Thursday, November 08, 2007
க்ராஸ் பார்டர் காப்பி
இந்தக் காட்சி, நம்ம தமிழ்ப்படம் ஒன்றில் வருமே !!
கரெக்ட் - கஜினி.
இந்த ஃப்ரென்ச் படத்தின் பெயர் "Le Fabuleux Destin d'Amélie Poulain" (The Fabulous Life of Amélie Poulain). ஆங்கிலத்தில் வெறும் "ஆமெலி". கஜினி பார்த்த சிறிது நாட்களுப்பின் தான் இந்தப்படம் பார்த்தேன். "அடெடே ! சுட்டுட்டாங்களே !" என்று தோன்றுவதைவிட, "பரவாயில்லையே, நல்லாத்தான் காப்பி அடிச்சிருக்காங்க" என்று தோன்றியது.
நேற்று யூட்யூபில் மேய்ந்து கொண்டிருந்த போது அகப்பட்டது இந்த வீடியோ. முடிந்தால் / கிடைத்தால் இந்தப்படத்தைப் பாருங்கள். ரொம்ப என்டெர்டெயினிங்காக இருக்கும் என்றெல்லாம் கேரண்டி கிடையாது. ஆனால் பார்த்ததற்காக வருத்தப்பட மாட்டீர்கள்.
இந்தப்படத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அமெலி என்ற கதாபாத்திரத்தின் எண்ணங்களுக்குள் புகுந்து படம் பிடிக்கும் சாதுர்யம்தான். முகபாவனைகளைக் காட்டிவிடலாம் (நம்ம ஆட்கள் அதற்கே முக்குகிறார்கள்). ஆனால் ஒருவரது தாட் ப்ராஸஸை எப்படி படம் பிடித்துக் காட்டுவது ?
உதாரணத்துக்கு இந்தப்படத்திலிருந்து இன்னொரு ஸீன். தனது காதலனுக்காக காத்திருக்கிறாள் அமெலி. மூன்று மணிக்கு வருவதாக ஒப்பந்தம். இரண்டு நிமிடங்கள் தாமதமாகின்றன. அந்த இரண்டு நிமிடங்களில் அமெலியின் எண்ண ஓட்டங்களை நமக்கு காண்பிக்கிறார்கள். "ஒரு வேளை அவன் போலீஸால் துரத்தப்பட்டு, அதனால் விபத்தில் சிக்கி மயக்கமடைந்து, பின் கண்விழித்துப் பார்க்கும் போது பழைய நினைவுகளையெல்லாம் இழந்து ப்ரக்ஞை இல்லாமல் ஒரு லாரி டிரைவரிடம் லிஃப்ட் கேட்டு, அந்த லாரி டிரைவர் தவறுதலாக அவனை இஸ்தான்புல் செல்லும் கண்டெயினரில் அவனை ஏற்றி, ஆஃப்கானிஸ்தான் சென்று, அங்கே சோவியத் ஏவுகணைகளை திருடிக்கொண்டு, அங்கே ஒரு லாரி வெடித்து, முகாஜுதீன் தீவிரவாதியாக மாறி...." என்று அதீதமாக கற்பனை செய்ய அந்தக்காட்சிகள் நம் கண்முன் விரிகிறது.
இதெல்லாம் நவீன சினிமா யுத்திகள். இவைகளைப் பயன்படுத்தி, நம்ம சுஜாதா கதைகளில் வசந்த் நினைப்பதை நினைவுகளின் ஆதென்டிசிடியுடன் காண்பிக்க முடியும். எவ்வளவு நாளைக்குத்தான் "ஆடியன்ஸுக்கு புரியாது" என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளப்போகிறார்களோ நமது டைரடக்கர்கள். ஏ.சி. முருகதாஸ் மெமென்டோவும் பார்த்திருக்கிறார்; அமெலியும் பார்த்திருக்கிறார். அவையெல்லாம் தமிழில் செய்யக்கூடாதோ ?
தமிழ் சினிமாவில் சினிமேட்டோக்ரஃபி சிகரம் தொட்டுவிட்டது. எடிட்டிங் ஏ க்ளாஸாக இருக்கிறது. ம்யூசிக் உலகத் தரம். ஸ்டண்ட்ஸ் கேட்கவே வேண்டாம். ஆனால் கதை/திரைக்கதை மட்டும் உலக மகா சொதப்பலாக இருக்கிறது. அழகிய தமிழ் மகன் ரிவ்யூ/கதை படித்தேன். அய்யோ ! கடவுளே ! இறைவா தமிழ்நாட்டு அரசியலைத்தான் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டாய். சினிமாவையாவது காப்பாற்றப்பா !
அதுசரி ! ரஜினியின் அடுத்த இயக்குனர் ஏ.ஸி. முருகதாஸாமே !
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
good one keerthi...
I believe he is A R Murugadoss ;-)
Post a Comment