Thursday, May 08, 2008

ஹாபி - 2

உலகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உபயோகமானது.. இன்னொன்று உபயோகமற்றது. இதில் உபயோகமானது என்பது மட்டும் உபயோகமில்லாதது என்று மேதாவிகள் அறிவர்.

ஹிஹி ! இப்படி ஏதாவது ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் அவா ! நீங்கள் தலையை சொறிய வேண்டாம். ஹாபி மேட்டருக்கு வருவோம். உங்கள் ஹாபி என்ன என்று கேட்டதற்கு, கொஞ்சம் வித்தியாசமாகவே எல்லாரும் எழுதியிருந்தீர்கள். "இப்போதைய ஹாபி, டையப்பர் மாற்றுவது !" என்று அனுபவஸ்தர்கள் கூறியதிலிருந்து பெரும்பாலும் ஹானெஸ்டாக எழுதியிருப்பீர்கள் என்பது தெரிகிறது.

"இதென்ன ஹாபிக்கும் ஹானெஸ்டிக்கும் சம்பந்தம் ?" என்று கேட்பவர்களுக்கு, ஒரு சிறு விளக்கம். கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு பதில் சொல்லும் சிலர், உண்மையை பேசுவதில்லை. அவர்கள் குறிக்கோள் உண்மை பேசுவது இல்லை. அவர்கள் குறி எல்லாம் பதில் சொல்வதில் தான்.

உதாரண கேள்வியாக, "உங்க ஹாபிஸ் என்னென்ன ?" என்பதை எடுத்துக் கொண்டால், நம் உதாரண ஆசாமி கொஞ்சம் யோசிப்பார். "அடெடே ! இதென்ன கேள்வி ? ம்ம்ம்ம்... என்னவென்று சொல்வது.. பொழுதுபோக்காக நாம் செய்யும் விஷயங்கள் என்ன ?? .... பொழுதுபோக்கா ?? ம்ம்ம்... " என்று ஒரு செல்ப்-ரியலைசேஷன் மோடுக்கு சென்று விடுவார். மீண்டு வந்து அவர் சொல்லும் பதில், முக்காலே கால் வாசி "வாட்சிங் டி.வி" ஆக இருக்கும்.

நான் பார்க்கும் வட்டத்திற்குள், மக்கள் "ஹாபி" எக்குத்தப்பாக டிஃபைன் செய்திருக்கிறார்கள். என் நண்பனிடம் நேற்று கேட்டதற்கு, "போடா ! ஹாபின்னு எல்லாம் ஒன்னும் கிடையாது. டெய்லி பால் வாங்கிட்டு வருவேன். அதை வேணும்னா சொல்லலாம்." என்றான்.

ஒன்று - மக்களுக்கு தங்கள் ஹாபி என்ன என்பதை விளக்கத் தெரியவில்லை. அல்லது பொழுதை கழிக்கத் தெரியவில்லை. உதாரணமாக திடீரென முதலாளி / பாஸ் லீவ் கொடுத்து ஒரு மாதம் என்ஜாய் செய்ய பெர்மிஷன் கிடைத்தாலும் எவ்வளுவு பேர் அதை சுகமான விடுமுறையாக அதை ட்ரான்ஸ்பார்ம் செய்வார்கள் ???

கையில் ஒரு சேட்டர்டே சண்டே யை வைத்துக்கொண்டு, அவற்றுள் மணித்துளிகளை நிறப்ப கஷ்டப் படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். நானும் அதில் ஒருவனாக இருந்திருக்கிறேன். '

ஒரு காலத்தில் "ஸ்டாம்ப் கலெக்டிங்" என்பது பள்ளிகளில் - "ஹாபி" என்ற வார்த்தை தெரிய ஆரம்பிக்கும்போது, தெரிய ஆரம்பித்த ஹாபி. சில பேர் இன்னும் அதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதன் லாஜிக் எனக்கு அன்றும் இன்றும் புரியவில்லை. மாமா வாங்கிக்கொடுத்த ஸ்டாம்ப் புக்கும், ஆயிரம் ஸ்டாம்புகளும் எனக்கு முதல் ஹாபியாக "ஸ்டாம்ப் கலெக்டிங்" நிறுவப்பட்டது. அப்புறம் ஸ்டாம்ப் கிடைக்காமல், இன்லேண்ட் கவரில், போஸ்ட் காட்டில் ப்ரிண்ட் ஆகியிருந்த ஸ்டாம்புகளை எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்புறம் வளர்ந்து விட்டேன்.

---- டு.பி.கன்டின்யூட்.

(அவசரமாக நான்கு நாள் லீவ் போட்டு வெளியூர் செல்கிறேன். வந்து தொடர்வோம்).

2 comments:

யாத்ரீகன் said...

நாலு நாள் லீவுல என்ன பண்ண போறீங்க கீர்த்தி :-)

Ramya said...

saturday sunday va nirappa kashtama?? enna koduma saravana..