எச்சரிக்கை : பதிவின் முடிவில், நீங்கள் குளிக்க வேண்டியிருக்கும்
டைட்டானிக் படத்தில் டார்ஸனும் ரோஸும், கப்பல் டெக்கில் நின்று கொண்டு எச்சில் துப்புவதை அழகாக படம் பிடித்து ரசிக்கும் படியாக காட்டியிருப்பார்கள். ரசித்திருக்கிறோம்.
ஆனால் தினம் தினம் பீச் ட்ரெயினிலும், தாம்பரம் ரயிலிலும் பயணம் செய்யும்போது எங்கு திரும்பினாலும் எச்சல் துப்புகிறார்கள். ஹ்ம்ம். அது சரி. அதற்காக கேட் வின்ஸ்லெட்டா பீச் ட்ரெயினில் வந்து எச்சல் துப்பமுடியும் !!
வில்லிவாக்கத்திலிருந்து ரயில் ஏறுவதற்கு முன்னாலேயே துப்பல் ஆரம்பித்துவிடும். ப்ளாட்பாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டு ரயில் கொரட்டூருக்கு வந்துவிட்டதா என்று ஒட்டகச்சிவிங்கி கணக்காய் எட்டிப்பார்ப்பார்கள். அப்பொழுது என்ன தோன்றுமோ... டிராக்கைப்பார்த்தவுடன் வாய் எப்படி நமைச்சல் எடுக்குமோ தெரியவில்லை.. "க்க்க்க்க்கா தூ !!" என்று பச்சக் என்று டிராக்கின் மீது துப்புவார்கள். (பல டிராக்குகள் பள பள என்று இருப்பது இதனால் தானோ ?).
சகட்டு மேனிக்கு, சுமார் முப்பது சதவிகிதம் பேர் துப்புகிறார்கள். தனியாக இருந்தால் என் கணக்குப்படி ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு முறை... யாருடனாவது உரையாடிக்கொண்டிருந்தால் ஒரு வாக்கியம் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு முறை.. பேசி முடித்தபின் ஒரு முறை..
"க்க்க்க்க்கா தூஊ !!! ......... அவரைக் குறை சொல்ல முடியாது சார்.. ரொம்ப நல்ல மனுசன்.. க்க்க்க்க்கா தூ... " எச்சில் துப்புவது, அவரவர் சுதந்திரம்.. அதற்காக பொது இடத்தில், இப்படி மூன்று டி.எம்.சி கன அடி கணக்கில் துப்புவது படா பேஜாராக இருக்கிறது. ஓரமாகப் போய் மடை திறந்த வெள்ளமாய் கொட்டிவிட்டு வாருங்கள்.. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
சில ப்ரோ துப்பர்கள் ஹான்ஸ் (Hans) மென்றுவிட்டு துப்புவார்கள். அது அருவி போல பயணித்து, எங்கு போய் விழப்போகிறதோ என்று பதற்றம் ஏற்பட்டு, பின் கொஞ்சம் ப்ளாட்பாரத்திலும் பாக்கி டிராக்கிலும் விழுந்து தெறிக்கும். ப்ளாட்பாரத்தை சிகப்பு கலரில் அசிங்கம் படியும்.
சில ப்ரஹஸ்பதிகள் (இவர்களுக்கு மரியாதை கிடையாது), நடந்து சென்று கொண்டிருக்கும் போதே ப்ளாட்பாரத்தின் மீதே துப்புவார்கள். பின்னால் நடந்து வருபவர் மிதிக்க நேரிடுமே.. அவர் மேல் தெறிக்க வாய்ப்பு உள்ளதே என்ற கவலையே இல்லாமல் பச்சக் என்று துப்புவார்கள். கரெக்ட்டாக நான் ஷூ வைக்கப் போகும் இடத்தில் விழுந்து தொலைக்கும். ஒவ்வொரு தடவையும் முன்னால் ஒருவர் எச்சல் துப்பினால், அதன் ப்ரொஜக்டைல் மோஷனை அளந்து கொண்டா நடக்க முடியும் ?
ஏன் இத்தனை வெள்ளைப் புரட்சி ! எதற்கு இப்படி வெறித்தனமாக துப்புகிறார்கள் ? ஒன்றும் புரியவில்லை. துப்புபவர்கள் பெரும்பாலும் தொழிலாளிகள். அந்த ஃபேக்டரி சூழல் அப்படி ஆக்குகிறதா.. அல்லது சிகரெட், தண்ணி மாதிரி இதுவும் ஒருஸ்டைல் என்று நினைத்துக்கொள்கிறார்களா ?
சின்ன வயதில் பபிள் கம் அடிக்கடி சாப்பிட்டால் Saliva சுரக்காது.. வறண்டு போய்விடும்.. அப்புறம் இட்லி எல்லாம் இட்லியாவே இருக்கும்.. Enzymes எல்லாம் பிரியாது என்று பயமுறுத்தி வைத்துவிட்டார்கள். அப்படி பபிள் கம்மி்ற்கே இந்த கதி என்றால், இப்படி இவர்கள் ஒரு நாளைக்கு அறுபது தடவை எச்சல் துப்பினால், Salivary glands ஓவர் டைம் பார்த்து சீக்கிரம் ரிட்டையர் ஆகிவிடும்.
ரயிலில் ஏறியவுடன் பாதிபேர் அணையை மூடிக்கொள்வார்கள் (அதாவது வாயை). ஜன்னலோரமாக அமர்ந்திருப்பவர்களும், ஃபுட் போர்ட் அடிப்பவர்களும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டே துப்புவார்கள். சே !! For all you know, அது திரும்ப ரயிலுக்குள்ளேயே வேறு ஜன்னலுக்கும் புகுந்து விழும். (டைட்டில் படிக்கவும்).
எச்சல் துப்புவது, அதை மிதிப்பது (வெறுங்காலால்) இவை இன்ஃபெக்ஷனை பரவச் செய்யும்.
இதையெல்லாம் அவர்களிடம் எக்ஸ்ப்ளெயின் செய்யலாம் என்றால் முகத்தில் உமிழ்ந்து விடுவார்களோ என்ற பயம், அந்த எண்ணத்தை துறக்கச்செய்கிறது.
6 comments:
pesamal, high school'il physics / maths padangalai (velocity, projectile motion, etc) rayalil amarndhukondu karpikkalam..
nanraga ezhudhugireergal.
விவேக் ஒரு படத்தில் subject 2 உடன் உரையாடல்:
s2: குடுத்த கடன திருப்பி குடுக்க வக்கில்லே.. உனக்கெல்லாம் எதுக்கு 'Ray Ban' glass? தூ..
viv: இப்போ எதுக்கு துப்பினே?
s2: உன்னே அவமான படுத்த..
viv: இந்த கெட்ட பழக்கம் வேற எந்த country லயாவது இருக்கா? இப்படி துப்பினதைஎல்லாம் ராம்நாட் district கு திருப்பி விட்டா முப்போகம் விளைஞ்சிருக்கும்...
:-)
Nice one, Keerthi..
indha thuppuketta manushanga thuppitte dhaan irupaanga..thiruthave mudiyadhu..
keerthi, hilarious. Romba paarthurukkenga polirukku :-)
Mekhala, thanks :)
Rajeev, LOL. Thanks.
Shivathmika, yaah.. "ungalai ellam thiruththave mudiyaadha .. thoo !"
Anon, thank you :)
Idhukku Ellam Mr. A M R Dass onnum arikkai vida mattara...? ...Thuppuvadhu...Signalil nikkum podhu pinnaal varum vandi, pakkathil nirkum vandi paarkamaal thuppuvaargal...
One more Observation...Wash room (Gents) la before using oru.."Thoo...." .... Auto kaarargal and bus lerndhu thuppuvadhu...Ippidi ellam thuppukettadhu alla but thuppuneranja idama aayiduchu namma ooru :)............. :( :( :(
Post a Comment