Saturday, June 14, 2008

Signs

ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் சமேத ஸ்ரீ சௌம்ய தாமோதரப்பெருமாள் கோயிலின் வாசலில் காடுவெட்டி கோவிந்தராஜன் ஒரு மீட்டிங் போட்டிருந்தார்.

"பகுத்தறிவு என்பது தமிளனின் அடையாளம். எங்கள் தன்மானத்தலைவர் சொன்னது போல கடவுளைக் கும்பிடுபவன் அயோக்கியன். மூட நம்பிக்கைங்க நம்மள மூளை மழுங்க வைக்குது. எதுக்கெடுத்தாலும் சாங்க்யம் சம்பரதாயம் பாத்து பாத்து மனுசனைப் பாக்காம விட்டீங்களேடா. மனிதாபிமானம்தான் தமிளனின் அடையாளம். சொம்மாங்காட்டியும் மூட நம்பிக்கை பார்க்கறது முட்டாள்தனமான செயல் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."

அப்பொழுது பார்த்து கோயில் மணி அடித்தது.

"பாருங்க !! நான் சொன்னது சரின்னு சொன்னா மாதிரி மணி அடிக்குது !!" என்றான்.

தொண்டர்கள் எல்லாரும் ஆமோதிப்பது போல் கரகோஷம் எழுப்பினார்கள். காடுவெட்டி கோவிந்தராஜனுக்கு சந்தோஷமாக இருந்தது.

5 comments:

நாதஸ் said...

:)

Anonymous said...

adhu chaos theory/butterfly effect ba!

Anonymous said...

//"பாருங்க !! நான் சொன்னது சரின்னு சொன்னா மாதிரி மணி அடிக்குது !!" என்றான்.//
Excellent finish! - Really superb!

Regards
Venkatramanan

Shobana said...

:))

Ravi said...

Sooper Keerthi!! Short and Sweet.
Btw, in the speech, it should've been "engal" right? (instead of "engaL") ;-)