Friday, April 25, 2008

தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு



தசாவதாரம் ஆடியோ ரிலீஸுக்கு நானும் கமலஹாசனும் சென்றிருந்தோம்.

(ஹே ராமில் "நான் வாழ்ந்த ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்" என்ற டையலாகை ஞாபகம் வைத்திருக்கும் பெருமக்களுக்கு நான் முதலில் சொன்னது புரியும்). உள்ளே நுழைய ஏற்பாடு செய்த நண்பர் ஷங்கருக்கும், நியாஸுக்கும் நன்றி.

வழக்கமான ஆடியோ ரிலீஸுக்கும் தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கும் பல வித்தியாசங்கள். குறைந்த பட்சம் பத்தாவது இருக்கும். அதையெல்லாம் காலை நியூஸ் பேப்பரில் பார்த்துக்கொள்ளலாம், விடுங்கள்.

நேரு உள் விளையாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. சுருக்கமாகவும், அழகாகவும் தொகுக்கப்ப்பட்டது ( நடிகை ஷோபனா, வெகு அழகாக தொகுத்து வழங்கினார்). ஆடியோ ரிலீஸுக்கு இத்தனை ஹைப்பும், கூட்டமும் இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். இன்விடேஷன் அதிகமான க்ரியேட்டிவிட்டி இல்லாமல் சாதாரணமாக இருந்தது.

முதல்வர் கருணாநிதி, சாக்கி ஜான் (கலைஞர் ஜாக்கி சானை இப்படித்தான் வரிக்கு வரி அழைத்தார்), அமிதா பச்சா (ஜாக்கி சான் அமிதாப் பச்சனை இப்படித்தான் அழைத்தார்), உலக மகா சிம்பிளாக மம்முட்டி, கருப்பு உடையில் விஜய், உடையே இல்லாமல் மல்லிகா ஷெராவத் (அதாவது கிட்டத்தட்ட), அப்புறம் ஆசின் (அசினை நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஷோபனா இப்படித்தான் அழைத்தார்), ஹேமா மாலினி, ஜெயப்ரதா மற்றும் கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் ஸ்ரீதர், ராமநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ஒருத்தருக்கொருத்தர் தன் பெயரை மட்டும் விடுத்து பாக்கி மேடையில் இருக்கும் அத்தனை பேரையும் "...அவர்களே !!! ..... அவர்களே !!!" என்று போட்டு அழைத்துவிட்டு "வாய்ப்புக்கு விடை கூறி விடை பெறுகிறேன்.. நன்றி" என்று கூறிவிட்டு சமர்த்தாக சென்றுவிட்டார்கள்.

இளைய தளபதி விஜய், நான் கேட்டு முதல் முறையாக சுவையாகப் பேசினார். "ஸ்டூடண்ட் என்னதான் புத்திசாலியா இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்த தகுதி இல்லை.. வாத்தியார் ! வாத்தியார்தான்..." என்றார்.

தயாரிப்பாளர் ஸ்ரீதர் (ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சகோதரர்) பேசுகையில் "நாங்கள் முதன் முதலில் ஜாக்கி சானைப் பார்க்கச் சென்றிருந்த போது, சாப்பாடு பறிமாறிக்கொண்டிருந்தார். நாங்களும் சாப்பிட்டோம்... literally, we were eating out of his hands" என்றார். ஆஸ்கார் பிலிம்ஸ் ஜாக்கி சானின் இருபத்து ஐந்து படங்களின் இந்திய விநியோகஸ்த உரிமை எடுத்துக்கொண்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

ஜெயப்ரதாவும், ஹேமா மாலினியும், அசினும், மல்லிகா ஷெராவத்தும் கொஞ்சிவிட்டு ஓய்ந்துவிட்டனர். இவர்களுக்கெல்லாம் சுவாரஸியமாகப் பேசவே வராதா ?

மம்முட்டி வெகு சிம்பிளாகப் பேசினார். "நான் இவங்களையெல்லாம் பார்க்கலாம்னுதான் வந்தேன். இங்கே உட்காரவெச்சுட்டாங்க." என்றார்.

இதற்கெல்லாம் முன்னதாக கே. எஸ். ரவிக்குமார் சூப்பராக ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தார். "ஏம்மா மானி லம் மாறிப் போனீங்க ?" என்று ஹேமா மாலினியைப் பார்த்தும், "Mr. Jackie Chan, we have seen you fly in the air in your stunts. Today, we fly higher in happiness of your presence" என்று ஜாக்கி சானைப் பார்த்தும் என ரகளையாக பேசினார். "என்னோட எல்லாப் படத்துக்கும் தசாவதாரத்துக்கும் என்ன வித்தியாசம்னு நெறைய பேர் கேக்கறாங்க. வழக்கமா என் படத்துல "ரெய்ன் ஸ்டார்ட்" அப்டீன்னு சொன்னேன்னா மழை வரும். "கட்" அப்டீன்னு சொன்ன நின்னுடும். இந்தப் படத்துல "ஸ்டார்ட் சுனாமி" அப்டீன்னு சொன்னா சுனாமி வந்துச்சு.. "கட்" சொன்னா நின்னுச்சு. அந்த மாதிரி, மழைக்கும் சுனாமிக்கும் உள்ள வித்தியாசம் தான் மத்த படத்துக்கும் தசாவதாரத்துக்கும்" என்றார்.

அமிதாப் பச்சன் படு ஸ்மார்ட்டாக தோற்றமளித்தார். "நான் பேசுகையில் எதற்கும் நீங்கள் கை தட்டவில்லை.. கமலஹாஸன் என்று சொன்னால் மட்டும்தான் கை தட்டுகிறீர்கள். சரி ! நான் கை தட்டல் வாங்க ஒரே வழி... கமலஹாசன் !..." பலத்த கைத்தட்டல்.. "கமலஹாசன் !!!..." இன்னும் அதிக கைத்தட்டல். "கமலஹாசன்.. !!!!" அரங்கமே அதிர்ந்தது. "நன்றி.." என்று சொல்லிவிட்டு அமிதாப் சென்றுவிட்டார்.

கமலஹாசன், தெள்ளத்தெளிவாக தமிழில் புரண்டு விளையாடினார். எல்லாரையும் பாராட்டினார். "இந்தப் படத்தில் ஒவ்வொரு பாராட்டையும் எங்கள் குழுவினரைச் சாரும். இந்தப் படத்தின் ஒவ்வொரு குறையும் என்னை மட்டுமே சாரும்..." என்றும் "Mr. Jackie Chan. I have 32 fractures in my body. Thanks to you" என்றும் பேசினார். ஆனால் எக்ஸ்டெம்போராக இல்லாமல், சம்பிரதாயமாக ப்ரிப்பேர் செய்ததைப் படித்தார். ஆனால் சுவை படப் படித்தார். தயாரிப்பளரைப் பாராட்டும் போது "பெருஞ்செலவாளர்" என்று கூறினார். இதைக் கேட்ட தயாரிப்பாளர் வயிற்றில் பால் வார்க்குமா.. புளியைக் கரைக்குமா ? படம் வரட்டும் சொல்கிறேன். இன்னுமொரு சுவாரஸ்யம். "ஹிமேஷ் ரேஷமய்யாவினால் இங்கு வர முடியவில்லை. ஹிமேஷ் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டார்" என்று ஹாஸ்யமாக பயங்கர அர்த்தபுஷ்டியுடன் சொன்னதில் நான் பல விஷயங்கள் புரிந்துகொண்டேன்.

முதல்வர் கருணாநிதி வழக்கம் போல் தம்பி கமலஹாஸனை (!) பாரட்டிப் பேசினார். அத்தோடு நில்லாமல்.. "கமலஹாசன் பிறந்த வருடம் 1954. சாக்கி ஜான் பிறந்த வருடமும் 1954..." என்று ஆரம்பித்து ஜாக்கி சானின் வாழ்க்கை வரலாற்றை அழகாக வாசித்தார். "கமலின் அத்தனை வேடங்களையும் புகைப்படத்தில் பார்த்துவிட்டு, அவரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன்" என்று சொன்னார். "கமல் இனிமேல் உலக நாயகன் அல்ல. உலக மகா நாயகன்" என்று பட்டம் அளித்தார்.

எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது ஜாக்கிசானின் உரை. "இந்த மேடையில் யார் பேசியதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை என்பேர் சொன்ன போதும் கை தட்டினீர்கள். உங்கள் அன்பு எனக்குப் புரிந்தது. அன்புக்கு மொழி தேவையில்லை." என்று சொல்லி இந்த விழாவின் மிகப் பெரிய கைத்தட்டலை பெற்றுக்கொண்டார். "கமல் நடித்தவற்றைப் பார்த்தேன். ப்ரொட்யூசர் சார், டைரக்டர் சார்.. நானும் நன்றாக நடிப்பேன். பாடுவேன்.. ஆடுவேன்... என்னை வைத்தும் படம் பண்ணுங்களேன்..." என்று வெகுளியாகக் கேட்டார். "கமல்.. நீங்களும் நானும் சேர்ந்து வேலை செய்வோம்.." என்று உறுதியளித்தார்.

ஆக மொத்தத்தில்.. விழா சென்றது போரடிக்காமல் சுவாரஸ்யமாக இருந்தது.

முக்கியமான விஷயம் - ஆடியோ. இரண்டு மூன்று பாடல்கள் போட்டுக் காண்பித்தனர். ஒன்றும் இப்பொழுது நினைவில் தங்கவில்லை.

13 comments:

balu76in said...

nice reporting, keerthivasan. you have beaten the ToI, TH and other vernacular newspapers in reporting about Dasavatharam audio release function

பிச்சைப்பாத்திரம் said...

//தசாவதாரம் ஆடியோ ரிலீஸுக்கு நானும் கமலஹாசனும் சென்றிருந்தோம்.//

:-) good start.

Manki said...

குறிப்புகளுக்கு நன்றி. ரசிக்கும்படியாக உள்ளது. ஹைலைட்ஸ் பார்த்த திருப்தி! :-)

Shobana said...

You are very lucky! To be amidst all those stars and to hear them speak in live...wow! What was the big need to bring Jackie Chan to this audio release? What is the connection??

Shreekanth said...

Dei Keerthi.... Sony BMG Sridhar pesinadhu.... ? Rombo simple aaga mudithaare... "There is more interesting speech to come from other people in the dias. Thank you "

Ramya said...

nice writeup.. enjoyed,,.. anga camera allow panlaya,.. endha photos um edukalaya,,.. who looked smarter or rather younger? jackie or kamal??

Jeevan said...

I was expecting this from you keerthi, well written about the Audio release. i am waiting to buy the CD soon...

Sowmya said...

slakichu, rasichu, anubhavichu nirai, kuraigalai alasi poorithu pogum ungalukku intha vaaippu kidaithathu, mikka mahizhchiye !

"Blog's subbudu " appdinnu pattam tharalam pola irukku keerthi :) eethupeengala !

Unknown said...

good narration!!! its like being there....

u can try writing novels, if you haven't started one....

Narayanan Venkitu said...

Good job with the details Keerthi..! Liked it.

I listened to the songs. I would give a 'B' for Him Resh.!

Sad that Kamal decided to go to HR IR would have been better..AR would have been best!

KRTY said...

GVB Sir, thank you.

Suresh Kannan, he he:) thanks.

Manki, Nandri.

Shobana, the producers of the movie were primarily successful out of distributing Jackie Chan films.

Shreekanth, Yeah. That was missed !! And forgotten. His mistake.. not mine. ;)

Ramya Harish, Thank you. Kamal of course. Thats for the smart part. Young ? Amithabh looked younger than both.

Jeevan, thanks. The songs are good. Let me know, after you hear.

Sowmya, thangal magizhvu enakku aanandham. Subbuduvaa ? Adhukkellam Nyaanam venum. I rarely review.. i mostly write what i observe. No analysis. Just reports. So, nyaanam vara varaikkum "Avyukta Keerthivasan"aave irukken. Venumna, subbuduvai pathi pesum bodhu, "Keerthi madhiriye vimarsanam senjaar"nnu sollikalaam ;)

Dhaa, thanks mate. You know my failure in writing a "Thodar Kadhai". Idhule Novel verayaa. ? I think it will take some time for me to mature and then write. Hopefully, you are still interested in reading at that time.

Venkittu Sir, given the iyengar part, Ilayaraja would have stolen the show.. better than Kamal. Nyway, Himesh is not too bad, as i feared.

துளசி கோபால் said...

சூப்பர் கவரேஜ்.

நன்றிப்பா.

என்ன ஒரு சல்லியம்(-:

இந்த வேர்டு வெரிஃபிகேஷன்.

இன்னும் இது வேணுமா?

Unknown said...

Hi Keerthi...

You are too good in what ever you do...As I told you I could see shades of "Sujatha"in you...As Dhaa said better start writing novels...or try sending articles to magazines...you have a very good writing style...It is high time you get into a bigger league...
All the best