Wednesday, July 09, 2008
கம்போஸிஷன்
ஒரு சாதாரணமான விஷயத்தை - ஒரு வித்தியாசமான ஆங்கிளிலிலோ, அல்லது ஒரு ஸ்வாரஸ்யமான தருணத்திலோ படம் பிடிப்பது makes photography interesting. எத்தனைதான் போட்டோக்ராபி கற்றாலும், கம்போஸிஷன் செய்வதில்தான் மொத்த போட்டோவின் உயிர் அடங்கியிருக்கிறது.
"Composition is the plan, placement or arrangement of elements or ingredients in an art work."
வ்யூ ஃபைண்டரில் பார்த்துக்கொண்டே, உங்கள் போட்டோ எப்படி வரவேண்டும் என அப்போதே தீர்மானித்து சப்ஜெக்ட்களை நகர்த்துவது அல்லது அதற்க்கேற்ப நீங்கள் நகர்ந்துகொள்வது.. அல்லது அதற்கேற்ப ஆங்கிளை மாற்றுவது.
க்ளிக் செய்வதற்கு முன்பே, இந்த போட்டோ பார்ப்பதற்கு Pleasing ஆக இருக்குமா என்று ஒரு க்ஷண வினாடியில் யோசித்து பின் க்ளிக் செய்ய வேண்டும். Of course, அதற்கெல்லாம் நேரம் கொடுக்காத சில தருணங்களில் குருட்டாம்போக்கில் க்ளிக் செய்ய வேன்டியதுதான். இதர நேரங்களில் ஆர அமர வியூ ஃபைண்டரில் பார்த்து யோசித்து எடுக்கலாம்.
சினிமாகாரர்கள் தங்கள் கைகளை கட்டை விரலோடு கட்டை விரல் இணைத்து பார்த்து ஒரு கண்ணை இடுக்கிக்கொண்டு அந்த ஃப்ரேமை கற்பனை செய்து பார்ப்பார்களே... அதே தான். ஒரு ஃப்ரேமுக்குள் யார் யார், எது எது எங்கே வரவேண்டும்.. என்ன ஆங்கிளில் வர வேண்டும் என்ற தீர்மானம்.
சகட்டு மேனிக்கு, டிஜிடல் கேமராதானே என்று, கண்ட ஆங்கிளில் க்ளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில் குப்பை சேகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். கொஞ்சம் உன்னிப்பாக வித்தியாசமாக ப்ரயத்தனம் செய்து கம்போஸிஷன் வரக் கற்றுக்கொண்டால், எடுக்கும் அத்தனை போட்டோக்களும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
மேலே நீங்கள் பார்ப்பது, சென்ற ஞாயிறில் நெய்வேலி சென்றபோது எடுத்தவை. அபாரமான போட்டோக்கள் எல்லாம் இல்லை... ரொம்ப சாதாரணம்தான். இருந்தாலும் கரும காரியமாக கம்போஸ் செய்து எடுத்த படங்கள்.
கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக அட்வைஸ் செய்திருந்தால், மன்னிச்சு விட்டுடுங்க.. பாக்கி இடங்களில் இத்தனை சவுடாலாக போட்டோக்ரபி பற்றி பேச முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
your effort in the auto photo is awesome :-)
keerthi,
do you have any books to learn photography?
"கம்ப்யூட்டரில் குப்பை சேகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்." more i have like these!
Simple, but superb pics.
i liked the pics. nothing unusual about it. i liked your explanation even better :)
idhey subjects a random a shoot panni indha shots oda compare pannina epdi irukkum?
Nice photos..Keerthi.
I am sure the early kuppais lead to a wonderful photos later.
I think it's a learning curve..though I feel...one has to have that special 'Look thru the lens' ability ! You have it...I liked all the photos..especially the silhouette of the crow.!
யாத்ரீகன், நன்றி.
Ganesh, No sir. No books. Only endless experiments. But i can get you names of books. What are you looking at - Basics / advanced ?
PK, try ? Naanum try pannaren.
Floppy, the trouble here is if the learning curve is too skewed towards the negative side, people loose interest in photography and simply quit. Thanks, by the way.
Hi Sir, got to know your blog through some post in orkut about 'marmayogi'.
simple, yet awesome photographs!
Post a Comment