நடிகர் சிவகுமாரின் நிகழ்ச்சி ஒன்று விஜய் டீவி யில் பார்த்து சிலாகித்தேன். "மீண்டும் பள்ளிக்கு போகலாம்" என்பது போன்ற ஒரு தலைப்பில் சிவகுமார் தனது பால்யத்தை நினைவுகூர்ந்து அந்த அந்தப் பள்ளிகளுக்கே சென்று தனது பால்ய சினேகிதர்களைச் சந்தித்து அளவளாவிய நிகழ்ச்சி - நெகிழ்ச்சி.
ஒரு குறிப்பிட்ட நண்பர், SSLC முடித்து க்ரூப் ஃபோட்டோ எடுக்க பணம் இல்லாமல் தானும், சிவகுமார் உள்ளிட்ட நான்கு பேர் க்ரூப் ஃபோட்டோவுக்கு நில்லாமல் போனது பற்றி வருத்தப்பட, சிவகுமார் சொன்னார் - "இன்னி வரைக்கும் ஒரு நாலு கோடி ஃப்ரேம்ல நான் வந்திருப்பேன். ஆனா, அந்த ஒரு ஃபோட்டோல என்னால நிக்க முடியாம போச்சு பாத்தியா !". அதைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.
தனது அந்த காலத்து கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களுடனான அவரது உரையாடலும் க்ளாஸ் ! பின்னர் தனது ஓவியக் கல்லூரி வாழ்க்கையும், அவர் வரைந்த ஓவியங்களையும் காமித்தனர். விஜய் டி.வி காரர்கள் கலக்குகிறார்கள்.
அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு விஜய் டி.வி நிகழ்ச்சிகள் ஒருவாரம் தள்ளி வரும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அவசியம் பார்க்கவும். இல்லையென்றால், யாராவது புண்ணியவான் யூட்யூபில் பிட்டு போடுவார். அப்போது லின்குகிறேன்.
அப்டேட் !!
நன்றி - லேஸி கீக் (புண்ணியவான்)
3 comments:
I saw parts of that programme.
Really a far cry from the typical run-of-the-mill sirappu nigazhchigal! :-)
'nyabhagam varuthe.... nyabhagam varuthe'.... everybody has this feeling... because Sivakumar is a celebrity.. people get to see this.. even your mother/father will have this feeling. Have you ever thought of taking them to their old place?
By the way "லின்குகிறேன" should be added to the dictionary. Nice background color theme. - Rajesh
Idhaye Autograph director pannum podhu othukkala...
Post a Comment