"ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ !" - கம்பராமாயணத்தில் குகன் பரதன் வருகையை ஒட்டி சொன்னது, எனக்கு இப்பொழுது கனக்கச்சிதமாகப் பொருந்துகின்றது.
தாம்பரம் ஆபீஸுக்கு மாற்றலாகி இரண்டு இரயில்களில் ஏறி இறங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் பயணத்திலும் வெட்டித்தனமான சிக்னல் ஸ்டாப்புகளிலும் செலவிடுகிறேன். அலுவலகம் ஒரு சிறிய குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. டோரா சொல்வது தான் ஞாபகம் வருகின்றது. "காடு... மலை.... !!!!"
டோரா - தெரியுமா உங்களுக்கு. "காடு.. மலை.. நீளமான கடல்.." என்று ஆரம்பிக்கும் இந்த சுட்டி டீ.வி மற்றும் போகோ சேனலின் படு ஹிட்டான ஷோ !
டோரா தி எக்ஸ்ப்ளோரர் - இந்த ஷோ குழந்தைகளைப் பெற்றோருக்கு ஒரு வரப்ரசாதம். திரையில் டோரா தெரிய ஆரம்பித்தவுடன், அறுந்த வாலாக இருந்தாலும் அசமஞ்சமாக இருந்தாலும்... பாரபட்சம் இல்லாமல் எல்லா குழந்தைகளும் கண்ணிமைக்காமல் பார்க்க ஆரம்பிக்கின்றன.
டோரா என்றொரு சிறுமி, பூட்ஸ் என்றொரு குரங்கு (தமிழில் ஏனோ புஜ்ஜி என்று நாமகரணம் சூட்டியாகிவிட்டது). இருவரும் ஒரு அட்வென்ச்சர் ட்ரிப் மேற்கொள்வர். அதில் அவர்கள் செல்ல வேண்டிய பாதைகளை, ஆடியன்ஸிடம் கேட்பாள். "குழந்தைகளே ! இப்போ நான் அந்த குகையை அடைய எந்த வழியா போகனும் ??" என்று மூன்று ஆப்ஷன் கொடுத்துவிட்டு, பெரிய முட்டைக் கண்களால் விழித்துப் பார்க்கும். நம்ம வீட்டுக் குட்டிப் பசங்க ஆர்வமா டி.வி ஸ்க்ரீனைப் போய் தொட்டு சரியான விடையைச் சொல்ல முயற்சிப்பர்.
ஆரம்பத்தில் தச்சு இதைப் பார்ப்பது எனக்கு எரிச்சலாக இருந்தது. அவனுடைய க்ரியேட்டிவிட்டியை இது மழுங்கச் செய்துவிடுமோ என்று. நல்லவேளையாக அவன் புத்திசாதித்தனத்தால் அதிலிருந்து சில விஷயங்கள் கற்றுக்கொள்கிறான்.
குழந்தைகள் இருக்கும் வீட்டின் டி.வி. டைமை, ஒரு கணிசமான பகுதியை சுட்டி டி.வி. எடுத்துக்கொள்கிறது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி கொஞ்சம் போகோ சேனலும் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு மிச்சம் மீதி மீந்துபோன சீரியல்கள் மட்டும் பெற்றோர்களுக்கு எஞ்சும். சன் குழுமத்தில், சுட்டி டி.வியால் படு லாபம்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் "டோரா" சூப்பர் ஹிட். எந்த அளவுக்கு ஹிட் என்று கிரஹிக்க முடியாதவர்களுக்கு அளவுகோல்கள் தருகிறேன்.
டோரா - ஸ்கூல் பேக்.
டோரா - வாட்டர் பாட்டில்.
டோரா - நோட் புக்.
டோரா - கலர் கலர் பால்.
டோரா - ஸ்டிக்கர் புக்
டோரா - கர்சீப்
டோரா - படம் போட்ட குழந்தைகள் உள்ளாடைகள்
டோரா - படம் போட்ட குழந்தைகள் டிரஸ்கள்
டோரா - சாப்பாட்டுக் கிண்ணம்
டோரா - படம் போட்ட ஷூ மற்றும் செருப்பு.
இவையெல்லாம் நான் கண்கூடாகப் பார்த்தவை. "நீ நல்லா சமத்தா இருப்பியாம். அம்மா உனக்கு அப்பொதான் டோரா கர்சீப் வாங்கித் தருவேன்.." போன்ற ப்ளாக்மெயில்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.
அதிலும் முக்கியமாக டோராவில் வரும் "மோசமான குள்ள நரி" பழங்காலத்து பூச்சாண்டிக்கு சப்ஸ்டிட்யூட். "சீக்கிரம். சீக்கிரம்... அப்புறம் மோசமான குள்ள நரி வந்து தேஜா குட்டியோட த்ச்சு மம்மம்மை சாப்டுடும்... ஆ.. ஆ..காமி !!"
ஆபீஸில் அடிக்கடி டோரா பற்றி பேசுவோம். அதன் நல்லது கெட்டது பற்றி. சில சிறுவர்கள் - ஐந்தாம் வகுப்பு வரை - சில சமயம் வேறு வழியில்லாமல் இன்னும் டோரா பார்ப்பதாகச் சொல்லுவார்கள்.
அந்த காலத்து டி.டி யில் "கண்மனிப் பூங்கா"வும், அப்பப்போ வரும் பத்து நிமிட கார்டூன்களும் மட்டுமே குழந்தைகள் நிகழ்ச்சிகள். இப்பொழுது - போகோ, ஜெட்டிக்ஸ், டிஸ்னி, நிக் ஜூனியர் மற்றும் சுட்டி டி.வி என நாலு சேனல்கள்.
சுருங்கச் சொல்வதென்றால், இவைதான் இப்பொதைக்கு தமிழ்நாட்டின் பேபி ஸிட்டர்ஸ் !
7 comments:
Inga thaan intha koothu ellamnu partha...angeyum intha kathai thaan pola irruku. Ella orrlayum children are the same.
iyyo... i like Dora..it is very colorful and interactive. i feel very happy to see a blog about Dora. thanks keerthi
hmm... talk about the products based on these characters. Anirud wants a 'Thomas & Friends' underwear. Very often he refers that as 'ennoda favourite jetti'. :)
ada paavame eppalerndhu MEPZ poneenga? and where are u staying btw?
Idhu dhaan first Ippidi oru cartoon character kelvi padaren... :)
just fyi..
I live in the US..but my parents live in Perungalathur, right next to tambaram ( I was raised there...)...our house is 40+ years old...
I used to work in MEPZ ( with CBSI, now called covansys I believe)..
will be travelling to chennai and staying in Perungalathur....
ganesh venkittu
gvenkittu.blogspot.com
டோரா பற்றி - நச்சுன்னு ஒரு பதிவு.
:)
Post a Comment