Wednesday, July 28, 2010
அமுக்குடா ஆக்ஸலேட்டர.. !
படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்.. மயக்கத்திலிருந்து விடுபட்ட உணர்வு.. அத்தனை நேரம் கிராமத்தில் இருந்துவிட்டு வந்த "கனவு கலைந்த" நிலை. தெரிந்தோ தெரியாமலோ,.. ஒரு அன் - ஆர்தொடாக்ஸ் படம். சூப்பர்.
சினிமாவின் "கிராமப் படம்" ஃபார்முலாவை உடைத்தெரிந்து பல படங்கள் வர ஆரம்பித்துள்ளன.. எல்லாவற்றையும் பார்த்ததில்லை என்பதனால் அவற்றோடு இந்தப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் தெளிவு என்னிடத்தில் இல்லை.
இந்தப் படத்தில் பல பேரின் நடிப்பு, அபாரம்.. unfortunately overlook செய்யப்படும். அதிகபட்சம் விகடனில் படத்துடன் பேட்டி வரும். அவ்வளவே..
கதை... தெரிந்தகதை.. சுமாராக ஊகிக்கக்கூடிய கதை.. என்றாலும் ஊகிக்க விடாமல், கதையோடு கவனம் சிதறாமல் கூட்டிச்செல்லும் திரைக்கதை.. க்ளாஸ் ! இன்டர்வெல் இல்லாமல் கூட பார்க்கலாம்.. (பாட்டு மட்டும் கொஞ்சம் கைகொடுத்திருந்தால்)
எனக்கு வியப்பாக இருப்பது.. இந்தப் படத்தில் அனாயாசமாக + அனிச்சையாக இருக்கும் perfections. எல்லா கதாபாத்திரங்களையும் நாமே எடை போடுகிறோம்.. அவர்களோடு பழகி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்கிறோம்.. The movie is open.. and lets us to be judgemental. யாரையும் "நல்லவன்" "கெட்டவன்" என்று சாயம்போட்டு, BGM கொடுத்து பில்டப் தரவில்லை.. நாமாக தெரிந்துகொள்கிறோம்..மெல்லிதான காமெடி இழையோடியபடியே நகரும் இடத்தில், கஞ்சா கறுப்பு நுழையும் போது இடியுடன் கூடிய மழை.. வெல் தாட் !
A. சற்குணம் - இயக்குனரின் முதல் படம். அவருக்கு ஒரு ஷொட்டு ! ஹீரோ.. ஹீரோயின் தவிர்த்த அத்தனை நடிகர்களும் அபாரம்.. ஒளிப்பதிவு ப்ரமாதம்.. எடிட்டிங் - கச்சிதம்.. இசை - சுமார்.. கதை - சுமார்.. திரைக்கதை - ஓஹோ !
இயக்குனர்.. அடுத்த படத்தை "காதல்" இல்லாமல் எடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பேன்.. நம்ம தமிழ் சினிமா உடனடியாக வெளியே வரவேண்டிய விஷயங்கள் - காதல், கிறுக்கு (அ) பொறுக்கி ஹீரோ சப்ஜெக்டுகள்...
நம்ம ஊரில் "களவானி" இன்னும் ஓடுகிறதா ? நன்றாக ?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இன்னும் சில இடங்களில் ஒடுகிறது கீர்த்தி. நேற்று தான் இப்படத்தை பார்த்தேன். பாட்டு நன்றாக இருந்திருந்தால் இன்னும் ஹி்ட் ஆகியிருந்திருக்கும்
Post a Comment