Wednesday, April 30, 2008

தொழில் நுட்பம்

நுட்பம் - தொழில்நுட்பம்

என்ன வித்தியாசம் ? தமிழறிஞர்கள் விளக்குக.

1994ல் என் மாமா அமெரிக்காவிலிருந்து வந்தபோது, அவரிடமிருந்த ஒரு பொருளை லவட்டிக்கொண்டு பள்ளியில் ஸீன் காமித்தது இன்று நினைத்தாலும் காமெடியாக இருக்கிறது. அது என்ன பொருள் தெரியுமா ? சி.டி.

பள்ளியில் மற்ற நண்பர்களிடம் காண்பித்து, "இதுக்குள்ள ஆயிரம் பேஜுக்கு லெட்டர் அடிக்கலாம்.. தெரியுமா ?".. என்பேன். ஆயிரம் காலி பேப்பர்களை இதற்குள் எப்படி சொறுகினார்கள் என்பது மனதிற்குள் உதித்த ஒரு குழப்பம். இருந்தாலும், புகழ் வரும் வேளைகளில் கேள்வி கேட்பது யூஸ்லெஸ்.

பிற்காலத்தில் இது இவ்வளவு தண்ணிப்பட்டப் பாடாக சி.டி. கிடைக்கப் போகிறது என்ற ஊகம் அப்போது இருக்கவில்லை.

1998ல் கையில் ஒரு லேப் டாப் கிடைத்தது. அதில் சி.டி. டிரைவ் இருக்கும். ஆனால் போட்டுப் பார்க்க என்று "விண்டோஸ் 98" சி.டி. மட்டும்தான் இருந்தது. அந்தக் காலத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் என்ற சௌகர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கத்துவங்கியது. நண்பர்கள் வீட்டில், பழைய இரும்பு மேஜையில் வெள்ளை கலர் கம்ப்யூட்டர் மினுக் மினுக் என்று மின்னிக்கொண்டிருக்கும். அவர்களுடைய டேபிள் டிராயரைத் திறந்தால் சில பல சி.டிக்கள் எட்டிப் பார்க்கும். அடச்சே ! நம் வீட்டில் இல்லையே என்று "சிப்" மேகஸினை மாதா மாதம் வாங்க ஆரம்பித்தேன். நூறு ரூபாய்க்கு சில பரீட்சார்த்த மென்பொருள்கள் (trial software.. ஆஹா !), ஒரு சில டெமோ கேம்கள், ஷாருக்கான் ஐஷ்வர்யா ராய் படங்கள் என்று பெரும்பாலும் எனக்கு உபயோகமில்லாத விஷயங்கள் ஏறாளம்.

ஆனால், எனக்குள் "எல்லாரும் இந்த சி.டி.யை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை.. ஒருவேளை நமது கம்ப்யூட்டர் அறிவு அவ்வளவுதானோ !!" என்று தோன்றும்.

டர்போ சி ப்ளஸ் ப்ளஸ் (Turbo C++) என்ற ஒரு மென்பொருள் கையில் சி.டியாக கிடைத்தது, என்னை என் ஏரியாவில் ராஜா ஆக்கியது. பில் கேட்ஸின் தம்பி மாதிரி இங்கும் அங்கும் ஓடி அத்தனை வீட்டிலும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன். அந்த சி.டி யை கர்சீப் போட்டு சுற்றி சர்வ பத்திரமாக எடுத்துச் செல்வேன். அப்பொழுதைய காலம் வரைக்கும் சி.டி என்றால் மென்பொருள் வைத்திருக்கும் வஸ்து என்பது என் எண்ணம்.

1999ல் அதே அமெரிக்க மாமாவின் பையன் ஏர்போர்ட்டில் டிஸ்க்மேனுடன் இறங்கி ஒரு கல்சர் ஷாக் கொடுத்தான். அப்பொழுது தான் ஆடியோ சி.டி பிளேயர்களை நான் பார்க்க ஆரம்பித்திருந்தேன். நண்பர்கள் வீட்டில் த்ரீ சி.டி. சேஞ்சர்கள் வர ஆரம்பித்தன.

கொஞ்ச காலம் கழித்து சம அளவில் பாடல்களும், மென்பொருளும் கலந்து சி.டிக்கள் சேகரித்திருந்தேன். மொத்த எண்ணிக்கை எட்டு. நியூஸ் பேப்பரில், பிரிட்டனில் ஒரு புல்டோசர் குப்பையாகிவிட்ட சி.டிக்களின் மேல் ஏறி குப்பையை அழித்ததை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

மெது மெதுவாக, சி.டி. ரைட்டர் வர ஆரம்பித்தது. இதுவும் நண்பர்கள் வீட்டில்தான். அரிதாக எம்.பி.த்ரீ (MP3) யும் வர ஆரம்பித்தது. முதன் முதலில் "சங்கமம்" படத்தின் பாடலை ஸ்ப்ளிட் செய்து இரண்டு ப்ளாப்பிகளில் ஆறு தடவை நண்பன் வீட்டுக்குச் சென்று எடுத்து வந்தேன்.

நிற்க.

எட்டு வருடம் ஓட்டினால், 2008.

இப்பொழுது சி.டி யை டி.வி.டி ஓவர் டேக் செய்து, துணைக்கு ப்ளாஷ் டிரைவ்கள், எம்.பி.3 பிளேயர்கள், ப்ளூ ரே என்றெல்லாம் டெக்னாலஜி புற்றீசலாய் விரவி நிற்க, சி.டி என்கிற காம்பேக்ட் டிஸ்க், வாழ்ந்து கெட்ட பரம்பரையாய் நிற்கிறது.

திருட்டு வி.சி.டிக்கள் கூட புழக்கத்தில் குறைய ஆரம்பித்துள்ளது. டி.வி.டி தான் இருபது ரூபாய்க்குக் கிடைக்கிறதே ! இப்பொழுதும் எண்ணிப் பார்த்தால், டிராயரில் எட்டு சி.டிக்கும் குறைவாகத்தான் இருக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு சி.டி என்பது மறக்கப் படலாம்.

ஆனால், எங்கள் தலைமுறைக்கு, அதாவது கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்த முதல் சில தலைமுறைகளுக்கு தேய்ந்து தேய்ந்து சேவை செய்த சி.டி, தொழில்னுட்பத்துக்கெல்லாம் பேருதவி செய்த ஒரு தொழில்னுட்பம்.

அது ஏன் திடீரென சி.டி. பற்றி ஒரு போஸ்ட் என்று கேட்கிறீர்களா !
"வாடி வாடி வாடி ! கை படாத சி.டி" என்ற பாடல் மதியம் FMல் ஒலிபரப்பானது.

அந்தப் பண்பலையில், நினைவலைகள் எண்ணக் கரையில் கொஞ்சம் ஒதுங்கிவிட்டுச் சென்றன.

6 comments:

Anonymous said...

Good one!

Esp. andha last line supera irukku :)

Unknown said...

I read somewhere recently


UK- living in past glories with no future.

Yeno theriyala..solla thonichu sonnaen.

Anonymous said...

கீர்த்தி!
போஸ்ட் பட்டையைக் கிளப்புது!
'பண்பலையில் நினைவலைகள்', 'வாழ்ந்து கெட்ட பரம்பரையாய்', 'டெக்னாலஜி புற்றீசலாய் விரவி நிற்க' - சுவாரசியமான சொற்பிரயோகங்கள்! கலக்குறே கீர்த்தி..!

Ramya said...

Good post keerthi.. i was thinking of my experiences with cd.. i had lots n lots from niit.. they used to give monthly.. aana adhulayum vendhadha vishayangal jaasthi..
Ellam tamizh la ezhudineenga.. Cd ku enna.. ----thattu?? sum mistakes like yeraalam, thozhilnatpam , vallina ra, na(thozhilnutpam) adhelam kanna arikudhu, ivlo nalla post la..

Seri, nutpam, thozhilnutpam enna vidyaasam

KRTY said...

PK, thanks !

Kannan, eh !!

Venkataramanan, thanks !

Ramya Harish, thanks. Abt Spelling mistakes... I loose my next sentence, when I'm correcting mistakes in my current one. And when it is completely done, a thorough read still doesnt filter a few. So, it will eventually get better. Until then Poruththarulga.

Anonymous said...

nice post... its remainding me my experience with CDs

CD-ke ivlo feelings na, athuku munna iruntha floppy disk kaalam ellam nenachu paartha innum payangara feelings varum pola