Friday, June 06, 2008
நற்றுணையாவது நாராயணனே !
The two pictures above are Hi-Resolution pictures photoshopped from some telugu posters available. I took out any text material that was disturbing the picture.
இந்து அமைப்புகள், சரித்திரப்படி சைவ வைணவ சண்டைகள் இருந்ததில்லை என்று வாதிட்டனர். அதெல்லாம் சரியோ, தப்போ !!!
கொஞ்சம் ரங்கராஜன் நம்பியை உசுப்பிப் பார்ப்போம்.
கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயமே !
அதாவது மக்களே !! இந்த காலத்தில் விஜய் - அஜித் சண்டை.. முன்பு ரஜினி - கமல்.... அதற்கு முன்பு எம்.ஜி.ஆர் - சிவாஜி... அதற்கெல்லாம் முன்பு... பெருமாள் - சிவன். எல்லா சண்டையும் நடந்திருக்கிறது. ஆழ்வார்க்கடியவன் சண்டையை "பொன்னியின் செல்வனில்" படித்தால் விளங்கும்.
நண்டு சிண்டுகளெல்லாம், "தோ ! நானும் தசாவதாரத்தின் மீது கேஸ் போடப்போகிறேன்" என்று ஆரம்பித்துள்ள நிலையில், நானும் தசாவதாரத்தின் மீது கேஸ் போடலாம் என்று இருக்கிறேன்..
முதல் கேஸ் - ஹிமேஷ் ரேஷமைய்யா மீது. ஐயங்காரின் பல்லாண்டு பாடலை கடித்துத் துப்பி பாடவைத்து இசையமைத்ததற்காக. "ஹே ராம்" படத்தில் இளையராஜா "மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத..." எப்படி டச் செய்யாமல் "கனாக் கண்டேன் தோழி" மட்டும் டச் செய்திருப்பார். அப்படி பல்லாண்டிற்கும் மரியாதை செய்திருக்க வேண்டும்.
இரண்டாம் கேஸ் - கதாசிரியர் மீது. சைவ வைணவ சண்டையாக முதல் ஸீனை காமிக்காமல், இப்படி எழுதியிருக்க வேண்டும். நெப்போலியன் - ஒரு ஊரில் ஒரு ராஜா. அவர் ஊரில் ஒரு பிராமணர் - ரங்கராஜன் நம்பி. நெப்போலியன் புதிதாக ஒரு கட்டளை பிறப்பிக்கிறார். "இனிமேல், நாமெல்லாம் பொங்கலன்றுதான் தமிழ் வருடப் பிறப்பு கொண்டாட வேண்டும். ராமர் பீ.ஈ. படிக்கவில்லை... இந்து என்றால் திருடன் !!" என்றெல்லாம் சொல்லுகிறார். ரங்கராஜன் நம்பி "முடியாது போங்கடா !!" என்று சொல்ல, நம்பியை கடலில் கட்டித் தூக்கிப் போடுகிறார்கள். இப்படி கதை எழுதியிருந்தால், எந்த இந்து அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்திருக்காது. கேஸும் போட்டிருக்காது.. அது தான் உண்மையாக நடக்கும் இந்து மதத் துவேஷங்களுக்கே அவர்கள் குரல் கொடுக்கவில்லையே...
உங்களுக்கு ஏதாவது கேஸ் மனதில் தோன்றுகிறதா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment