Monday, March 31, 2008

கில்லி



நயந்தாரா [மனதிற்குள்] : நான் இங்கே என்னத்துக்கு ?... நம்மள பல்லேலக்கா மாதிரி மேட்சுக்கு முன்னாடி டேன்ஸ் ஆடவிட்ருவாங்களோ ??

விஜய் - ஸ்ரீகாந்திடம் : ண்ணா !! எப்டிங்கண்ணா !!சினிமாவ விட கிரிக்கெட் பெருசுங்களான்னா ?

ஸ்ரீகாந்த் : எல்லாம் ஒன்னுதான் டாக்டர் விஜய். ஆனா, சினிமாவைவிட கிரிக்கெட்டில் கேமெரா முன்னாடி நிறைய நிக்கனும். நிறைய நடிக்கனும். டைகர் பிஸ்கெட், நவரத்ன தைலம், குரங்கு மார்க் சோப்புன்னு எந்த விளம்பரமா இருந்தாலும் கூச்சப்படாம நடிக்கனும். செலெக்ஷன் கமிட்டி பத்தி அப்பப்ப காட்டமா அறிக்கை விடனும்.

விஜய் : சூப்பர்ண்ணா !!

ஸ்ரீகாந்த் : அப்புறம், நீங்க படத்துக்கு படம் ஹிட் கொடுக்கற மாதிரி, கிரிக்கெட்டில அவ்வளவு கஷ்டம் இல்லே... எப்பவுமே ஆடாம திடீர்ன்னு முன்னூறு ரன் அடிச்சாரு பாருங்க நம்ம சேவாக்... அந்த மாதிரி வருஷத்துக்கு ரெண்டு நல்ல மேட்ச் விளையாடிட்டா போதும். எவ்ளோ ரன் அடிக்கிறீங்கங்கறதை விட, எத்தனை ப்ராடக்டுக்கு ப்ராண்ட் அம்பாஸடரா இருக்கீங்கங்கறதுதான் முக்கியம்.

விஜய் : ண்ணா !! கேக்கும் போதே குஷியா இருக்குதுங்கண்ணோ ! "இளைய கபில்தேவ்" அப்டீன்னு டைட்டில் போட்டு கிரிக்கெட்டுல குதிச்சுட வேண்டியதுதான்.. எங்கப்பா கிட்டே சொன்னா போதும்னா ! ஆப்போஸிட் டீமுக்கு நம்ம ப்ரகாஷ்ராஜை போட்ருலாம்ண்ணா ! அப்புறம் பாருங்கண்ணா !! சும்மா கில்லி மாதிரி குத்தாட்டம் போட்ருவோம்ல !!

தோனி [மனதிற்குள்] : "இளைய கபில்தேவ்" சே ! இந்த ஐடியா நமக்கு வராம போயிடுச்சே.. அடுத்த அட்வர்டைஸ்மென்டுல இந்த மாதிரி ஏதாவது போடச் சொல்லனும்.

4 comments:

Unknown said...

Good 1 Keerthi.!!

Nice imaginary conversation bringing out the real picture of India's cricket team.

~Sriram

Anonymous said...

Namma verum comment dhaan adikka mudiyum.. Anga nikkaravangala madhiri panaththayya

KRTY said...

Sriram, thanks mate.

Vera Vazhi, illai.

Ramya said...

good one.. vivek comedy paatha effect iruku..