Friday, January 30, 2009

Headaches are Contagious


(Pencil sketch - KRTY)

தலைவலி என்பது தொற்று நோய் வகையைச் சார்ந்தது. ஆம் ! Unlike matter, Headaches can be created, destroyed and, of course, be effortlessly transformed to many forms.

உங்களுக்குத் தலைவலி இருக்கிறதா ? உங்கள் வலியின் தீவிரத்தைப் பொறுத்து உங்களைச் சுற்றி இருப்பவர்களை தலைவலி பற்றப்போகிறது என்பதை உணர்க.

தலைவலியை பொதுப்படையாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒரு வகை பின்னங்கழுத்திலோ மேல் முதுகிலோ, முகத்தில் இருக்கும் நரம்புகள் மூலமாகவோ, அல்லது பல்வேறு உடல் உபாதை காரணங்களால் உண்டாகும் உண்மையான வலி. இது பற்றி எழுத இதற்குமேல் எனக்குத் தெரியாது. இங்கே படிக்கவும்.

இன்னொரு வகை, இருபத்து ஓராம் நூற்றாண்டின் டென்ஷன்கள் அனைத்தும் தலையில் அழுத்துவதால் ஏற்படும் தலைவலி. உதாரணத்திற்கு என்னையே இங்கே குறிப்பிடுகிறேன்.

அனைவரும் வெறுக்கும் the so-called "Mechanical life" எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் காரணம் பெரும்பாலோனோருக்குப் பிடிக்காது என்பது. முக்கிய காரணம் routineல் உள்ள சுகம்.திங்களிலிருந்து வெள்ளி வரை எல்லாமே சமச்சீராக இருக்கும். அடுத்து என்ன என்பது எனக்குத் தெரியும்.

காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் விழிப்பு.. காலைக் கடன்கள்.. பின் கனிவு கொடுக்கும் நல்ல காப்பி.. கொஞ்சம் உடற்பயிற்சி.. "இந்த நாள் இனிய நாளா ?" என்று ஆபீஸ் இன்பாக்ஸைப் பார்ப்பது.. ப்ளாக் எழுதுவது.. எவ்வளவுதான் சீக்கிரம் விழித்தாலும் கடைசி நிமிடத்தில் அடித்துப்பிடித்து குளிப்பது.. ஊட்டிவிடப்படும் இட்லியை சுவைப்பது.. அப்பாவோடு வண்டியில் துரத்திப்பிடித்து ஆபீஸ் வேனுக்குள் புகுவது.. வேனில் கொஞ்சம் புத்தகம்.. கொஞ்சம் தூக்கம்.. ஆபிஸில் நுழைந்ததும் ஈமெயில், பின் தொலைபேசி விவாதங்கள்.. காப்பி.. அரட்டை.. வேலை.. மதிய உணவு.. அரட்டை.. நியூஸ் பேப்பர் வாசிப்பது.. வேலை.. காப்பி.. வேலை.. அரட்டை.. பின் ஏழு மணி வேனைப் பிடித்து வீடு நோக்கிப் பயணம்.. வீடு வந்ததும் சாப்பாடு.. கொஞ்சம் டி.வி.. கம்ப்யூட்டர்.. அப்புறம் தூக்கம். சுபம்.

இதில் ஒன்று மாறினாலும் தலைவலி சர்வ நிச்சயம்.

வேனைத் தவறவிட்டுவிட்டு பைக்கில் 29 கிலோமீட்டர் பயணம் செய்து வியர்த்து ஒழுகி களைத்துப்போய் ஆபிஸில் அமர்ந்து.. அங்கே ஏதாவது களேபரம் ஏற்கனவே அரங்கேறி இருந்தால்... ஆரம்பம்.. தலைவலி.

இந்தத் தலைவலி என்பது அமைதியற்ற (restlessness) காரணத்தால் ஏற்படுகிறது. நிஜம்மாகவே தலைவலிக்கிறதா என்றால், இல்லை. ஆனால், மூளை யோசிக்க மறுக்கிறது.. களைப்புக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்வதா.. போன் பேசுவதா.. ஈமெயில் படிப்பதா.. இப்படியெல்லாம் யோசிக்கக்கூட அவகாசம் இல்லாத நிலையில் தலையை சிலுப்பிவிட்டு இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு ஒன்றையும் யோசிக்காமல் உட்கார்ந்துகொள்ள வைக்கும்.. இந்தத் தலைவலி.

வீட்டிலும் சில சமயம் இப்படி நடப்பதுண்டு. இது எனக்கு நிகழ்வது போக, பல பேருக்கு நடக்கப் பார்த்ததுண்டு. இதில் விந்தையான விஷயம், இந்தத் தலைவலியின் தொற்றுதல்தான்.

நீங்கள் இந்தத் தலைவலியால் அவதிப்படுவதால், செய்ய மறக்கும், மறுக்கும் விஷயங்கள், சொதப்பும் விஷயங்கள் அடுத்தவரைப் பாதிக்கிறது. மேலும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை ignore செய்வதாலோ, எரிந்து விழுவதாலோ, கோபம் கொள்வதாலோ... வார்த்தைகளை தேவையின்றிக் கொட்டுவதாலோ... அடுத்தவர்களுக்கும் இந்தத் தலைவலி தொற்றிக்கொள்கிறது. It proliferates, further down. வைரஸ் மாதிரி பரவுகிறது..

உற்றுப்பார்த்தால், உங்களுடைய தலைவலி பலபேரின் வாழ்க்கைப் பாதைகளை மாற்றியிருக்கும். முக்கியமாக, ஏதாவது ஒரு அமைப்பின் வட்டத்தின் மத்தியில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் உங்கள் தலைவலியின் வெளிப்பாடு அதிர்வலை போலப் பரவுகிறது.

பல குடும்பச்சண்டைகளிலும் இந்தப் "பரஸ்பர தலைவலி பறிமாற்றம்"தான் முக்கிய காரணமாக அமைகிறது.

இதைப் போக்க என்ன வழி ?

டென்ஷனாக இருக்கும் போது ஒன்றிலிருந்து பத்துவரை தலைகீழாக எண்ணினாலும் ஒரு புண்ணியமும் இல்லை. இதையெல்லாம் மாற்ற முயல்வதும் வீண்.. நம் சுய இயல்பை மாற்ற முயலும் நமது அத்தனை முயற்சிகளையும் பைத்தியக்காரத்தனம் என்பதே என் கருத்து.

ஐந்து வருடங்கள் கழித்து மல்லாக்காகப்படுத்து விட்டத்தில் காற்றாடி சுற்றுவதைப் பார்த்தபடியே பழைய நினைவுகளை அசைபோடும்போது இந்த தலைவலி ரியாக்ஷன்கள் நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கப் பயன்படும்.

3 comments:

Anonymous said...

"ஐந்து வருடங்கள் கழித்து மல்லாக்காகப்படுத்து விட்டத்தில் காற்றாடி சுற்றுவதைப் பார்த்தபடியே பழைய நினைவுகளை அசைபோடும்போது இந்த தலைவலி ரியாக்ஷன்கள் நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கப் பயன்படும்"

Keerthi...Final touch is perfect.

Sowmya said...

Yen maatra vendum endra ennam..Maatrathirkku payan padathu..Maatra vendum enra enname maatrathi koduka iyalum..

Maaraamal irupathu maatram mattume !!

Theriathatha enna ungalukku !

Unknown said...

Ungalala mattum eppadi ippadi ellam yosika mudiyethu...chancey illai...keerthi