Wednesday, April 09, 2008

சைவ சமையல் திருத்தலங்கள் - II

மக்கள் சேவையே மகேசன் சேவை.

ஆகவே, நான் ரசித்து ருசித்த சில விஷயங்களை இங்கே பகர்கிறேன். சென்னையில் இருந்தால் இதையெல்லாம் சாப்பிட முயற்சி செய்து பாருங்கள்.

1. பாலிமர் ஹோட்டல் - சாம்பார் வடை
என்னதான் சரவண பவன் சாம்பார் வடை சூப்பராக இருந்தாலும், பாலிமரின் சாம்பார் வடை உங்களை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும் (நீங்கள் சாம்பார் வடை ரசிகராக இருந்தால்). சாம்பார் வடை என்றால் உளுந்து வடையை வெறுமென மகாமகச் சாம்பாரில் முக்கி எடுப்பது அல்ல. இதற்கென்று சில க்ரமங்கள் உள்ளன. சாம்பார் வடைக்காக பொறிக்கும் வடையில் மிளகு இருக்கக் கூடாது. வடை வென்னீரில் கொஞ்சம் ஊறவைத்து பின்னர் சாம்பாரில் ஜீவசமாதி அடைய வேண்டும். சாம்பார் வடையை சாப்பிட வெட்டும் போது உள்ளே வெள்ளையாக தெரிந்தால் அபச்சாரம். பாலிமரில் ட்ரை செய்து பாருங்கள்.
2. அடையார் ஆனந்த பவன் - மினி ஜாங்கிரி
இப்பொழுதெல்லாம் யாருக்கும் ஜாங்கிரி சுத்தவே தெரிவதில்லை. கொதிக்கின்ற எண்ணை வாணலியில் ஓட்டை போட்ட துணியால் ஜாங்கிரி மாவை பிழிய வேண்டும். அந்த ஷண விநாடிக்குள் சுற்று சுற்று என்று சுற்ற வேண்டும். பல வருடங்கள் முன் சாப்பிட்ட ஜாங்கிரியை நினைத்துப் பாருங்கள். அடியில் தனக்குத்தானே அஸ்திவாரம் போன்ற ஒரு வட்டமிட்டுக்கொண்டு அதன் மேலே சுருள் சுருளாக ஜீரா ஊரிக் கிடக்கும். இப்பொழுதெல்லாம் யாரும் ஷேப்பில் கான்சென்ட்ரேட் செய்வதில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் டேஸ்ட் அபாரமாக இருக்கின்றது. பார்வதி பவன், ஆனந்த பவன் மற்றும் ராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ் (பேரிஸ் கார்னர்) - இங்கெல்லாம் பிரமாதமாக இருக்கும். வில்லிவாக்கத்தில் செல்வம் கடை ஜாங்கிரி இன்னும் பிரபலம். இன்றைய ஜெனரேஷன் அதிகம் விரும்பாத ஒரு பட்சனமாக ஜாங்கிரி ஆனதற்கு, ஸ்வீட் ஸ்டால்களெ காரணம். அடெடே ! ஜாங்கிரி பற்றி தனி பதிவே போடலாம் போல இருக்கிறதே.
3. ஹோட்டல் மதுரா - ஆனியன் ரவா
ஹோட்டலில் "வெங்காய ரவா தோசை" என்று சொன்னால் சற்று ஏறிட்டுப் பார்ப்பார்கள். ஸ்ட்ரீட் ஸ்லாங்கில் "ஆனியன் ரவா" என்று சொன்னால்தான் புரியும். அண்ணா சாலையின் முக்கில் தாராபூர் டவர்ஸின் இரண்டாம் தளத்தில் உள்ளது மதுரா ரெஸ்டாரெண்ட். ஆனியன் ரவாவின் ஜீவன், தொட்டுக்கொள்ளும் சாம்பாரில் உள்ளது. முன்பெல்லாம் அங்கங்கே கிழிந்து ஓட்டை ஓட்டையாய் தொங்கும் பெண்களின் டிசைனர் துப்பட்டா மாதிரி இருக்கும் ரவா தோசை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. திருச்சி அபிராமி ஹோட்டலில்(சென்னை வசந்த பவனின் மூலக் கிளை) வேறு வழியில்லாமல் சாப்பிட்டதிலிருந்து பிடித்துப் போய் விட்டது. முருகன் இட்லி கடை ஆனியன் ஊத்தப்பம் மாதிரி, இங்கே மதுராவில் ஆனியன் ரவா.
4. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ரசம் ரெஸ்டாரெண்ட் - இளநீர் பாயசம்
இது கொஞ்சம் வித்தியாசமான ஐட்டம். எப்படி என்று என்னால் டிஸ்க்ரைப் செய்ய முடியாது. ஒரு சிப் குடித்து முடித்துவிட்டு குணா கமல் மாதிரி பரவச நிலைக்குச் சென்றுவிடக்கூடிய அளவுக்கு, இது ஒரு எக்ஸ்டஸி ட்ரிங்க். தம்மாத்தூண்டு குடுவையில் கொடுப்பார்கள் - நூறு ரூபாய் கேட்பார்கள் என்பதால் இதை அடிக்கடி சாப்பிடுவதில்லை. ஆனால், ஆஹா ! என் நா என்றும் மறக்காத உறவு, இளநீர் பாயசத்துடனான அந்த cute and short affair தான். யார் தலையிலாவது மிளகாய் அரைத்து ட்ரீட் செல்கிறீர்கள் என்றால், புரசைவாக்கம் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மாடியில் இருக்கும் ரசம் ரெஸ்டாரெண்டுக்குச் சென்று "இளநீர் பாயசம்" ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்.

ஏவ் !

7 comments:

Shivathmika said...

ippave ilaneer payasam kudikkanum pola irukke... villivakkam selvam sweets pathi perumaiya sonnadhu, sandoshama irukku...

Anonymous said...

Item 4 is damn expressive. You have a good taste for food and words to express it. Elumichambazha fotographum nalla irukku.

பிரேம்ஜி said...

அருமையான விவரிப்பு. படிக்கும்போதே சாப்பிடதோணுது

Unknown said...

Very Informative and interesting Post... Thanks...

May i know where the Polymar Restaurant is located in chennai?... You can mention the exact place also when u write abt some unknown but good resturants (Like u written Tarapore towers for madura restaurant)...

Satheesh

KRTY said...

Shivathmika, Purasaiwalkam is not far :)

Premji and Anon, thank you.

Satheesh, Palimar is right below the Gemini fly over, at the end of the Nungambakkam high road.

MeenaArun said...

Keerthi,did you tried sendur opposite to spencer,near that signal junction.awesome varities of veg food there.

Ramya said...

naa oru saapatu raami.. indha post a paathutu, vaay vooruthu keerthi.. ilaneer payasam kandippa taste panniye aaganum..
Enaku sambar vadai na Tiruvellikeni Ratna cafe dhan, mug mug a sambar a kottuvaanga..apdiye amrutham madri irukkum.. adhoda matha branches not as good as triplicane.. i have had sambar vadai in palimar too.. enaku palimar oda rasa vadai romba pidikkum..