Tuesday, January 20, 2009

பிட்ஸ்... !



நேற்று பாராக் ஒபாமா பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சியை சி.என்.என்.னில் பார்த்துக்கொண்டிருந்தோம்... குடும்பமாக ! பதவிப்ரமாணத்திற்கு முன்னால் ஒருவர் வந்து ப்ரார்த்தனை செய்தார். அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் மௌனமாக இருந்து அந்தப் ப்ரார்த்தனையைக் கேட்டார்கள். Pin-drop silence. பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.. அது நடந்துகொண்டிருக்கும்போதே அப்பாவைப் பார்த்து நான் சொன்னேன்..

"அங்கே பார்.. எவ்ளோ அமைதியா கேக்கறாங்க.. என்ன ஒரு டிசிப்ளின்... நம்ம ஊர்ல இப்படி நடக்குமா... மேடைல ஒருத்தன் பேசிட்டு இருப்பான்... இங்கே ஒருத்தன் திரும்பி கதை அளந்திட்டு இருப்பான்..."...

அதற்கு என் அப்பாவும் "ஆமாம்.. அமெரிக்கான்னா அமெரிக்காதான். இங்கே பீச்லெ நடக்கிற கூட்டத்தில எல்லாம் ஒரே இரைச்சலாத்தான் இருக்கும்" என்றார்.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா வந்தாள். டி.வியைக் காட்டி "அது அமெரிக்கா.." என்றும், எங்களைக் காட்டி "இது இந்தியா.." என்றும் சொன்னார்.

:)

---------------------------------------

'ஸ்லம்டாக் மில்லினர்' பாடல்கள் அனைத்தும் திரும்பத்திரும்ப லூப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. "ரிங்க ரிங்க ரிங்கா !!"

---------------------------------------

'மூப்பும் பிணியும் இனி பொழுதுபோக்காம் - வாழும்
நாளில் தனிமை மட்டுமே உறுதுணையாம் - தினமும்
கோயில் மணியும் கரண்டு பில்லும் பணியாம்.. இனிமேல்
உறுதி கனியும்.இரக்கம் வழியும். பயம் கூடும் - கூடிய
சீக்கிரம் முடியும்.'

போன பதிவில் நான் எழுதிய கவிதை. எந்த மரபுக்கும் ஒட்டாத புதுக்கவிதைதான்.. ஆனால் முறையாக மரபுக்கவிதைகள் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

No comments: