Thursday, September 20, 2007

விகடனில் பிரசுரிக்க என்ன வழி ?



என் அம்மா எழுதிய கவிதை...

ஆயிரமாயிரம் மூளை இயந்திரங்களின் தொழிற்சாலை
படியளக்கும் பராசக்தியின் கர்ப க்ரஹம்
கற்பனைச் சிறகுகள் விரியும் கருவூலம்
பாணிக்ரஹணம் செய்த பத்தினி(கணிணி)யின் பள்ளியறை
இமை மூட மறுக்கும் நேரம் முழுதும் இவளோடே
இருப்பதனால் சுவாசத்தில் கூட C++ தான் வருகிறது.

--------------------------------------

எனது கவிதை (சாரி ! But I warned you !)...

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெருத்தலும்,நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் யார் ?
கம்பரே !
ஒவ்வொரு க்யூபிகிளிலும் எட்டிப் பாரும்.
தெரியும் சேதி !

நாலுக்கு ஆறு சதுர அடிகளில்
உலகளக்கும் வாமனர்கள் இங்கே !
அவரவர் உலகங்களில் அவரவர் சஞ்சரிப்பு !

முறைவாசல் முறை இல்லா இந்த
அடுக்கு மாடி குடியிருப்புகளில்
அக்கம் பக்கம் பேச்சுக்கள் எல்லாம்
ஆறு மணிக்கு மேல்தான்.

அவரவர் வீட்டுக்குள் சென்றுவிட்டால்
தன் தடுப்பு சுவர் தாண்டி
உலகமே இல்லை என்ற பிரஞ்கை.
உண்மைதானே !

இந்த வரிசை முறையைப்பார்த்து
எக்காளம் செய்ய வேண்டாம்!
மூன்று க்யூபிகிள் வாங்கிப் போட்டு
குடும்பம் நடத்தலாம் என்ற நிலமை
சென்னையில் சீக்கிரம்.

- கீர்த்திவாசன் ராஜாமணி

5 comments:

Anonymous said...

keerthi....really superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb...................................................................

balachander

Anonymous said...

Hi keerthi,
nalla topic, neriya kavithaigal.
athanaiyum muthukkal.
vazthukkal.
idhu mathiri photo koduthu kavithai ezhatha kodunga!
neriya vaira muthukkalai parkalam.

keep up ur spirit.

subha

KB said...

Brilliant one Keerthi...

ஆனால் எ.பி.க(விதை) உன் அம்மா எழுதியது தான் !

Anonymous said...

Ungal amma ezhuthiyathai padithu vittu, thevar magan dialogue satri mathi ezhutha thondrugirathu.

"Verum C++ thaanga varuthu" :D

-Deepauk

மங்களூர் சிவா said...

//
சுவாசத்தில் கூட C++ தான் வருகிறது
//

கீர்த்தி உங்க அம்மாகிட்ட என் வாழ்த்துக்களை சொல்லுங்க ரொம்ப அருமையா எழுதியிருக்காங்க.

அதை படிச்சதுக்கப்புறம் நீங்க எழுதினது 'சப்'புனு இருக்கு

:-))))))