Friday, May 07, 2010
யாரடி நீ !
இன்றைக்கு எப்படியாவது அவளிடம் கேட்டுவிட வேண்டும். இரண்டரை வருடம் தவியாய்த் தவித்து.. அவளின் கவனத்தை ஈர்த்து, கண்ட மேனிக்கு இம்ப்ரெஸ் செய்திருக்கிறேன்.. எல்லாம் அவள் சம்மதத்திற்காக..அவளுக்கும் என் அனுகுமுறை பிடித்திருந்தது. அவள் "உம்" என்ற ஒற்றை வார்த்தையில் சம்மதம் தெரிவித்தால் போதும். வாழ்க்கை ஸுவர்க்கமாகும். புது அர்த்தம் பிறக்கும்..
ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது.. என்னதான் இரண்டு வருடப் பழக்கம் என்றாலும், இந்த விஷயம் கொஞ்சம் டெலிகேட், இல்லையா ? தைரியம் வேண்டும்.. முடிவு தெரியாமல் எவ்வளவு தூரம்தான் பயணிக்க முடியும் ?
தோள்களைக் குலுக்கி தைரியம் வரவழைத்துக் கொண்டேன்.. ஆமாம் என்றால் சந்தோஷம்.. இல்லை என்றால்... ? "தாவணி போனால் சல்வார் உள்ளதடா !!" என்ற பாடல் ஞாபகம் வந்தது.. அதானே !!
சாரதா சுப்ரமணியம் என்ற பெயர்ப்பலகை எழுதியிருந்த கதவில் மெதுவாக தட்டினேன்.
"யெஸ் ?" என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் உள்ளே வரச் சொன்னாள்.
"ஹை ! சாரதா.." மெதுவாக இளித்தேன்..
"வாட்ஸ் அப்.."..
இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வேன் ? எப்படி ஆரம்பிப்பேன்.. நாக்கு தழுதழுக்க ஆரம்பித்தது.. வெளியே போய்விடலாமா ?
"நத்திங் மச்.. !" என்று ஈனஸ்வரத்தில் சொன்னதில், அவள் கவனம் என் மேல் விழுந்தது.. புருவத்தை நெறித்து கூர்மையாகப் பார்த்தாள்..
"வெல்.. ! ஜஸ்ட் வாண்டட் டு நோ.. இஃப் ஐ ஹேவ் பீன் நாமினேட்டட் இன் திஸ் ப்ரமோஷன் சைக்கிள் ?"
கேட்டுவிட்டேன். அவள் ஒற்றை வார்த்தை பதிலில் இனி, வாழ்க்கை திசை மாறும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Well done. The posts are very good. I liked them. Provides variety.
T N Neelakantan
www.neel48.blogspot.com
Nice. I like the narration.
But you could have chosen something more appropriate than promotion. For one, I don't understand what's so "delicate" about being considered for promotion.
Thanks Neel.
@Manki, the delicate thing is asking if I'm being nominated.
"கேட்கத் தயக்கமாக இருந்தது".. என்னதான் இரண்டு வருடப் பழக்கம் என்றாலும், இந்த விஷயம் கொஞ்சம் டெலிகேட், இல்லையா ?
I've seen a lot of people hesitate to ask, because they think it is not right to ask. Whether that is right or wrong, i dont know.. but thats the way it is.
நன்றாக இருந்தது கீர்த்தி.
Good one buddy.
Good one.
Nothing much.. :D
Enjoyed the crispness !
Am following your space since 2007. Interesting write up, As usual .
Nice one! :)
kumudathla oru pakkam kadhai padicha madiri irundathu. uff..........
ok nee ketuta.. sarada subramaniam enna sonnanga???
Post a Comment