Wednesday, April 02, 2008

டார்ஜீலிங் லிமிடெட்

முழுக்க முழுக்க இந்தியாவில் நிகழும் சம்பவங்கள் கொண்ட ஹாலிவுட் படம் "தி டார்ஜீலிங் லிமிடெட்".

ஒர் வருடமாக சந்திக்காத மூன்று சகோதரர்கள், இந்தியாவில் மிஷனரியில் சேர்ந்து சேவை புரியும் தன் அன்னையைக் காண்பதற்காக "தி டார்ஜிலிங் லிமிடெட்" என்ற ரயிலில் ஏறி பயணிக்கிறார்கள். அவ்வளவே ! பிரமாதமான கதை எதுவும் இல்லாமல் மதாந்தமாக நகரும் கதை எப்படியோ கொஞ்சம் நன்றாகவே இருந்தது.

இந்த ஹாலிவுட் படங்களில் விரிந்து கிடக்கும் குடும்பங்களைப் பற்றி படம் எடுத்தால் அமோகமாக பேசப்படுகின்றது. இது அந்த டைப். ஆனால் வெகு இலகுவாக தொட்டுச் செல்கிறது. காட்டமான மெஸேஜ் எதுவும் இல்லாமல், காதில் மெதுவாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

படத்தின் ஹைலைட் - படத்தின் பின்னனி இசை. பழைய சத்யஜித் ரேயின் பட இசை பிட்டுகளும், வேறு பல லேசான இசைத் தொகுப்புகளும் படத்துக்கு பலம்.

படம் பாருங்கள். ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தி ஏற்படாவிட்டாலும், மோசமான படம் பார்த்த வேதனை ஏற்படாது.

3 comments:

Shivathmika said...

iyyo... yen ivlo mistakes... padikka kashtama irukku...

gP said...

okay! time to fireup the torrents...sounds like a worthwhile movie.

Kumar said...

Iam new to adsense n want 2 clicks on any ad
Visit my new blog at....
http://dailynewsreports.blogspot.com/