மொக்கை போடும் ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப்படுகையில், "பர்ஸுட் ஒஃப் ஹாப்பினஸ்" (Pursuit of happYness) ஏன் மொழிபெயர்க்கப் படவில்லை ? "முன்னூறு பருத்திவீரர்கள்" (ஆங்கிலத்தில் 300) தமிழகத்தில் சக்கை போடு போடுகிறது.
தமிழர்கள் பாரபட்சம் பார்க்காதவர்கள். ஆங்கிலப் படமாக இருந்தாலும் நல்ல படங்களை அங்கீகரிக்க மாட்டார்கள்.
"பர்ஸுட் ஒஃப் ஹாப்பினஸ்" - வில் ஸ்மித் பேரற்புதமாக நடித்த படம். "கனவுகளை பாதுகாத்து வையுங்கள்" என ஓங்கி உரைக்கும் படம். இப்படம் உலக விமர்சன அரங்கத்தில் வேறுபட்ட விமர்சனங்களை அள்ளியது. சிலர் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். சிலர் "ம்க்கும் ! இதெல்லாம் நல்ல சினிமாவா ?" என்றும் கேட்கிறார்கள்.
நான் பார்த்த வரையில் (நான்கு முறை பார்த்துவிட்டேன்), நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல. படம் நத்தை போல மெதுவாக நகருமாதலால் படத்துக்கு நடுவே யோசிக்க முடிகிறது.
இந்த "பர்ஸூட்" என்ற வார்த்தை பற்றி வில் ஸ்மித்தின் சம்பாஷனை சில நிமிடங்கள் யோசிக்க வைத்தது. அமெரிக்காவின் டிக்ளரேஷன் ஓஃப் இன்டிபென்டன்ஸில் இந்த வாக்கியம் வருகிறது.
என்ன வாக்கியம் கண்டுபிடியுங்கள்.. நாளை தொடருகிறேன்.
No comments:
Post a Comment