Monday, November 19, 2007
தேவே கவு(த்துட்டார்)டா !
நமக்கு வாய்த்ததுதான் சரியில்லை என்று நினைத்து வந்தேன். அப்பாடா ! கர்நாடகாவும் குப்பையாகத்தான் இருக்கிறது. குப்பை அரசியலில் மட்டும் ஒற்றுமையான கருத்து உடையவர்கள் நமது அரசியல்வாதிகள். தப்பித்தவறி "நாட்டு நலன்" என்பது தங்களின் அரசியலில் கலப்படம் ஆகிவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள்.
எடியூரப்பா பாவம் இடிந்துபோய் உட்கார்ந்திருப்பார். இத்தனை நாட்கள் தூங்கிக்கொண்டிருந்த நமது முன்னாள் ப்ரதம மந்திரி தேவே கெளடா, அந்தர்பல்டி அடித்தது அவர் கட்சி எம்.எல்.ஏ க்களுக்கே ஷாக். "We request you to push us from the top floor of Vidhana Soudha (assembly building) and kill us once for all, instead of torturing everyone by changing your stand." என்று அவர்களே சொன்னால் நாம் என்ன செய்வது ?
ஆனால் மக்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நியாயம் தானே. யார் ஆட்சியில் இருந்தால் என்ன ? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்கிரமங்களும் சீர்கேடுகளும் தானாக ஒரு செல்ஃப் டிஸ்ட்ரக்டிவ் பேட்டெர்னில் நடை பெறும். இதற்கு எதற்கு ஓட்டு போட வேண்டும் ? இவர்களாக முடிவு செய்து கொள்கிறார்கள். இவர்களாக ராஜினாமா செய்கிறார்கள். இவர்களாக பதவி எடுத்துக்கொள்கிறார்கள். நடுவில் மக்கள் நாம் எதற்கு ?
இனிமேல் நாம் வோட்டுப் போடாமல் ஒரு காரியம் செய்யலாம். ஒரு பெரிய மைதானத்தில் தேர்தல் வேட்பாளர்களையும் அவர்தம் அடியாட்களையும் (அதாவது தொண்டர்கள்) வரிசையாக நிறுத்தி ஆரத்தி எடுத்து, "ரெடி. ஸ்டார்ட்" என்று சொல்லவேண்டும். அவ்வளவுதான் நமது கடமை. அவர்கள் மற்ற கட்சிகளுடன் போர்செய்து கட்சித்தலைவர்களை வதம் செய்து, யார் அதிகமாக ரவுடியிஸம் செய்கிறார்களோ அவர்கள் ஆட்சி எடுத்துக்கொள்ளட்டும்.
ஹ்ம்ம்ம். இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் பழகிப்போய் இருந்தாலும் ஒரு ஓரத்தில் இந்தப்போக்கு பயமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் நம் தலையில்தானே விடிகிறது.
நாற்பத்துஓரு மாதங்களில் மூன்று ஆட்சிகளைக் கவிழ்த்த பெருமை(?) தேவே கெளடாவையே சாரும். எந்த முட்டாள் சொன்னது, மக்களாட்சி நடக்கிறது என்று ?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
veetu'ku veedu vasappadi,
state'ku state'u arasiyal ippadi!!!
ithu jananaayagathin uchakkattam,
nam arasiyal vaathikalin sathi thittam!!!
//
தப்பித்தவறி "நாட்டு நலன்" என்பது தங்களின் அரசியலில் கலப்படம் ஆகிவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள்.
//
I beg to differ. Politicians are also from common public - isn't it?. In general people of india have started losing their social ethics, courtesy, humanity, honesty, responsibility, morality etc... It reflects in our government. We are the cause and our politicians are the effect :)
//
தேவே கெளடா, அந்தர்பல்டி அடித்தது அவர் கட்சி எம்.எல்.ஏ க்களுக்கே ஷாக
//
What about Ediyurappa? By next week if Deve Gowda invites him for talk, he would definitely go and stand before Gowda's house.
Post a Comment