Saturday, January 05, 2008

ரசம் - II

சென்ற பதிவின் தொடர்ச்சி...

நண்பர்கள் திருமணம் என்றால் ரிசெப்ஷனுக்கும், உறவினர்கள் திருமணம் என்றால் காலை முகூர்த்தமும் செல்வது வழக்கம். அதிகாலை முகூர்த்தம் என்றால் இட்லி, பொங்கல், பூசனிக்காய் அல்வா, வடை. கொஞ்சம் அதிகமாகப் போனால் பூரி மசாலா. (J.V. கேட்டரர்ஸ் - அப்பு என்பவர் காலை டிபனுக்கு தோசை போடுவார்..). இவற்றில் ஏதாவது ஒன்று சுவையில் சோபிக்கும். ரிசெப்ஷன் சாப்பாடு போல ஒருசேர சொதப்பாது.

கொஞ்சம் தாமதமாக கல்யாணத்துக்குச் சென்றால், ஒரு பத்தரை மணி வாக்கில் சாப்பாட்டுப் பந்தி ஆரம்பிக்கும். டெக்னிக்கல்லி ஸ்பீகிங், இந்தச் சாப்பாடு தான் ஆக்சுவல் "கல்யாண சாப்பாடு". முன்பெல்லாம் இந்தச் சாப்பாட்டுக்குத்தான் கிராக்கி அதிகம். ஆனால் இப்பொழுதெல்லாம் ரிசெப்ஷன் சாப்பாடுதான் கிங். அதற்குத்தான் க்யூ கட்டி காத்திருக்க வேண்டும். ரிசெப்ஷன் நுழைந்தவுடன் நாராசமான சப்தத்தில் லைட் ம்யூசிக் என்ற பேரில் அலறிக்கொண்டிருப்பார்கள். நங் நங் என்று மண்டையில் அடிவிழுவது போல் இருக்கும்... முக்கியமாக "அப்படி போடு.. போடு.." பாட்டு பாட ஆரம்பித்துவிட்டால் "உங்க சங்காப்தமே வேண்டாம்டா" என்று எழுந்து ஓடி விடத் தோன்றும். அப்பொழுது தான் பெண் மாப்பிள்ளை இருவரும் மேடை ஏறுவார்கள். இன்றைக்கு மட்டும் அணியப்போகும் ரேமண்ட்ஸ் சூட்டிங்கில் மாப்பிள்ளையும் (புது ஃபேஷன் - ஷெர்வானி), குஜராத்தி ஸ்டைலில் கட்டிய பட்டுப் புடவையில் பெண்ணும் மேடையில் மாலை மாற்றி, கேக் வெட்டி, பட்டிமன்ற நடுவர் சேரில் அமர்ந்து வித விதமாக போஸ் கொடுத்துவிட்டு "ரெடி ! ஸ்டார்ட்" என்றவுடன் மேடையை நோக்கி கல்யாண மண்டபமே ஓடும். உடனே அதற்கும் ஒரு க்யூ.

மேலே மேடை ஏறியவுடன் - "வாங்க வாங்க ! சுசீலா, இவர்தான் நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார்." "ஹெ ! ஹெ !" ... "ஹி.. ஹி.. ஹி..!" "சாப்டுட்டு போங்க". "ரெடி ! ரெடி ! ரெடி ! ஸ்மைல் ப்ளீஸ்." கவர்மெண்ட் ஆபிஸில் லஞ்சம் கொடுப்பது போல எப்படிக் கொடுப்பது என்று தெரியாமல் கிஃப்ட் பேக்கை யாரிடம் கொடுப்பது - மாப்பிள்ளையிடமா ? அல்லது இருவருக்கும் சேர்ந்தா என்று தெரியாமல், கண்ணுக்குத் தெரிந்த கையில் திணித்துவிட வேண்டியது. அப்புறம் சேர்ந்தார்ப்போல் மூன்று கேமராக்கள். இது தவிர ஒரு விடியோ காமிரா வேறு. எதைப் பார்ப்பது என்று தெரியாமல் ஒரு மந்தகாசப் புன்னகையை வீசிவிட்டு, மேடையை விட்டு இறங்க வேண்டியதுதான். அப்புறம் தான் ரிசெப்ஷன் சாப்பாடு. இதைப்பற்றித்தான் முன்பே சொல்லியாயிற்றே !..

காலை சாப்பாட்டுப் பந்திக்கு வருவோம். மாங்கல்ய தாரணம் முடிந்தவுடன் டைனிங் செல்ல வேண்டியதுதான். இப்பொழுதெல்லாம் மாங்கல்ய தாரணம் முடிந்தவுடன் ஜூஸ் கொடுக்கின்றனர்.. காரணம் தெரியவில்லை. டைனிங் சென்றால்தான் நமது எண்ண ஓட்டத்தை மிஞ்சி பலர் ஏற்கனவே ஆஜராகியிருப்பது தெரியும். ஓடிப்போய் ஒரு இடம் பிடித்து அமர வேண்டும்.

பேப்பர் ரோல் உருட்டிவிட்டு மேலே இலை போடுவார்கள். ஒரு கல்யாணத்துக்கு வந்த பிறகு உங்களது முக்கியமான கடமை - உங்களுக்குப் போடப்பட்டிருக்கும் இலை கிழியாமலிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இலையில் முதலில் இனிப்பு வைக்க வேண்டுமே என்பதற்காக கடனே என்று அரை உத்தரணி பாயசம் வைத்துவிட்டுப் போவார்கள். இதை சாப்பிட முயற்சிக்க வேண்டாம். அடுத்து படையெடுப்பு. உப்பு, தயிர் பச்சிடி, ஸ்வீட் பச்சிடி, உருளைக்கிழங்கு கறி, கோஸ் மல்லி, கல்/பாறை/இடி அமீன் வடை, சிப்ஸ்.. என்று அவசரகதியில் இலை நிறம்பிக்கொண்டிருக்கும். மாங்காய் ஊருகாயும் தம்மாத்தூண்டு ஸ்பூனால் வைத்துவிட்டுப் போனவுடன், இலை சாதத்திற்கு தயாராகிவிடும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் சாதத்தை மலையாக குவித்து ஒரு பெரிய கரண்டியால் இலைக்குத் தள்ளுவார். ஒரு குட்டிமலை இடம்பெயர்ந்து அழகாக நிலச்சரிவுக்குத் தயாராக நிற்கும். நீங்கள் சுறுசுறுப்பாக சாதத்தை பாகம் பிரிக்க வேண்டும்.. பின்னே சாம்பாருடன் ஒருவர் வந்து கொண்டிருப்பார். அவர் நீங்கள் எந்த பங்குக்கு சாம்பார் சாப்பிடப் போகிறீர்கள் என்பதை ஊகிக்க நேரமில்லாமல் பொத்தாம் பொதுவாக ஒரு இடத்தில் ஊற்றிவிட்டுப் போவார். கோட்டையைச் சுற்றி அகழி போல் உள்ள இடத்தில் நிறம்பி ஓடுவதற்குள் அணைபோட்டுத் தடுத்து சீக்கிரமாக சாம்பார் சாதம் முடிக்க வேண்டும்.

அப்புறம் சுதாரித்துக்கொண்டவுடன், தயிருக்கு கொஞ்சமாக ஒதுக்கிக்கொண்டு, இலையின் மெயின் பகுதியில் சாதம் வைத்துக்கொண்டு "ரசம்" என்று கை தூக்கியவுடன் என் எதிரி ஸ்லோ மோஷனில் நடந்து வருவார். "சார் ரசமா ?" என்று கேட்பார். அதற்கு நான் தலையாட்டப் போகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், தலையை மேலே தூக்கி கீழே கொண்டுவரவேண்டுமல்லவா... மேலே தூக்குவதற்குள் லைட்னிங் ஸ்பீடில் ஒரு பெரிய கரண்டியில் தெளிவு ரசத்தை எடுத்து சாதத்தின் மேல் ஊற்றி கொட்டிவிடுவார்.

"வொல்கெனோ" படம் பார்த்திருக்கீர்களா ? அது மாதிரி, ரசம் கட்டுக்கடங்காத காட்டாறாக பதினாறு திசைகளிலும் சீறிப் பாயும். இந்தப் பக்கம் வழியாமல் இருக்க இலையை தூக்க உடனே எதிர் பக்கத்தில் கன அடி அதிகமாக அதில் கொஞ்சம் சாதம் எடுத்துப் போட்டு இன்டென்சிட்டியைக் குறைக்க, இதற்குள் நாம் கவனிக்கவே கவனிக்காத ஒரு திசையில் ஓடிச்சென்று அட்டகாசமான சந்தனக் கலர் பேண்டில் சொட்டும் - ரசம்.

தி டேமேஜ் இஸ் டண்.

இது தான் உங்கள் மனப்பக்குவத்தை பரிசோதிக்கும் தருணம். உடனே பதறினீர்கள் என்றால் நகம் பட்டு இலை கிழியும், அல்லது தண்ணீர் குடுவை விழுந்து வெந்த ரசத்தில் கடுகு தாளிக்கும். கர்சீப்பை வலது பாக்கெட்டில் வைத்திருப்பதனால், இடது கையால் எடுக்க முயற்சிப்போம். இன்னும் பல - காமெடி ஓஃப் எரர்ஸ்.

சேதங்களையெல்லாம் ஓரளவுக்கு சீர்படுத்திவிட்டு நிமிர்ந்தால் நம் எதிரி - இப்போது மோர் வாளியுடன் நின்று - "சார்.. மோர் ?" என்பார்.. அதிவேகமாக தலையை ஆட்ட நான் அப்பொழுது தான் கற்றுக்கொண்டேன்.

கல்யாணம் ஆனவருக்கு தாலி, மெட்டி, மோதிரம் அடையாளம் என்றால்.. கல்யாணத்தில் சாப்பிட்டவருக்கு - சந்தனக் கலர் பேண்டில் ரசக் கரை.

சென்ற பதிவில் என் கல்யாணச் சாப்பாடு கேட்டிருந்தார். மெதுவாப் போடுவோம்... ஆனால் கட்டாயம் ரசம் மட்டும் கிடையாது.

10 comments:

expertdabbler said...

Reception depiction pramaaadham :)

rasam - nee solradhu unmainaalum, adhutha naal kalaila rasathaale vara baadhipugal kammi nu naan ninaikiren.
rasam one of my favorite dishes
adhunaale rasam podalaam ;-)

naama software la mattum illai, indha madhiri vishayangal la kooda innovate panradhillai ngradhukku indha post oru nalla udharanam :)

monu said...

nice one..brings back pleasant memories of my own marriage..
ippo ellaam in some weddings, rasam is kept in a cup like payasam..makes one's life easy..
i build the dam even before i could call the rasam person..

i like kalyana saapaadu..really...

Shivathmika said...

inime endha kalyanathukku ponalam keerthi nenappu dhaan varum...

superb explanation... but please unga kalyanathula rasam avoid pannidadheengo!

Ravi said...

Romba romba arumai. Kalyanam/kalyana saapaatla irukkura nunukangala romba azhaga solli irukkeenga. Veguvaaha rasithen!! Thanks. Esp "pattimandram chair" was really funny to read.

Enna dhaan rasam, sandhana colour pant-a karai-aakinaalum, flat-aana vaazhai ilaiyila rasam utri, adhu elaiya vittu vazhaiyaama saapidra 'knack', namba south India-la mattum dhaan illaya? Neenga unga sandhana colour pant-a karai-aakaama irukkaruthukaagavae, marupadiyum marupadiyum (neenga ozhunga vaazhai ilai-la rasam saapiduvadhai katru koLLum varai) ungalukku rasam prathyegamaaga parimaara padum ;-)

Regarding the "standardisation" of reception menu (esp in cities), there was a nice write-up in Chennai metblogs. The writer mentioned about an invitee would look forward for the typical kind of food based on the community of the marriage house-hold but today its all gone - neenga sonna maadhiri its just naan, chilli gobi, paper-la maditha badam halwa and so on... Am longing for those traditional feasts!!
(excuse me for my long comment)

Unknown said...

Keerthi,

I have been reading and enjoying your posts regularly. This one was superb! I almost rolled off the chair laughing!

Thanks for all the fun.

Shub

Shobana said...

Ennga kalyanathil saapadu supero super. Really....nalangu, wedding and all other occassions. Food was amazing...ennaku, rasam illayila sapada theriyadhu...so, never ask for it....start with paruppu, sambar and thayir. nothing else. finish all the accessories. Ippa ellam, payasam, cupla kuduraanga...so its ok. Illa na, athuvum cut. I saw in a wedding, for the bride and groom and immediete family, they were served on silver plates...ennamo mathiri irrunthathu. Athai veetla vachiruinthukalam...

SHAILENDRA said...

Kalyana samayal saadam
Kaaykarigalum pramadham
idhu kauravap prasadham
idhuve enakku podhum
ha ha ha ha ha ha

Nice one, Keerthi!

Sowmya said...

Post la nava"rasam" irukke !

Aanaalum ippadi "Rasa"nai illamal kutham solla koodathu.

Rasam ennoda favt aakum !!!

Kalyanathukku moi ezhutha nanga ellarum vara vendam nu solra mathiri irukke !!

Yosichu "Rasam" thathumba innoru post podungalen !!- Rasam oru paatha rasam nu title :)

KRTY said...

PK, Innovation illenna kooda paravaa illai.. innum pithukulithanamaa niraya kandupidikka aarambichuttaanga.

Gayathri, Dam, he he :)

Shivathmika, hmm. Paarkalaam. Gayathri sonna maadhiri, cuppula vechuduvom.

Ravi, thank you. Inime sandhana kalar pant vaanga maaten.. okva ?

Shub (!), thank you. Im glad you liked it.

Shobana, unga kalyaanathukku kooptirukka koodadho ! hmm.

Shylu, thanks.

Sowmya, Moi ezhudha vendaamnu naan sonnena ? Chancey illai ;P

Unknown said...

It is high time you start writing articles for magazines...I could see balakumaran and sujatha there in your writings