
காஞ்சிபுரம் சென்றிருந்தேன், திரும்பவும். இந்த முறை ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்க.
கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வீர்களேயானால், போக வர ரூ.46 கோயிலில் போட்டோ எடுக்க ரூ. 25 அங்கங்கு தட்சணை ரூ. 20 - ஆக மொத்தம் ரூ. 91 மட்டும்தான் செலவு ஆகும். போக ஒன்றரை மணி நேரம், வர ஒன்றரை - ஆக மூன்று மணி நேரப்பயணம். கோயிலில் ஒரு இரண்டு மணி நேரம்.
சுமாராக ஒரு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் இருந்தால், வெகு சுலுவாக போய் வரலாம். (சொகுசு ஏசி பஸ் ஒன்று தி. நகரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு செல்கிறது. அதில் செல்வதானால், இன்னும் இரண்டு சலவை நோட்டுகள் எடுத்துக்கொள்ளவும்).

இந்த ஸ்தலத்தின் வ்ருக்ஷம் மாமரம். இதன் அடியில் காமாக்ஷி அம்மன் தவம் செய்து ஈசனை மணந்தார். அந்த மாமரத்தின் வயது 3500 என போர்டில் எழுதியிருந்தது. அம்மரத்தில் நான்கு கிளைகளில் நான்கு விதமான ருசியும் உருவமும் உள்ள மாங்கனிகளை அம்மரம் தருவதாகவும் எழுதியிருக்கின்றனர்.
ஒரே மாமரம்... ஏக + ஆமரம் = 'ஏகாம்பரம்' என்ற மரூஉ படி மருவப்பட்டது. (இடக்கரடக்கல் எல்லாம் மறந்து போச்சு).

கீழே இருக்கும் இந்தப்படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. 'மனோகர்' என்பவர் சொல்லிக்கொடுத்தொரு விஷயம் 'ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கட்டமைப்பை போட்டோ எடுக்கும்போது, அதில் உயிரோட்டம் ஏதாவது இருக்கவேண்டும்' என்பது. அதன்படி, முடிந்த அளவிற்கு மக்கள் நடமாட்டத்தோடு எடுக்க முயற்சித்திருந்தேன்.

அப்புறம் நம்ம ஃபேவரிட் தெப்பகுளம்..


அப்புறம் சூரிய அஸ்தமனம்..


இந்த போட்டோவில் கொஞ்சம் தகிடுதத்த வேலை செய்திருக்கிறேன்.

கறுப்பு வெள்ளையில், முகப்பு கோபுரம்

வாசலில் விற்கப்பட்ட பாசி மணி, ஊசி மணி மற்றும் வளையல்கள்..

5 comments:
புகைப்படங்கள் அருமை! மரூஉ, இடக்கரடக்கல்ல்லாம் (Euphemism) இலவச இணைப்புதான்!
Nice Pictures. which bus did you take?
i liked sixth from the bottom
ஹைய்யோஓஓஓஓஓஓ......
படங்கள் ஒவ்வொன்னும் கண்ணுலே ஒத்திக்கலாம்போல இருக்கு!!!!!!
(நானும்தான் போனேன். படமும் எடுத்தேன்.ஆனா.......)
இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்குனா பின்னூட்டக்காரகளுக்கு நல்லது.
Venkataramanan, thanks
Anon, thanks. 76 B from Koyambedu
Thulasigopal, Thank you so much.
Post a Comment