ஸ்ரீவத்ஸன் முரளி "ரஜினி வெறியர்களுக்கு மட்டும்தான் சிவாஜி பிடிக்கும்" என்கிறார். அடுத்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று ஊகிக்கும் மேதமை அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ரஜினி பிடிக்காதவர்கள் படம் பார்த்தால் என்ன தோன்றும் என்று அளவிடும் அளவிற்கு தமிழ் ரசிகர்கள் தெளிவானவர்களா என்ன ? குப்பைகளை கோபுரத்தில் வைத்தவர்கள், பொக்கிஷம் போன்ற படங்களை தூக்கிக் கடாசியவர்கள், தமிழர்கள்.
ப்ரபு கார்த்திக் "அறுபது கோடி செலவழித்த தயாரிப்பாளர், நல்ல கதைக்கு அதை செலவு செய்திருக்கலாம்" என்பது போல சொல்லியிருக்கிறார். "சினிமா ஒரு பொழுதுபோக்கு என்று சொல்பவர்களின் வாயை மூட ஆசை" என்றும் கூறியிருக்கிறார். சினிமா பொழுதுபோக்கா, கலையா ? இவற்றை விட முக்கியமாக சினிமா ஒரு வியாபாரம், தொழில். Show Business. வியாபார ரீதியாக படம் வென்றாகிவிட்டது. தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒவ்வொருவரையும் இணைப்பது அசாத்தியமான காரியம். இங்கே அமர்ந்து பார்பதற்கு எளிதாகத் தோன்றலாம்.. ஆனால், அதை முடித்துக்காட்ட இவ்வளவு பணம் தேவைப்படுகிறது. ஆனால் நல்ல கதை கிடைக்காமல் போனது தயாரிப்பாளரின் தவறுதான்.
இன்னும் பலப்பல விமர்சனங்கள் சிவாஜியை சுற்றி....
சிலர் தத்துவம் உதிர்க்கின்றனர். "எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு போனால் படம் நன்றாய் இருப்பது போலத் தெரியும்".. அதெப்படி எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது ? காலை எழுந்தவுடன் அரை டம்ப்ளர் எதிர்பார்ப்பைக் குடிக்கிறோமா என்ன, அதை நிறுத்திக் கொள்வதற்கு ? சுத்தப் பைத்தியக்காரத்தனமான வாதம்.. நீங்கள் நினைக்கும் வண்ணம் எதிர்பார்ப்புகளை ஏற்றவோ இறக்கவோ முடியாது. ஊருக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்..
தமிழ் சினிமா, குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு உருப்படாது. பொறுக்கித்தனமாக படம் எடுக்கும் இயக்குனர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு விட்டோம். இனி சில காலங்கள் பொறுந்தாக் காமம்தான் திரையில் நிற்கும். அத்தி பூத்தாற்போல் வரும் நல்ல படங்களின் இயக்குனர்களும் அடுத்த படத்தில் சாயம் வெளுத்து "சரக்கு தீர்ந்து போச்சு" என்று சொல்லுவர். "வெகுஜன இரசனை" என்ற வகுத்தலுக்குள் நுழையும் படங்கள் வெகு சிலவாகவே இருக்கும்.
சிவாஜி அப்படிப்பட்ட ஒரு படம் தான். நான் இன்னும் பார்க்கவில்லை. கதை தெரியாது. ரஜினி இரசிகன் இல்லை. ஆனால் எவ்வளவு கேனத்தனமான படமாக இருந்தாலும் "நல்லது செய்பவர்க்கு நல்லது நடக்கும்" என்று கூறும் படமாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் படங்கள் பெரும்பாலானவை இப்படிப்பட்ட படங்களே. தைரியமாக அம்மா அப்பவை அழைத்துக் கொண்டு சென்று படம் பார்க்கலாம். "கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு !" என்றோ.. "செக்ஸ் உணர்வு எல்லாருக்கும் வர்ரது தான்" என்று உணர்ச்சிகளை வியாபாரம் செய்யும் படமாக இருக்காது. வேளச்சேரி பாலு மெட்ரோப்ளாகில் எழுதியுள்ளதில் "When I came out, I asked my son how was the movie. He said any number of times this movie can be seen. That is the magic of Rajnikanth".
இதில் ஸ்ரீவத்ஸனும், ப்ரபு கார்த்திக்கும், ஏனைய பிறரும் முக்கியமாகச் சாடவேண்டியவை, செய்தி நிறுவனங்கள் சிவாஜிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை. CNN IBN, NDTV, Headlines Today முதற்கொண்டு நம்ம ஊர் சேனல்கள் வரை படம் வெளிவரும் இரண்டு தினம் முன்னரே செய்தி வாசிப்பதை நிறுத்தி விட்டனர். ஓமன் நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி ஐம்பது உயிர்களை பலி கொண்ட "கோனு" சூறாவளி பற்றி ஒரு செய்தியும் பார்க்கவில்லை. ஆனால் "அமிதாப் பச்சன் பெரியவரா ? ரஜினிகாந்த் பெரியவரா ?" என்று அனாவசியமான அலசல், ரஜினிகாந்தின் பேட்டி, ஷங்கரின் பேட்டி, ரசிகர்கள் பேட்டி என்று ஒரு சினிமா செய்தி நிறுவனமாகவே செயல்பட்டது வேதனையான விஷயம்.
ஆனால் ஒரு விஷயம்.. Sivaji could have been a beginning for a lot of good things to come. பலப் பல திரையரங்குகளில் வெளியிட்டாகிவிட்டது. மூன்று மாதங்களில் சென்னை முழுவதும் பார்த்தாகிவிடும். படத்தை தியேட்டரைவிட்டு கடாசிவிட்டு, டி.வி.டி யில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். மற்றைய படங்கள் இதே தொழில்முறையை பின்பற்றினால் Home DVD கலாச்சாரம் தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது.. ஆனால் கலைஞர் டி.வி. இப்படத்தை வாங்கிவிட்டது என்று செய்தி. போச்சு !
சிவாஜி படம் பார்த்துவிட்டு மற்றதை எழுதுகிறேன். சென்ற வாரம் கிடைத்த டிக்கெட்டை வேலை காரணமாக கோட்டைவிட்டதால், இன்னும் டிக்கெட் கிடைக்காமல் திணறுகிறேன். பார்க்கலாம், இந்த வாரமாவது கிடைக்கிறதா என்று.
12 comments:
Panakkaran... pinpu Aezhai... pin Panakkaran.
Style .. Style... Romba Style..
ithaithaane rasigargal ethirparkirargal rajniyidam.. Athu Sivaji padathil irukiradhu!!!
Balaabhishagamum, Thenaabhishegamum matrum pala pala Abhishegamum undu ivarku...
Adutha velai sapida vazhi illai Thamilanuku!!!
moondru mudichu, mullum malarum rajni avargaluku thevai illai...
Padam paarunga bossu...
sollunga unga comment aaa!!!!
Rajini Oru Phenomenon. This is more of a Rajini Film than Shankar Film.
Major Minus is Music. ARR has done a good job. But Deva-oda Kuthu Paatu would have been lot better.
Also the starting music of SUPERSTAR is not all that appealing.
Neat Family Entertainer.
Thanks for mentioning Gonu in the post. By the way death toll is near to 100 and not 50. FYI
Keerthi,
reviews have been very subjective. I have seen Rajini fans disliking Sivaji and Kamal fans liking the movie for what it was too.
I havent watched it yet, will surely do for the theater experience. Dont feel worth watching on DVD. I watched Chandramukhi first day second show, I didnt feel like watching the movie again. I should mention I've been a Rajini fan from childhood.
Naanum Rajini Fan illai... Aana Rajini na pidikkum.Nammalakku vendiyadhu entertainment. Endha cinema kaaranum social worker illai. It is a product of high quality that he sells in the market among other competitiors. May it be Kamal or Mani or ARR. All work for money and strive hard to deliver better product than others. Buy it is one's wish.
Sreekanth,
"Endha cinema kaaranum social worker illai. It is a product of high quality that he sells in the market among other competitiors."
i think we have only few producers who can spend more crores for making one movie. (AVM, AM Ratnam, Oscar Ravi) in that case, how can others make a movie and competite with big producers. for example, i can not fight with Mike Tyson.
now only our people started accepting movies like Kanda naal mudhal, ullam ketkume, mozhi and etc..
Sivaji will make much difference in cinema industry also tamil fans.
showing it in all the theatres in chennai and blocking other movies... i dont think its good for movie industry...
Raj,
Ultimately all want to make money. Theatrs would want to make money and they take Rajini's movie which will make fast money than any other. So nothing is good or bad. This is a phase which will change.
Yes correct Shreekanth. Everybody wants to make money. middle class producers are having few movies in hand and they dont get theatres for coming 3 or 4 months. they need to pay interest for their debt..
Releasing in all theatres and making more money in few days.
Anyway Rajni fans are having lots of fun. They are enjoying like anything....
I want to save money forget making money-
So..what do I do ?
Watch it free on the NET?
Wait and buy the DVDwhen it comes out?
Wait till the ticket prices go down??
Can you advise please?
>>"சினிமா ஒரு பொழுதுபோக்கு என்று சொல்பவர்களின் வாயை மூட ஆசை"
Keerthi let me clarify. All i meant to say was, this is not entertainment. Entertainment ku padam parkanum na poi Chennai 28 paaru.
This is the most expensive, brilliantly choroeographed, spectacularly shot, superbly edited drivel in recent times.
And this movie is hyped bcos it has one actor and one director.
The thing is by calling movies like this as entertainers, we are insulting the really entertaining movies and setting ourselves for crappier movies in the days to come.
Yes, cinema business dhaan and ennoda review kooda oru yemaandha consumer oda review dhaan...
Edukku thana ithanai arpattam ellam...What did Shankar do for a film like this for two years...I could understand if Rajinkanth has to work hard and change his get up...to come in different get ups...make ups taking 5 hours or more...nothging like it..just different wigs will do the trick...You just made a repeat of mudhalvan combined with gentleman...Idula Sujatha vera waste pani irrukinga...Rehman onumey kezhikalai intha padathika...Nama Tamil cinema orupadathu...You could make a movie like Shivaji and earn crores of rupees...but these so called Tamil cinema goers will not watch a movie like anbe sivam in theatre...same crowd will watch the movie when telecast in TV and claim "what a movie"...Vazkha Tamil Cinema...Valarga Sivaji pola padam parkum rasigargal...
Regards
Vas Shankar
Die Hard 4.0 - Bruce
When the press asked him...
Press : Do you ever feel that you are getting too old to do all the action and fight scenes?
Bruce : "Not yet, not yet. I'd probably do 'Die Hard 5,'but it's more about the script than anything else. You have to have a great story and idea first, so I always think about that before I worry about doing anything too physical."
http://www.reuters.com/article/lifestyleMolt/idUSN2638105820070626?src=062607_1904_ARTICLE_PROMO_also_on_reuters
He needs a great story.
mm.. but here style....
ayyooo hayyo!!!!
Post a Comment