Sunday, June 10, 2007
கவுத்துட்டியேப்பா அல் பசினோ !
காசி விக்ரம் போல் கண்ணை எக்கச்சக்கமாய் இம்சிக்காமல், குருட்டுக் கண்ணாடி போட்டுக் கொண்டு கையால் துழாவாமல் குருடராக நடிக்க முடியுமா ?
நான் கும்பிடும் வெகு சில கடவுள்களில் ஒரு கடவுளான அல் பசினோவால் முடியும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களை ஆச்சர்யப்பட வைப்பார். "மெர்சன்ட் ஓஃப் வெனிஸ்" படத்தில் க்ளைமேக்ஸ் முடிந்து எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நின்றுகொண்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், ஹய்ய்யோ !! நாலே நாலு ரியாக்ஷன் மட்டும் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டும் விஜய், அஜித் இவர் படங்களை இம்பொஸிஷன் எழுதுவதுபோல் பத்துப் பதினைந்து தடவை திரும்பத் திரும்ப பார்க்கலாம்.
உலகம் முழுவதும் போற்றும் இந்தக் கலைஞர், ஏழு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் கிடைக்காமல் எட்டாவது முறைதான் "ஸென்ட் ஆஃப் வுமன்" படத்திற்காக ஆஸ்கார் வென்றார்.
இந்தக் கடவுளை தரிசிக்க "ஓஷன்'ஸ் தர்டீன்" சென்றிருந்தேன். சம்மட்டியால் ஓங்கி பின்னந்தலையில் அடித்தது போன்ற உணர்வுடன் வெளியே வந்தேன். அடப்பாவிகளா. தமிழ்ப்படம் பார்த்து ஹாலிவுட் கெட்டுப்போய் விட்டதா என்ன ? உலக மகா த்ராபை ப்ளஸ் அபத்தம்.
இந்தப்படத்தை விமர்சனம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. படிக்க விரும்புவோர், இங்கே படிக்கவும். வெகு நாளாக எதிர்பார்த்த ஒரு படமும், ஒரு நடிகரும் என்னை டிஸ்ஸப்பாய்ன்ட் செய்த துயரத்தில் நான் இருக்கிறேன். ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறாராம் அல் பசினோ. நடிக்கக் கூடிய வாய்ப்பே இல்லாத கதாபாத்திரத்தில் வீணடிக்கப் பட்டிருக்கிறார்.
அடப்போங்கப்பா.. இனி நாம் காத்திருக்க வேண்டிய அடுத்த படம் "Richteous Kill". இதில் இவருடன் இணைபவர், ராபர்ட் டீ நீரோ. இரண்டு பெரிய தலைகளும் சேர்வது மட்டும் இல்லை, இவர்களுடன் இணைந்துள்ள குழுவும் கலக்கலான வேலைகள் செய்தவர்கள். 2008 வரை காத்திருப்போம்.
அதுவரை தசாவதாரம் பார்க்கலாம்.
பி.கு. - இப்பதிவில் நீங்கள் காண்பது "ஸென்ட் ஆஃப் வுமன்" படத்தில் குருடராக நடித்த அல் பசினோ ஆடும் டேங்கோ நடனம். காணக் கண் கோடி வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Al Pacino vai Alpathanamaaga kaamithu vittargal :)
avlo dubakur padama ?
sreekanth, merchant of venice paarthutte illa ?
narayanan, semma mokkai da
ஏனுங்கோ, Sequel of sequel எல்லாம் பார்த்துட்டு வருத்தப்படலாமா? ஓசன் 11 - சூப்பர், 12ஏ சுமார்தான், 13ஐ அல்பாச்சினோவுக்காகப் பார்க்கறதுன்னா, பார்த்துட்டு கமுக்கமா இருந்துட வேண்டியது தானே. படம் நல்லா இருக்குன்னு எல்லாம் எதிர் பார்த்தா எப்படி?!
Post a Comment