என் வாழ்க்கையில் பலப்பல எதிரிகள், தவணை முறையில் வந்து போவார்கள். அதில் சமீபகாலமாக வந்து செல்பவர், கல்யாணப் பந்தியில் ரசம் ஊற்றுபவர். (!)
கொஞ்சம் டீட்டெயிலாகப் பார்ப்போம்.
"எப்போடா கல்யாண சாப்பாடு போடப்போறே ?"
"இன்னிக்கு சாப்பாடு வேண்டாம்.. பாஸ்கர் கல்யாண சாப்படுலே ஒரு புடி புடிச்சுடுவேன்"
"ஆஹா ! இன்னிக்கு உங்க வீட்டு சாப்பாடு, கல்யாண சாப்பாடாட்டம், ப்ரமாதமா இருக்கே"
என்று பலரால் ஜபர்தஸ்தாக உயர்த்திப் பாராட்டப்படுவது "கல்யாண சாப்பாடு".
ஆனால், ஒருவேளை நான் சென்ற திருமண வைபவங்கள் அப்படியா, அல்லது பொத்தாம் பொதுவாக எல்லார் கல்யாணத்திலுமா என்று தெரியவில்லை.... கல்யாண சாப்பாடு சுமார்தான். அதைப்பற்றிய நினைப்புதான் க்ராண்டாக இருக்கிறதேயொழிய, சாப்படென்னவோ சாதாரணம் தான்.
ரிசெப்ஷன் ஒரு விதமான ஜனரஞ்சகமான ஐட்டங்கள் உள்ளடங்கிய மெனுவுடன் இருக்கும். பூரி மசாலா எல்லாம் அந்தக் காலம். புல்கா, நான், சப்ஜி, பிரியாணி, புலவ், கட்லெட் என்று ஏகப்பட்ட பாப்புலர் ஃபிகர்கள் இலையில் உட்கார்ந்திருப்பர். ஆனால் எல்லாம் சாம்பிள் தான். அழகான மூடி திறக்கமுடியாத த்ராபை வாட்டர் பாட்டில் உட்பட.அதிலும் முக்கியமாக ஐட்டங்கள் தான் இருக்குமே தவிர, டேஸ்ட் படு சுமாராக இருக்கும். நமது பணி என்னவென்றால், இந்த ஐட்டத்தை முடித்துவிட்டு அடுத்த ஐட்டத்துக்கு விரைய வேண்டும். அடுத்து டொமேட்டோ பாத் கொண்டு வருவார்களே !
அப்புறம் ஒரு பாதாம் அல்வா பேக்கட். அது எதற்காக பேப்பரில் சுற்றி வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. குறிப்பாக இதை அடுத்தவர்கள் எப்படிப் பிரிக்கிறார்கள் என்று பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம். சாம்பார் சாதம் சாப்பிட்டு முடித்து, முதலில் ஒரு கையால் திறக்க முயன்று - தோற்று, பின்னர் இரு கைகளாலும் பிரித்து இலையில் விழுந்து.. அப்பாடா.. இன்னொரு ஐட்டம் அவுட்.
எல்லாவற்றிற்கும் க்ளைமேக்ஸாக வென்னிலா ஐஸ்க்ரீம். 99% திருமணங்களில் வென்னிலா ஐஸ்க்ரீம் வைப்பதன் ரகசியம் என்ன என்று யாராவது யோசித்துச் சொல்லுங்கள். அதை கை அலம்பிவிட்டு சாப்பிட வேண்டுமா, அல்லது அதே தயிர் சாதக் கையுடன் ஸ்பூன் போட்டு சாப்பிட்டால் போதுமா ? என்று எனக்குள் ஒரு போராட்டமே நடக்கும்.
கை அலம்பிவிட்டு பீடா போட்டு குதப்பிக்கொண்டே யோசித்தால் குறைந்த பட்சம் 30 ஐட்டம் முழுங்கியிருப்போம். இப்பொழுதெல்லாம் சில திருமண வரவேற்புகளில் பஃபே வைத்து சாட் ஐட்டெங்கள் எல்லாம் போட்டு கலக்குகிறார்கள். நாமும் அடுத்த நாள் காலை கலங்கிவிடுவோம்.
சரி.. இதையெல்லாம் விடுங்கப்பா. நான் முக்கியமாக சொல்ல வந்தது வேறு. அதிகாலையில் நடக்கும் திருமணத்திற்கு அதிகாலையே சென்று மதியம் வரை இருந்து சாப்பாடு சாப்பிட்டும் போது தான் என் எதிரி வருவார்...
2 comments:
hmm... this article is tempting me... Keerthi, when is ur 'kalyana saapaadu?' ;-)
Has Avyukta completely switched over to tamil?
Post a Comment