நல்லவேளையாக இருபத்தைந்து டாலர் செலவழிக்காமல், இரண்டாம் நாளே இருநூறு ரூபாயில் "எந்திரன்" பார்த்தாகிவிட்டது.
சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கர் என பெயர்ப்பட்டியல் பூராவும் பெருஞ்சம்பளக்காரர்கள். தமிழ்த் திரை உலகின் வர்த்தகவட்டத்தை விஸ்தாரமாக்கக்கூடிய ப்ரம்மாண்டம். 2007ன் சிவாஜியைக் காட்டிலும் பல மடங்கு பரபரப்பு.. இப்படி படம் வெளிவருவதற்கு முன்னரே வெற்றியின் வாசனையுடன் கம்பீரமாக வெளியாயிருக்கிறது - எந்திரன்.
எதிர்த்த ரோவின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ரோமங்கள் சிலிர்த்தெழுந்து அனிச்சையாக விசிலடித்து கைதட்டி ரசிக்கும் ஒரு ரஜினி ரசிகனுக்கும், "ரஜினி படம்னா குழந்தைகளோட போலாம்" என்ற எண்ணத்தில் குடும்ப்பத்தோடு வந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கி சுவாரஸ்யங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் "Mr. வெகுஜன"த்திற்கும், "அட.. இது பைசென்டினியல் மேன் உல்டா... அ வெரி பேட் ஐ ரோபோ ரிப் ஆஃப்.." என தன் சுய அறிவுத்திறனை அளந்துபார்க்கும் விக்கிப்பீடியா ப்ரஜைக்கும் - ஒரு உண்மையான சத்திய சோதனை "ரோபோ" என்கிற "எந்திரன்".
விஞ்ஞானி ரஜினி படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திற்குள் ரோபோவை உருவாக்கி முடிக்கிறார்.. அது ஒரு ரோபோ.. அதற்கு எல்லா மொழிகளும் தெரியும்.. நடனம், நாட்டியம், ஓவியம், சமையல், சண்டை - எல்லாம் தெரியும் - மனிதன் பணிக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் - என்று இத்தனை நாட்களாக குறைத்து மதிப்பிட்டிருந்த "சராசரி" தமிழ் ஆடியன்ஸுக்கு கற்றுக்கொடுப்பதுபோல் சொல்லாமல், "இதெல்லாம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிஞ்சது தானே ?" என்பதுபோல் காண்பிக்கிறார்கள். "இதெல்லாம் சூப்பரா+ சுலுவா புரிஞ்சுது தலைவா.. ! நீ மேட்டருக்கு வா !!!" என்று ரசிகன் அடுத்த லெவலுக்கு டக்கென்று தாவிச்சென்று கைதட்ட கைகளை ரெடியாக வைத்துக்கொண்டு நிற்கிறான்.
இங்கேதான் சிக்கல். படத்தில் விஷயம் இவ்வளவுதான்.
காலை உதைத்து தொடையைத் தட்டி தலைமுடியில் தெறித்துப் பறக்கும் நீர்த்துளிகளுக்கு மத்தியில் கண்களில் வெறியுடன் "மலே டா !" என்று சவால் விட்டு REVENGE - பழிவாங்கல்படலம் எடுக்க இன்டெர்வெல் விடும் ரஜினிகாந்த் படம் - எந்திரன் இல்லை.
ரோபோ ரஜினிக்கு "உணர்ச்சிகள்" கற்பிக்கப்பட்டவுடன் விஞ்ஞானி ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பிக்கிறது. சோ, அது வில்லனாகின்றது. ப்ரச்சனை என்னவென்றால், நாம் இனிமேல் அந்த வில்லன் ரோபோவை கைதட்டி ஆரவாரப்படுத்தவேண்டும் என்ற "சொல்லப்படாத" நிர்பந்தம் நம்மை "ethical dilemma"வில் கொண்டுவிடுகிறது.
தியேட்டரில் குழப்பம் ஆரம்பிப்பதும் இங்கேதான். சில பேர் கைதட்டுகிறார்கள்... சில பேர் தயங்குகிறார்கள்.. Not well established !! விஞ்ஞானி ரஜினி - அதாவது நல்ல ரஜினியும் போஷாக்கான ஹீரோவாக இல்லை.. சோகமாவே + சோர்வாகவே காணப்படுகிறார். கெட்ட ரஜினி செய்யும் ரகளைகள், கொலைகள், கோரத்தாண்டவங்களுக்கு கைதட்டுவது நம் பண்பாட்டில் இல்லை.. அட.. ஒரு ரஜினி படத்துக்கு வந்துவிட்டு கைதட்டவில்லை என்றால் எப்படி.. ? ஸ்டைல், மேனரிசம், பன்ச் டையலாக் என எல்லாமே கவனமாக அடக்கிவாசிக்கப்பட்டிருப்பதால் திருவிழாவில் கோலாகலம் குறைவு. Just not a Rajinikanth style.
படத்தின் முன்பாதி கவனிக்கத்தக்கது. வசனங்களும், ஒப்பனைகளும், உடைகளும் ரிச் ! நல்லத்தனமாக இருக்கும் வரை ரோபோ ரஜினியின் காஸ்ட்யூம்கள் அட்டகாசம்.. கடந்த இருபது வருடங்களில் இளமையான ரஜினியின் தோற்றம் - ரோபோ. சந்தானம் என்ன முயற்சி செய்தும் பெரிய காமெடி எதுவும் இல்லை.. சில இடங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அட்டகாசம். பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - ம்ம்ம்ம்.. ஓகே !!
முன்பாதி - கொஞ்சம் நல்ல கதை என்றால் பின்பாதி - வதை. ரொம்பவும் கொஞ்சமாகவே ரஜினியை ரசிக்கமுடிகிறது.. அதாவது வில்லன் ரஜினியை.. நூற்றுக்கணக்கில் ரஜினியை திரையில் தோன்றவிட்டு கதையை இழுத்தடிக்கிறார்கள். விறைப்பாகத் தோன்றும் ரஜினியின் டைட் க்ளோசப் காட்சிகள் முன்பாதியில் வெகு அழகாக காண்பிக்கப்பட்ட ரஜினிக்கு த்ரிஷ்டி.
கடைசி சண்டைக் காட்சி - பேத்தல். Sphere formation, Snake formation என்று ஹை ஸ்கூல் மாஸ் ட்ரில் கணக்காக நூற்றுக்கணக்கான ரஜினி ரோபாட்டுகள் சண்டை போடுவது அறுபது செக்கண்டுகளுக்கு மேல் நீடிப்பதால் கொட்டாவி விட வைக்கிறது. அது சரி.. ஷங்கர் படம் தானே.. ! கடைசியில் ரோபோ ரஜினி தன்னைத் தானே டிஸ்மேன்டில் செய்து கொள்வதுடன் படம் முடிகின்றது.. அட்லீஸ்ட் ஒரு அரை மணி நேரம் லேட்டாக !
ரஜினிகாந்த் படம் என்றால் என்ன ? ரஜினி நல்லவராக காண்பிக்கப்பட வேண்டும்.. பின், அவருக்கு கெட்டது நடக்க வேண்டும்.. பின், அவர் சோர்விலிருந்து சிலிர்த்தெழுந்து பழிவாங்கி, "நல்லது செய்தால் நல்லது நடக்கும்" என்ற உயர் தத்துவத்தை விளக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்.. சிவாஜி மாதிரி.. ஆனால், இன்னும் பவர்ஃபுல்லாக..
எந்திரன்.. ரஜினிக்காக செய்யப்பட்ட கதையாக எனக்குத் தோன்றவில்லை. ரஜினிக்கு இன்னும் மெருகேற்ற வேண்டும்..எந்த ரோலும் - ஹீரோவாகட்டும், வில்லனாகட்டும், didn't have the weights for Rajinikanth. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதையை / படத்தை மாபெரும் வெற்றியாக்கக்கூடிய ஒரே லேபிள் - ரஜினிகாந்த்.
டாட்.
6 comments:
No one could have done the negative role better than Rajini. I too felt the movie was a little long but that is acceptable :) . And the sphere, snake formations are still a wow factor for an average joe so freeya vidu...
Be very frank and true in your reply. If this was a Kamal Hasan movie, would you have given a review in the same way?
Be Honest in answering.
Arun.
Personally i liked the robo, especially emoted version. the 'scientist' Rajini dint stand a chance. Only thing that surprised me was that he ran away from Kalabhavan Mani which is atypical of a Rajini movie in the last 2 decades (not one since Rajadhi Raja).
For the kind of director and lead actor involved, especially after their previous outing Sivaji, I expected the movie to suck. But turned out to be a complete surprise.
Am not sure what the guy in front of you felt, but it certainly satisfied the rajini fan in me and my wife. and felt the 300 buck rip-off at Mayajaal worth it. ofcourse it wouldve been a even bigger ripoff had i been on the other side of the pond (Atlantic).
-narayanan
BTW..the final CGI sequences were an obvious drag.
Have a question for you...did you really buy the hype ? and what you were expecting ?
I certainly dint especially after Baba through Sivaji experiences from Rajini and the long string of 'lanjam' movies from Shankar.
if kamal is acted in this movie, u have given the comment like " kamal tried to bring tamil cinema to ulga cinema level".
this is like one village guy first time going to USA....Oru tamilana... we have to support his effort....for 150-200 crore we have to produce only china product..not original.....
Keerthi..this is bad.If kamal did this u wuldnt have given a review like this.I aint a Rajini fan but this is really gud.Atleast instead of junk tamil cinema has started trying something new...be true in ur review boss...
Post a Comment