Wednesday, July 25, 2007

ஹைக்கூ!

ஆஃபீஸில் வேலையில்லாமல் ப்ளாக் படித்துக்கொண்டிருந்தேன் (ஆஃபீஸில் இன்டெர் நெட் லேது. நான் படிப்பது இன்டர்னல் ப்ளாக்). வழக்கம் போல் ஆங்காங்கே தமிழ் தென்பட்டது. எரிச்சல் தரும் விஷயம் என்னவென்றால், சராசரியாக இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன் தமிழில் கவிதை எழுதினால் அது காதலாகத்தான் இருக்கும். யாராவது சண்டை பிடிக்க வாருங்கள் பார்ப்போம் ! அத்தனை குப்பைக் கவிதைகள். நயம், கருத்து, மொழிச் செம்மை இவை எவையும் இல்லாமல் என்ன தமிழ்க்கவிதை ?

அப்போது இடர்ப்பட்டது (நடுவில் ப் வருமா ?) நமது பரணியின் வலைப்பதிவு. ஹைக்கூ ஒன்று எழுதியிருந்தார்.

Late-ஆ எந்திரிச்ச பின்
நினைவுக்கு வந்தது
Night சாப்பிட்ட சேவல்

அடே ! நம்மளயே ரெண்டு செக்கண்ட் யோசிக்க வைத்துவிட்டதே என்று பாராட்டுவதில்கூட பெருமைப்பட்டுவிட்டு, அவரது முழு வலைப்பதிவையும் படித்து முடித்துவிட்டேன். பின் அவருக்கு ஈமெயில் அனுப்பி குசலம் விசாரித்ததில், அவரது எக்ஸ்டர்னல் ப்ளாக் முகவரியையும் அறிந்துகொண்டேன்.

இங்கே

மூன்று நான்கு வரிகளுக்குள் நறுக்கு தெறிக்கும் ஒரு ஹைக்கூ எழுதுவது சுலபமாகத் தோன்றலாம். எனக்கும் அப்படித் தோன்றி எழுத முற்பட்டதில் ஒரே ஒரு விஷயம் தெளிவானது - எனது தமிழ் வறட்சி மற்றும் கற்பனை வறட்சி. Self Realizationஐ ஒரு கேனத்தனமான விஷயமாக நான் கருதுவதால், அந்த எண்ணங்களை உதறிவிட்டு நமது பரணியின் எக்ஸ்டர்னல் ப்ளாகையும் படித்துமுடித்தேன்.

Practical exam தள்ளிவைப்பு
சந்தோஷத்தில் துள்ளி குதித்தன தவளைகள் !

கலாசிட்டீங்க பரணி.

1 comment:

Anonymous said...

vaippey ledhu ba indha manushan!