Saturday, June 07, 2008
இனிமேல் ஒபாமா நல்லவர்
பதினாறு மாதங்கள் நடந்தகுடுமிப்பிடி சண்டை ஓய்கின்றது. இதனால், வெள்ளை மாளிகையில் ஹிலாரி க்ளிண்டன் ஜனாதிபதியாக நுழைவது துர்லபமாகின்றது.
அவருடைய வாஷிங்டன் உரை - இங்கே படிக்கவும். இங்கே பார்க்கவும்.
என்னாங்கடா இது.. கலர் கலரா ரீல் வுடரீங்க... !! உங்க ஊரிலே கோஷ்டிப் பூசல்.. கோஷ்டிப் பிளவு.. உட்கட்சி சண்டை எதுவுமே கிடையாதா... கோபத்தில் "ஹிலாரி அனைத்து அமெரிக்க டெமாக்ரடிக் பார்ட்டி" என்று ஒரு கட்சி ஆரம்பித்து மெக்கெய்னுடன் கூட்டணி வைத்து "ஒபாமா பேரக் காங்ரஸ் பில்டிங்குக்கு தண்ணி அடித்துவிட்டுத்தான் வருவார்" என்றெல்லாம் அறிக்கை விட வேண்டாமா ?
இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த பில் க்ளிண்டனால் தன் ஜனாதிபத்தினியை ஜனாதிபதியாக்க முடியவில்லையே !! நம்ம ஊர் லல்லு பிரசாத்தை விட்டிருந்தால் ரப்ரி தேவியை அங்கே அமரவைத்திருப்பார். கலைஞர் கணிமொழியை டெக்ஸாஸின் கவர்னராக அமரவைத்திருப்பார். ராமதாஸ் அண்புமணியை வைஸ் ப்ரெஸிடெண்டாவது ஆக்கியிருப்பார்.
America is a bad country for Indian politics.
ஜோக்ஸ் அபார்ட் - டெமாக்ரெடிக் கட்சியின் முதிர்ச்சி இதில் தெரிகின்றது. இனிமேல் ஹிலாரியும் ஒபாமாவும் ஒன்றாகச் செயல்பட்டால்தான் "கறுப்பர்" என்ற முத்திரையைத் தாண்டி ரிப்பப்ளிக்கன் கட்சியின் மெக்கெய்னுடன் வலுவாகப் போட்டி போட முடியும். என்னதான் அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும், நிறபேதங்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக இந்தத் தேர்தல் முடிவு அமெரிக்காவின் நிற பேதத்தை எடுத்துக்காட்டக்கூடும்.
சர்வ நிச்சயமாக ஒட்டுமொத்த அமெரிக்காவின் கறுப்பர்கள் ஓட்டு அனைத்தும் ஒபாமாவுக்குத்தான் என்றாலும் கொஞ்சம் உதறலாகத்த்தான் இருக்கிறது.
காத்திருந்து பார்ப்போம். நவம்பர் மாதம் வெகு தூரத்தில் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Yes, it is going to be an interesting election ever. Even better than the last presidential election. Let's just hope that the White house will not house another fool, who will reel off other people's statements.
>>america is a very good country for american politics
I am dealing with typical american politics for the past five months at work..
Desi politics madhiri chillarai thanam laam irukaadhu??
but avanga style la azhaga kaluthu arupaanga!
They are just different not better... IMHO
Post a Comment