Thursday, July 10, 2008

மர்மயோகி



மர்மயோகியில் அமிதாப் பச்சன் நடிக்கப்போவதாக நம்பத்தகுந்த-நம்பத்தகாத (ஒரே வார்த்தையாக படிக்கவும்) வட்டாரங்களிலிருந்து செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மும்பையில் ஆரம்பம்... கோடிகளில் பட்ஜெட்... டிரெய்லர் ரெடி.. என்று செய்திகள்.. வதந்திகள். பரபரப்புகள்..

தசாவதாரத்தை கடித்துத் துப்பிய மீடியா, அடுத்த கைப்பிடி அவலை வாயில் போட்டுக்கொண்டுள்ளது. இனி படம் வரும் வரை, வாக்யூமில் வயலின் வாசிப்பார்கள்.

சொந்த சிந்தனையில், ஜோஸியம் பார்ப்போம். இனி, படம் வரும் வரை என்னென்ன செய்திகள் மர்மயோகியைச் சுற்றி வரும்.

  • கமல் படத்தில் நடிப்பதற்கு அமிதாப் ஒப்புக்கொண்டார். பின்னர் கழண்டு கொண்டார். அமிதாப் கேட்ட சம்பளம் கமலின் சம்பளத்தைவிட அதிகமாக இருந்ததால் பிரச்சனை. தயாரிப்பாளர் விழி பிதுங்கினார். தயாரிப்பளருக்கும் கமலுக்கும் சண்டை. பின்னர் ஆஆஸ்கார் தலையிட்டு "நான் வேணும்னா தயாரிக்கிறேன்" என்று சொல்ல... "வேண்டாம் வேண்டாம்.. நானே அமிதாப் கெட்டப்ல வந்து அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்" என்று கமல் சொல்ல, ஒருவழியாக பிரச்சனை முடிந்தது.
  • மர்மயோகியில் ஷ்ரேயா. மர்மயோகியில் ஐஸ்வர்யா ராய். மர்மயோகியில் இலியானா. மர்மயோகியில் மீண்டும் அசின். மர்மயோகியில் நயன்தாரா. மர்மயோகியில் ஹீரோயினே இல்லை.
  • மர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 100 கோடி.
  • மர்மயோகி படம் எடுப்பதற்கு முன்பே டிரெயிலர் வெளியிடப்பட்டது. டிரெயிலரைப் பார்த்து கலைஞர் கருணாநிதி கமலஹாசனுக்கு - "அகில இந்திய உலகளாவிய தமிழக நாயகன்" என்று பட்டம் அளித்தார்.
  • மர்மயோகி படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் ஒப்புக்கொண்டார். "நாலு பாட்டு நான் பாடற மாதிரி வெச்சுக்குங்க" என்று கமல் சொல்ல.. மீண்டும் ப்ரச்சனை. தயாரிப்பாளார் பதைபதைக்க...சமாதானப்படுத்தி "அப்பொ சரி ! பாக்கி ஆறு பாட்டை நான் பாடறேன்.. இது ஓகேன்னா அதுவும் ஓக்கே !!" என்று ரகுமான் கடாட்சிக்கிறார்.
  • டிரெய்லர் பார்த்துவிட்டு இந்து முன்னனி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கேஸ் போட்டனர். "மர்மயோகின்னு படம் எடுத்து இந்து மக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துகிறார். படத்துல பகவத் கீதையை கமல் படிக்கற மாதிரி காட்சி வருது. இந்து மக்கள் யாரும் இப்படிச் செய்வதே இல்லை. எந்த ஆதாரத்தில் இப்படி கமல் நடிக்கலாம் ? இந்தப் படத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் கோரி வழக்கு போடப்போறோம்".
  • வைரமுத்து ஒரு பேட்டியில் "மர்மயோகி..!!. இந்தப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். பிப்பாஷா பாசு தோன்றும் இந்தப்பாடலில் ஒரு வரி.. 'குஜராத்தில் மதக்கலவரம், என்னெஞ்சில் காதல் கலவரமடா...' என்று எழுதியிருக்கிறேன்" என்று கேனத்தனமாக பேட்டி கொடுப்பார்.
  • மர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 140 கோடி.
  • மர்மயோகியில் மம்முட்டி மர்மமில்லாத யோகியாக நடிக்கலாம். இல்லையில்லை மோகன்லால்.
  • மர்மயோகியில் க்ளைமாக்ஸ் காட்சிக்காக பூகம்பம் தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது. இதற்காக குழுவினர் அனைவரும் சைனா பயணம்.பூகம்பம் இல்லாமலே தயாரிப்பாளர் பதற்றம்.
  • மர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 170 கோடி.
  • இதுதான் மர்மயோகியில் கமலின் ஒப்பனை - என்று குங்குமம் வைத்த கமல், மலைவாசி கமல் என்று சம்மந்தாசம்மந்தமில்லாத படங்களை எல்லாம் போட்டு ஒரு சிறப்பிதழ் வெளிவரும்.
  • பாடல் வெளியீட்டுக்காக அர்னால்ட் ஷ்வார்செனகர் சென்னை வரலாம் என்று எதிர்பார்ப்பு. இல்லையில்லை டாம் க்ரூஸ்.
  • மர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 240 கோடி.
  • தயாரிப்பாளர் "இந்தப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை" என்று நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே சொன்னார்.
  • திரைப்படம் ப்ரிவ்யூ !! ரஜினிகாந்த் மயக்கம் போட்டு விழுந்தார். பாலச்சந்தர் கமலை உப்பு மூட்டை தூக்கி பாராட்டினார்.
  • முதல் நாள் ஷோ பார்த்துவிட்டு வெளிநாடு வாழ் தமிழ் ப்ளாகர்கள் மற்றும் லோக்கல் ப்ளாகர்கள் படத்தை கிழி கிழி என்று கிழிப்பார்கள். "மர்மயோகியில் மர்ம யோகிக்கு இடையே ஒரு ஸ்பேஸ் வர வேண்டும். கமல் இப்படிச்செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஸ்க்ரீன்ப்ளே சரி இல்லை. படத்தின் ஸ்க்ரிப்டை கவனமாக எழுதியிருக்கவேண்டும். படத்தில் கதை இல்லை. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி இல்லை. ஆனால் கமல் உழைப்புக்கு சல்யூட்" என்று மைக்ரோ அனாலசிஸ் செய்த மாதிரி கணக்கு காட்டுவர்.
  • கமல் மட்டும் ஓரமாக நின்று தற்காலத்து சினிமாவின் வெற்றிக்கான ஃபொர்முலா கண்டுபிடித்த சந்தோஷத்தில் மருதநாயகம் பட துவக்க விழா அறிவிப்பு விடுவார்.
சுபம்.

7 comments:

Unknown said...

//மர்மயோகியில் மர்ம யோகிக்கு இடையே ஒரு ஸ்பேஸ் வர வேண்டும். கமல் இப்படிச்செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஸ்க்ரீன்ப்ளே சரி இல்லை. படத்தின் ஸ்க்ரிப்டை கவனமாக எழுதியிருக்கவேண்டும். படத்தில் கதை இல்லை. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி இல்லை.//
Nice ones. Most such people reacted this way for Dasa..!!!

~Sriram.

Anonymous said...

Absolutely fantastic
//"வேண்டாம் வேண்டாம்.. நானே அமிதாப் கெட்டப்ல வந்து அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்" என்று கமல் சொல்ல, ஒருவழியாக பிரச்சனை முடிந்தது.//
Hilarious!

Regards
Venkatramanan

Anonymous said...

ahaa.. contd

oru blogger mattum padam varadhuku oru masam munnadi irundhey blog la 2 days ku once matter poda arambipaaru.. yaarayo pudichu first day first show padam parthutu "kanden marmayogi yai" nu post poduvaar..

aprom adutha vaaram sudharshan, adhuku adutha vaaram family oda padam parthutu.. kamal costume endha kadai la vanginaar adhukum kadhai kum enna significance num innoru trivia post poduvaar, aprom
marudhanayagam..
well...adhuku unnoda post + indha comment thirumba padikavum....

BTW 'history repeats itself' a thamizh la epdi solradhu?

kumar said...

nice hilarious post :)

It would be nice if you come out with a guess-post of KUSELAN .

Anonymous said...

hilarious....very good one...no matter whichever fools think of him,Kamal will be the GOD of Indian Film Industry

KRTY said...

Sriram, yeah. That kind of pissed me off.

Venkataramanan, thank you.

PK, Varalaaru Thirumbugiradhu. Ippadi kaalai vaaritteengale !! :P

Kumar, thank you.

Anon, thanks !

ஸ்வர்ணரேக்கா said...

"அகில இந்திய உலகளாவிய தமிழக நாயகன்".......

உங்கள் கற்பனைக்கு என் வாழ்த்துக்கள்....