Saturday, August 04, 2007

தைரியம்ன்னா - பயம் இல்லாதமாதிரி நடிக்கறது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்


இக்குறளுக்கும் பின்வரும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. "அது சரி ! என்றுதான் இருந்திருக்கிறது" என்று கேட்கிறீர்களா. ஹ்ம்ம்ம்.. சரி, என் விஷயத்திற்கு வருகிறேன்.

"தி ஹோஸ்ட்" படம் பார்த்தேன். முதல் சில நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயங்கரமான காட்சியைப்பார்த்து மிரட்சியடைந்தேன். அடேங்கப்பா ! ஹாலிவுட்டிற்கு இணையான (சில சமயங்களில் அதையும் மிஞ்சும்) காட்சிகள். வெகு நேர்த்தியான க்ராஃபிக்ஸ் நுட்பத்தைப்பார்த்து ஸ்பீல்பேர்க் கூட ஆச்சரியப்படக்கூடும். மக்களே ! பார்க்கவேண்டிய படம். மிஸ் பண்ணவேண்டாம்.

சில சமயங்களில் கேனத்தனமாக கதையின் ஃபோகஸ் தள்ளாடுகிறது, என்றாலும் அதையும் ரசிக்க முடிகிறது. திகில் படம் என்றாலும் அதில் மிலிதாக இழையிடும் குடும்பம், பாசம் ஸ்பீல்பேர்க்கையும் கே.எஸ்.ரவிகுமாரையும் ஞாபகப்படுத்தும். சில இடங்களில் உலக அரசியலை சாடும் வகையில், இது என்னவிதமான படம் என்று நிர்ணயம் செய்ய முடியாமல் போகும். எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு மசாலா பொட்டலம் தருகிறார்கள்.

நான் இம்மாதிரி படங்கள் பார்க்கும்போது சப்ஜெக்டிவ்வாக பார்ப்பேன். "என்னாங்கடா கலர் கலரா பிலிம் காட்டறீங்க !!! அணகொண்டாவாவது, ஆட்டுக்குட்டியாவது.. எங்கே, என்னை பயமுறுத்துங்க பார்க்கலாம்..." என்று தெனாவெட்டாக கேட்பவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் போர் அடிக்கும். ஆனால், சிறிது பணிந்து சென்று பார்த்தால் கட்டாயமாக மிரண்டு போவீர்கள்.

இப்படம் குறித்த ஒரே ஒரு திரனாய்வுக் கருத்தை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
"You’ll laugh, you’ll gasp, you’ll jump, you’ll ask Hollywood for your money back."

நம்ம ஊர் தியேட்டருக்கு வந்தால் அவசியம் போய் பார்க்கவேண்டும்.

டைரக்டர் சங்கர், ரஜினிகாந்தும் விக்ரமும் வில்லனை அடிக்கும்போது பயன்படுத்தும் ப்ரயோஜனம் இல்லாத க்ராஃபிக்ஸை Fantasy கதை ஒன்று தயார் செய்து பயன்படுத்தலாம். அதல பாதாளத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு சிறிதளவேனும் உயர்த்தியது போல இருக்கும்.

1 comment:

KB said...

Congratulations on getting ur oxygen(dataone) back ;)