Friday, April 04, 2008
ஹொக்கே-நக்கலோ நக்கல் !
சோனியா காந்திக்கு இன்னமும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார், கருணாநிதி. சட்டப்படியும், திட்டப்படியும் சரி வர நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காரியத்துக்கு கர்நாடக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் பொழுது கொதித்தெழுந்து அடக்க வேண்டாமோ ?
அதை விடுத்து அறிக்கையும், கடிதமும் என்ன பிரயோஜனம் தரப்போகின்றன ?
ஹொக்கேனக்கல் சமரச ஒப்பந்தத்தின்படிதான் நாம் நடந்துகொண்டிருக்கிறோம். கிடைக்கப் போகும் 1.4 TMC அளவு நீரை தமிழகத்துக்குள் எடுத்து வருவதற்கு ப்ரச்சனை கொடுக்கின்றனர், கன்னட அரசியல்வாதிகள். "நீங்க பெங்களூருக்கு தண்ணி வுட்டா, எங்களுக்கு ஹொக்கேனக்கலுக்காவது கொடுங்க" என்று தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, "சரி, ஓகே ! அப்போ பெங்களூருக்கு தண்ணி விடறத பத்தி உங்க எதிர்ப்பை விலக்கிக்கோங்க" என்ற கர்நாடக அரசின் பதில் நிபந்தனைக்கு ஒப்ப 1998ல் கையெழுத்திட்ட பத்திரம் - இங்கே காணவும்.
தமிழக திரையுலகம் இதற்கு கண்டனம் தெரிவித்த முறை, ப்ரமாதம். "இதைவிட பெரிய இஷ்யூ தமிழ்னாட்டிலே எதுவுமே இல்லை.. இதை தயவுசெஞ்சு சுமூகமா முடியுங்க" என்று ரஜினிகாந்த் பெரிதாக உணர்ச்சிவசப்பட்டது இன்னும் அட்டகாசம். ரஜினிகாந்த் இப்படி பேசி நான் பார்ப்பது இரண்டாவது முறை. முதல் முறை "மறுபடியும் இந்த ஆட்சி வந்துதுன்னா, தமிழ் நாட்டை ஆண்டவனாலகூட காப்பாத்தமுடியாது" என்று அவர் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக அளித்த பேட்டி.
நேற்று, அத்தனை நடிகர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தது பெரிய மாற்றங்கள் எதையும் நிகழ்த்தப் போவதில்லை என்றாலும், பாக்கி அரசியல் அமைப்புகள் எதுவும் செய்யாத காரியத்தை முதலில் செய்துள்ளார்கள். சினிமா குறித்து எழுந்த பிரச்சனை என்றாலும் கூட, தமிழகத்தின் எதிர்ப்பாகத்தான் இதை எதிரொலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இதற்காக அல்லவா போராடவேண்டும். தீட்சிதர்கள் தேவாரம் பாடுவதையும், சித்திரையில் தமிழர்கள் புது வருடம் கொண்டாடக் கூடாது என்றும் சட்டங்கள் செய்து, அபத்தமான அறிக்கைப் போர் பல புரிந்து தமிழர் மீது அக்கறை காட்டுவதாக காண்பித்துக்கொள்ளும் தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் வரை சென்று இதை இழுக்கடித்து அரசியல் ஆதாயம் தேடாமல் உயிர்ச்சேதம் இல்லாமல் இணக்கமாக முடிக்க வேண்டும். செய்வார்களா ?
ஒரு ஆரூடம் சொல்கிறேன். நடக்கிறதா பார்ப்போம்.
திடீரென்று ஏன் இந்த பிரச்சனை. கர்நாடகாவில் தேர்தல் நெருங்குகிறது. Political mileage தேடி அத்தனை அரசியல்கட்சிகளும் தங்களை அந்த மாநிலத்தின் ரக்ஷையாக காட்டிக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.
எந்த ஊரில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதானே. அடுத்த மாதம் தேர்தல் முடிந்ததும் சொந்த வேலை பார்க்கச் சென்று விடுவர். ஹொக்கேனகலாவது, வழிசலாவது..
சட்டப்படி அதைத் தடுக்க முடியாது என்று ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். இதை அப்படியே விட்டுவிடுவர். மக்களும் இதை மறந்துவிட்டு அடுத்த பரபரப்பான செய்திக்கு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு சென்றுவிடுவர்.
இதையெல்லாம் தன் பலவருட அரசியல் வாழ்க்கையில் கண்ட நம் முதல்வர், ஒருமாதத்தில் அமுங்கிவிடக்கூடிய ஒரு சர்சைக்கு குரல் கொடுப்பது அவசியமற்றது என்று உணர்ந்து, அறிக்கை அரசியல் போதும் என்று முடிவுகட்டி செயல்படுவார்.
ஒரே ஒரு நெருடல் என்னவென்றால், சில அரவேக்காடு அரசியல் கட்சிகள், போராட்டம் என்ற பேரில் உயிர் நாசம் செய்யும். அது மட்டும் நடவாமல் இருந்தால், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. எல்லாம் சுமூகமாக முடியும்.
-- என் ஆரூடம் பலித்தால் சொல்லுங்கள்.. தொழிலை மாற்றி விடுகிறேன். பலிக்கவில்லையென்றால் ??
அட.. நீங்கள் தமிழர்தானே. உங்கள் மறதி மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
thamizh la ezhudhumbodhu rombo matured a ezhudharey!
super!!
unnoda aarudamum valid,
makkal meedhaana nambikkayum valid :))
Aaaha...Another way to "diet" for the people by the cinema people under the guise of fast for water..lol
I second prabhukarthik! Idhu verum dramavaa illa realainnu theriyala...athavathu actors unnaviradham! Idunaala enna aadhayam thedaraangalo?
Post a Comment