







இரண்டு நாட்களாக, வில்லிவாக்கம் மகளிர் கோலப் போட்டி, லோக்கல் ஸ்ரீ லலிதா மண்டலி என்று "சூரியன்" கவுண்டமணி கணக்காய் ஒரே பிஸி !!! சுற்றி சுற்றி போட்டோ எடுத்து கேமரா இப்பொழுதுதான் கண்ணயர்ந்தது.
அப்பா சொன்னதன் பேரில் இங்கெல்லாம் சென்றவுடன், திடீரென ஒரிரு பாஸ்கள் முளைத்தனர். "தம்பி ! ஜட்ஜஸ் எல்லாம் இந்த கோலத்தை பார்க்கும் போது அவங்களை ஃபோகஸ் செஞ்சு படம் எடுங்க !".. "அங்கேயிருந்து எடுக்காதீங்க ! இங்க வாங்க.. என்ன சார்.. பேசிக் லைட்டிங் வேண்டாமா !".. "ப்ரைஸ் கொடுக்கும் போது நல்லா சூம் பன்னி எடுப்பா !".. அப்பப்பா !
"இது என்ன கேமரா ? எவ்ளோ பிக்செல் ?" என்று ஒரு மாமா கேட்டார். "சோனி கேமரா. 7 மெகா பிக்ஸெல்"... "ஓஹோ ! இப்பொதான் பன்னென்டு பிக்ஸெல் எல்லாம் வந்துடுத்தே ! என் மச்சினன் பையன் சிங்கப்பூர்லேர்ந்து வாங்கிண்டு வந்தான். பட் க்ளாஸா படம் எடுக்கறது. அது மாதிரி வாங்கிக்கோங்க ! யூஸ்ஃபுல்லா இருக்கும்". அட ராமா !.
கோலப்போட்டியையும், லலிதா மண்டலியையும் தவிர்த்து நான் எடுத்த படங்கள்தான் மேலே நீங்கள் காண்பது. சட சட என்று சுட்டு விளாசி விட்டேன். ரொம்ப நாளாக கேமரா தொடாத குறையை தீர்த்துக்கொண்டேன். இன்னும் நிறைய போட்டோக்கள் பாக்கி. இந்த வாரத்தில் அப்லோட் செய்கிறேன்.
4 comments:
நல்ல புகைப்படங்கள் !!
Very Beautiful! romba busy pola, unga cameravukku :)
gr8 fotos.
i would like to know which s/w u r using to tweak the fotos?
excellent photos...ur subject matters are focused. thats the best. :)
Post a Comment