Saturday, June 19, 2010

பொம்மை படம்



பார்த்தாயிற்று.. IMAX 3D திரையரங்கில் பார்த்தாயிற்று.. அவ்வளவு ஒன்றும் அபாரமாக இல்லை என்றாலும், அச்சுப்பிச்சுத்தனமாக இல்லை..

இங்கே, நிறைய பேர் "ராவணன்" படத்துக்கு செல்ல ஆசைப்பட்டதாலும், நான் அதைப் பார்க்கக் கூடாது என்ற முடிவில் இருப்பதாலும், துணைக்கு யாரும் இல்லை என்றாலும், கஷ்டப்பட்டு, கொளுத்தும் வெய்யிலில் பஸ் பிடித்து, "Toy Story 3" பார்க்க திரையரங்கில் நுழைந்தேன். குழந்தைகளும், அவர்களைக் கூட்டிவந்த (அனேகமாக) பெற்றோரும் க்யூ கட்டி நின்று கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கடைசி வரிசையில், நடுவாந்தரத்தில் இடம் கிடைத்தது.. படம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

பக்கத்தில் க்யூட்டாக ஒரு சிறுமி உடகார்ந்து கொண்டு Ring Pop (மோதிரம் மாதிரி மாட்டிக்கொண்டு சப்பிச் சாப்பிடவேண்டிய லாலி பாப்) சப்பிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் அவள் தோப்பனார், என்னைப் பார்த்து, "Man, the tickets costing almost like a vacation.. !" என்றார். தலைக்கு பதினைந்து டாலர் என்ற கணக்கில் ஏழு பேரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ஒன்று தனித்தனியாக "சிங்கிள்"ஆக அலைகிறார்கள்.. இல்லையென்றால் ஒன்று கூடி வத வத என்று பெற்றுத் தள்ளுகிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் ஓடினால், அங்கிருந்த தகப்பன்கள் எல்லாடும் பெருமூச்சு விடுவார்களோ என்று எண்ணியபடியே, கொக்கொ கோலாவை உரிஞ்சினேன்.

பக்கத்து சிறுமி பேச ஆரம்பித்தாள். "i'm scared of 3d.. ya know.. they come closer to your face.." - குழந்தைகளின் பயம் எல்லாம் நமக்கு சிரிப்பாக இருந்தாலும், எங்கிருந்தோ ஒரு பரிதாப உணர்ச்சி சுரப்பது விந்தையாக இருக்கிறது.

"oh.. no.. sweety, you dont have to be scared.. it will be fun.. now, who's your favourite character ? woody ? or buzz light year ?"
"woody's sister, Jessie" என்றாள். அட, ஆமாம்லே.. பெண் குழந்தை அல்லவா ?

"i've seen toy story part 1.. and we have a dvd of part 2.. and we have come to see part 3.. will there be a part 4 ? Rey tells me there is a part 4.. Rey tells  me part 3 is very good.. is it good ?"
அவள் மழலையாகப் பேசவில்லை என்றாலும், அழகாக இருந்தது.. என்னுடைய அக்காவின் குழந்தை தேஜாவின் ஞாபகம் வந்தது..

"Yes.. it is going to be good.. you are going to love it.. aren't you ?" என்றேன்.. அப்பா பாப் கார்ன் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்.

டிரெய்லர் போட ஆரம்பித்தார்கள். நான் கோக் வைத்திருப்பதைப் பார்த்து, அவள் தன் இன்னொரு கையில் இருந்த செர்ரி ட்ரிங்கை காண்பித்து, அதன் ஸ்ட்ராவையும் ring popபையும் ஒன்றாக வாய்க்குள் விட்டபடி, "See, I can do both.." என்றாள்.  "Great !!"  என்றபடி டிரெய்லரில் மூழ்கினேன்.

"Toy Story 3"க்கு முன் "Day & Night" என்ற குறும்படம் போட்டார்கள். அப்போதும் பேசிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. கஷ்டப்பட்டு கவனிக்காமல் இருந்தேன். குறும்படம் அபாரமாக இருந்தது. 2டியையும் 3டியையும் ஒன்றாகக் கலந்து நமக்கு சுகமாக+ ரொம்பவும் வித்தியாசமாகக் கதை சொல்கிறார்கள். Simply wonderful. கூடிய சீக்கிரம் யூட்யூபில் வரும்.. அப்போது லின்குகிறேன்.

படம் ஆரம்பித்தது. பக்கத்து சிறுமி 3D கண்ணாடி போடாமல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தந்தை அதை கவனிக்கவில்லை.. கண்ணை இடுக்கி சிரமப்பட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
"Wear your glasses, dear..." என்றேன்..
"No, im scared.. i dont want to see this movie" என்றாள்.

எனக்கு இதில் ஏதாவது கடமை இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். இந்தக் குழந்தை யாரென்றே தெரியாது. அவள் தலையை லேசாகக் கோதிவிட்டுவிட்டு.. "Dont be scared... it will be fun.. it will be colorful.. go ahead.. " என்று சொல்லும்போது Woody கதாபாத்திரம் பேச ஆரம்பித்திருந்தது.. அப்பொழுதுதான் இயல்பான அக்கரைக்கும் போலித்தனமான அக்கரைக்கும் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. கவனம் படத்தின் மீது பதிந்து அதில் மூழ்கினேன்.

பத்து வருடத்துக்கு முன் பார்த்த படம் என்றாலும், பசுமையான நினைவுகள் செட்டென நிகழ்வுக்கு வந்தது. சுவாரஸியமான கதை.. விறு விறுப்பான திரைக்கதை.. துல்லியமான வடிவங்கள், கண்ணைப் பறிக்கும் நிறங்கள்.. (3டி - மன்னிக்கவும், சுத்த வேஸ்ட்) என வழக்கமான பிக்ஸார் பட அம்ஸங்கள் இதிலும். சுகானுபாவம். குழந்தையாக மாறி ரசித்து, சிரித்து, (கொஞ்சமாக) அதிசயித்து மகிழ்ந்திருந்தேன்.

முதல் இரண்டு படங்களைப் பார்த்தவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு கதை புரியாமல் போக வாய்ப்புள்ளது.

ஒரு பெட்டி நிறைய பொம்மைகள் வைத்து விளையாடி வந்த "Andy" காலேஜுக்கு செல்லும் பருவம் வந்துவிட்டதால், பரனுக்கு செல்ல பொட்டலம் கட்டப்படுகிறது. தவறுதலாக, அந்த பொம்மைகள் ஒரு டே கேர் சென்டருக்கு தானமாக வழங்கப்படுகிறது. அங்கே அந்த பொம்மைகள் படும் அவஸ்தையும், வீடு திரும்ப அந்த பொம்மைகள் போடும் திட்டமும் தான் கதை.

ஆனால் தொய்வில்லாமல் நகர்கிறது.  ஜாலியாக !

படம் வழக்கமான சுபத்துடன் முடிந்தது. பக்கத்து சீட்டு சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம் !

2 comments:

Unknown said...

உங்கள் reviewvirkaga காத்திருக்கிறேன்
ராவணன் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்னுடைய விமர்சனம் http://www.clapsandboos.com/movies/raavanan

mohan said...

did the animation came very well?