பார்த்தசாரதி பாஞ்சஜன்யம் ஊதினான். பார்த்தன் தேவதத்தன் என்னும் சங்கை ஊதினான். இன்னபிற பாண்டவாதிகள் மற்றும் சேனையர் தத்தம் சங்குகளை எடுத்து முழங்கியதை சஞ்சயன் சொன்னதிலேயே திருதராஷ்டிரனின் மார்பு நடுங்கியது.
அர்ஜுனன் சொன்னான், "பரந்தாமா, என்னை இரு சேனைகளுக்கும் இடையில் நிறுத்திவை. யாரோடு சேர்ந்து யாரை எதிர்த்து நான் யுத்தம் செய்யப்போகிறேன், என்று பார்க்கவேண்டும்."
ரதோத்தமனான கிருஷ்ணன், இரு சேனைகளுக்கு மத்தியில், மிகத்தேர்ச்சியான பாகன் போல மிகச்சரியாக தேரை நிறுத்தினான்.
எதிரணியில் திரண்டிருக்கும் சேனாதியோரைக் கண்டு பார்த்தனின் மனம் கலங்குகிறது. அவன் உடம்புத்தசைகள் வலுவிழந்தன. நா வறண்டது. உடம்பு நடுங்கியது. காண்டீபம் கையில் வழுக்குகிறது. மேனி சுடுகின்றது. சாந்தம் குலைந்து அமங்கல நிமித்தங்கள் மனதில் தோன்றின.
"ஹே கோவிந்தா ! ஆச்சார்யர்களும், பித்ருக்களும், மித்ருக்களும், மாமனார்கள், தாத்தாக்கள், மைத்துனர்கள் மற்றும் இன்ன பிற பந்துக்களும் தங்கள் ராஜ்ஜியம், சுகசம்பத்துக்கள் எல்லாவற்றையும் இழக்கத்தயாராய் நிற்கிறார்களே.. இவர்களை யுத்தம் செய்து வெற்றி காண்பதில் என்ன சந்தோஷம் வரப்போகிறது ? இந்த வெற்றியில் மூவுலகும் கிட்டினாலும் நான் வேண்டேன். நான் மடிந்துபோனாலும் கவலையில்லை" என்றான்.
நாற்பது லட்சம் சேனைப்படைகள் யுத்தத்துக்கு தயாராக அணிவகுத்து நின்றுகொண்டு, சேனைத்தளபதிகளின் போராரம்ப சிமிஞைக்குக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், இப்படிப் பேசிய அர்ஜுனனைப் பார்த்து பரந்தாமன் சொன்னான், "You've gotta be fuckin kidding me !".
1 comment:
Kill U... if I can c u :)
Was laughing in the office like anything after reading this post... suthi vellakarangalaa irukanga.. ennannu explain pannanum purila :D
Ultimate one.. enjoyed very much
Post a Comment