Sunday, June 21, 2009

"ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !"
- திங்கட்கிழமைகளை வெறுக்கும் கீர்த்திவாசன்.

என்ன வயதானாலும், இந்தத் திங்கள்கிழமைகள் வந்தால் வெறுப்பாக இருக்கிறது. எல்லா இனிமையான வாரங்களும் கசப்பான திங்களன்று ஆரம்பிப்பது முரண்.

பள்ளிக்கூடமாக இருந்தால், ஞாயிறு மாலையே ஒருவிதமான சோகம் ஆட்கொள்ளும். திங்களன்று காலை பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டு கொஞ்சம் அதிக நேரம் உள்ளே இருந்துவிட்டுவந்து அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே "அம்மா ! வயித்தை வலிக்கறது.." என்று சிவாஜி கணேசனின் தேவர்மகன் ஹார்ட் அட்டாக் லுக்கையெல்லாம் இமிடேட் செய்தாலும் "எல்லாம் சரியா போய்டும்.. நீ ஸ்கூலுக்குக் கிளம்பற வழியைப் பாரு" என்று அம்மா கௌண்டர்- அட்டாக் செய்துவிடுவாள். வாழ்வின் அத்தனை சோகங்களும் ஒரே நாளில் என்மீது அழுத்துவது போல அழுகை வரும். துக்கம் தொண்டையை அடைக்க பள்ளிக்கூடம் கிளம்புவேன்.

வயதில் முதிர்ச்சி வர வர, திங்கள்கிழமைகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வரும் என்று நினைத்தேன். ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது. அதுவும் ஒவ்வொரு திங்களும் அதன் கொடுமையின் உக்கிரம் அதிகமாவதை உணர்வது வேதனையின் உச்சக்கட்டம்.

சே !

9 comments:

பிச்சைப்பாத்திரம் said...

மாரடைப்பு பெரும்பாலும் திங்கட்கிழமைகளி்ல்தான் நிகழ்கிறது என்கிறது ஓர் ஆய்வு. :-)

Jeevan said...

Happy Sunday, Sad Monday!

பரத் said...

//ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது//
100% Unmai.

dagalti said...

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது

- from விடுமறை தரும் பூதம்
by ஞானக்கூத்தன்

Shreekanth said...

But usually you say that you like routine life..This is part of it...BTW why is that the site header alone is written in English

Shobana said...

Hmmm....maybe u have to think if u are happy in ur job! Seriously!

Harshi said...

Hi Keerthi,

I dunno how i landed up in your blog.
But was surprised to see that you hail from my 'home' town Villivakkam and you studied in St.Johns, which is my almamater too!!

The world is too small!!!!

Your blogs are wonderful and am sure you are a great fan of Sujata, again, just like me. I can see his flavor in your writings.

Keep blogging.

All the best....

Unknown said...

Netharsanamana unmai..@keerthi

Viji sollvathum unmai...sujathavin

flavour adthikamavey irukkum

Thanks,
Vas

Radhakrishnan said...

பேசாமல் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாள் இல்லைனு அறிவிச்சிடலாம்! எல்லா நாட்களும் உழைக்கனும்னு சொல்லிரலாம்.

வளைகுடா நாடுகளுக்குப் போனா இந்த திங்கள் வலி குறைஞ்சிடும்.

திங்கள் அன்று பலர் வேலைக்குச் செல்லவே விரும்புவதில்லை எனும் ஒரு ஆய்வு கூறுகிறது.

அருமையான பதிவு.