(who gave massive hits like mendum kokila,kalayanaraman,kadal meengal) was bankrupt he asked kamalto make a guest appearance in a movie so that he could sell it a higher price kamal gave callsheet of 20 days for just meager 5 lakhs..and gn rangarajan made a profit of 25 lakhs with a movie called magarasan...nee ellam rajini baba lossku thokkki kodutharnu scene create panrenga..unmai ennana baba movie was distributed by some vip's and ministers of ADMK when he got released that time and they all paid a big price to get the rights of the movie and when the movie flopped big time rajini was forced to give back the money...
@vas, neega Kamala vachu comedy kemedy ethuvum pannaleye. Nattakku ore nallavan is a multilingual movie and one cannot take blame not so native movie.
Maharasan la 25 lakhs laabam. HA HA Ha. Rajiniku nastam vanthele crores kannakil than varaum. Producerku 25lakhs lamabna distruibutorku lakhsla nastamnu artham.
Dasa 300 kodi vasool panichaam. Enathavathu oru website(non-yellow) irudha katten? Ghajini-ye athisaya 200 cross panniruku. Kamal fan entha vennalum nambuvan. madayan.
Even Reliance big films negotiating for 35crore max for Kuselan, its Pee(eating).Swamithan of Pyramid saimira greed the producers and bought it for 60c. So greed fails here not Rajini.
Dasa's success is a fluke. See that Marmayogi is never made. At least Enthiren has new producers with improved budget. What cant Kamal do the magic?
Kamal used Sivaji's experiment results to make his movie success. Without Sivaji there is no Dasa. So Rajini plays bigger part in Dasa's success. You know about Kamal's experiment with others money.
Simply now,
Rajini is shooting,
Kamal is sleeping.
Mental fan mentalleythaan
அவன் வாயாலே ஒத்துண்டுடன்
"Rajiniku nastam vanthele crores kannakil than varaum"
பேஷ் பேஷ் பிரமாதம்டா அம்பி
வாய மூடிந்டு கிளம்பு காத்து வரட்டும்
@Vas
Naanga othukuvom, ulgala mathiri poi pesa mattom. Alavanthan Azhikavanthan enru Kamal pathi vandhadu, Rajini pathi illa.
Also we respect all living beings in the world. We even respect living things like you. But you guys are never respect others because Like Actor, Like Fan. Immature guys.
Also tell me what happened to a project called Robot directed by Sankar starring Kamalhassan, Priti zinda?
See who had the last laugh. ee Ha Ha Ha.
Athu theriyatha unnaku ayngaran bondiyagey eppa sun tv bondiyagapoguthu...
@Vas,
Innamum Ayngaran, Robot producers groupla irruku. Eros patila Sun.
Refer here. http://www.ayngaran.com/movielist.php?type=own
Vas-ku astrology ellam theriyama??? Marmayogi, Maruthanyagam en varalanu sollen?
Nee keeta kelvikkellam naan, pathil solliten. Naan keeta kevikul oru pathil solla unnal mudiyala. Thisai thiruprue.
pathil sollu, illa வாய மூடிந்டு கிளம்பு காத்து வரட்டும்.
Post a Comment