Wednesday, June 06, 2007

சில நேரங்களில் சில மனிதர்கள்


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசித்துவிட்டு, எல்லா கோபுரங்களையும் பல கோணங்களில் படம் எடுத்த திருப்தியுடன் வாசல் கோபுரம் வரை வந்தாயிற்று. பட்டை நாமத்தை போட்டுக்கொண்டு அங்கே ஒரு யானை நின்று கொண்டிருந்தது. "பலே வெள்ளையத்தேவா !" என்று கூட்டுக்குள் வைத்துவிட்ட என் கேமராவை வெளியே எடுத்தேன்.

எங்கிருந்தோ வந்தார் ஒரு மடிசார் கட்டிய ஐயங்கார் மாமி. அவசர அவசரமாக கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தார். சடாரென்று என்னைப்ப்பார்த்து திரும்பி "இந்த பொண்ணை ஒரு ஃபோட்டோ எடு" என்றார். அந்தக் குரலில் அதிகாரம் தொணித்தது. யோசிக்கும் வினாடிக்குள் நானும் ஃபோட்டோ எடுத்து விட்டேன். அச்சிறுமி தன்னை ஃபோட்டோ எடுக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லை. க்ளிக் சத்தம் கேட்டவுடன் மாமியும் அச்சிறுமியும் விறு விறு என்று கோயிலுக்குள் விரைந்து சென்று விட்டனர்.

"அட்ரெஸ் வாங்கிண்டயா ?" என்றாள் என் அம்மா.. அப்போது தான் நான் சுயநினைவுக்கு வந்தேன். நான் எதற்காக ஃபோட்டோ எடுத்தேன். யாரை எடுத்தேன் ? ஒன்றும் புரியவில்லை. அந்த மாமியின் முகம் துளி கூட நினைவில் இல்லை. "அட்ரஸா ?" என்று கேனத்தனமாக முழித்தேன்....

"ஃபோட்டோ எப்படி வந்திருக்குன்னு காமிச்சியோ ?" என்றாள். "ம்ம்ம்ம்... இல்லையே !"..
பின் எதற்காக ? எதுவும் புரியவில்லை.. வீட்டுக்கு வந்து ஆற அமர ஃபோட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.. இந்தப் படம் ஏதோ சொல்வது போலே உணர்கிறேன்.. என்ன என்றுதான் புரியவில்லை...

4 comments:

narayanan said...

paavama muzhikkudhu andha ponnu.

KB said...

I don't know why... but this photo somehow reminds me of Tom Hanks from 'The Terminal'!

Sirensongs said...

This is a fantastic capture.
Please, join us at the 50 Million Missing project on Flickr.com, and add this lovely portrait. The project is dedicated to raising awareness of the female foeticide phenomenon throughout India.
http://www.flickr.com/groups/50_million_missing

Anonymous said...

good pic....