Saturday, August 09, 2008

காணக் கண் கோடி வேண்டும்


நீங்கள் சீனாவில் நடந்த ஒலிம்பிக் ஓப்பனிங் செரிமொனியை டி.வியிலோ நேரிலேயோ பார்க்கவில்லையா ? கடவுள் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று அர்த்தம். உடனே ஏதாவது தீர்த்தயாத்திரை சென்று, கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள்.

யதேச்சையாக ஆபிஸிலிருந்து நல்ல சீக்கிரமாகக் கிளம்பி வீடு வந்தடைந்தால், தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது.. என்னடா என்று பார்த்தால் ஒலிம்பிக் ஆரம்பம். சீனாவில்தானே.. ஏதாவது டான்ஸ் ஆடி விளக்கேற்றிவிட்டு போய்விடுவார்கள் என்று நினைத்தால், சாட்டையடி !!! அப்படியே உட்கார்ந்தவன் தான்.. ஷூ சாக்ஸ் கூட கழற்றாமல் மெய் மறந்து உட்கார்ந்திருந்தேன்.

ப்ரம்மாண்டம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை வெள்ளிக்கிழமை, சீனா உலகத்துக்கே கற்றுக் கொடுத்தது. பூமி பிளந்து ஒரு Scroll... அதுவும் LED scroll (147 X 22 meters) நிறங்களை அள்ளி வாரி இறைத்தது. அதன் உள்ளே இருந்து சாரை சாரையாக விதவிதமான உடைகளுடன் மக்கள் வந்து புறாவாக, வட்டமாக, சதுரமாக என பலப்பல formationsகளில் ஓடி, உட்கார்ந்து, படுத்து, பறந்து, குதித்து என எல்லாவற்றையும் மிக நேர்த்தியான uniformity உடன் செய்ததைக் காணக் கண் கோடி வேண்டும்.

சீனாவின் பழம் புராண காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை, அசத்தலாக செய்து காட்டினர்.

என்னை பாதித்த ஒரு விஷயம். அவர்களது ஹெரிடேஜை டெக்னாலஜியுடன் Blend செய்து காண்பித்ததுதான் அது. தங்களது தொழில் நுட்பத் திறனை நேற்று சீனா அசால்டாக காண்பித்து மார்தட்டிக் கொண்டது. என்றாலும் தொழில் நுட்பத்தில் தங்களது cultural heritageஐ காண்பித்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.

பேப்பர் என்ற கண்டுபிடிப்பு பற்றி அவர்கள் கூறுகையில் ஒரு ராட்சத சைஸில் ஒரு பேப்பர், என்னமா நடனம் ஆடுகின்றது. அதில் சில குட்டிக் குழந்தைகள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொண்டு பெரிய ப்ரஷினால் வரைகிறார்கள். அது அழகான ஒரு ஓவியமாக மாறுகிறது... எல்லாம் கனவு போல நிகழ்கிறது !!

ப்பா ! ஒரு பூமிப் பந்து உள்ளிருந்து எழுந்து, அதில் குறுக்கவும் நெடுக்கவும் மனிதர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்... (எப்படித்தான் இந்த ஐடியா முளைத்ததோ).. அதன் உச்சியில் நின்று இரு பாடகர்கள் பாடுகிறார்கள். இதற்கு அங்கு கூடியிருந்த 91,000 பார்வையாளர்கள் எழுப்பிய கரகோஷம் கிட்டத்தட்ட ஜன்னலின் வழியாகவே கேட்டது.

சீனாவில் பொல்யூஷன் ஜாஸ்தி.. அதனால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவில்லை என்று உதார் விட்ட சில தடகள வீரர்கள், ஓப்பனிங்கைப் பார்த்திருந்தால் எப்பேற்பட்ட ஒரு கண்காட்சியை தவறவிட்டோம் என்பதை அறிந்து வெட்கப் பட்டிருப்பார்கள்.

அனியாய செலவு. சைனாவில் இது கொஞ்சம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசம் கிடக்கும் நிலையில் இந்த ஆடம்பரம் அடுக்குமா என்ற கேள்விகள் முளைத்துள்ளன.. அதெல்லாம் கிடக்கட்டும். நம் ஊரில் திருநெல்வேலியை தூத்துகுடியை(நன்றி விக்கி) மாநகராட்சி ஆக்குவதை அறிவிக்கும் விழாவிற்கே கோடிக் கணக்கில் செலவழித்துள்ளனர். வெட்டித்தனமான செலவுகள் இப்படி செய்வதற்கு இப்பேற்பட்ட உலகமே வியக்கும் காட்சியை தருவதற்கு அப்படி செய்ததில் தவறே இல்லை.

இந்த opening cermeony ஐ வடிவமைத்து செயல்படுத்திய அத்தனை மூளைகளுக்கும் எனது சல்யூட் !!

மேலே சொன்னது போல் கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள், இங்கே சென்று கொஞ்சம் கருணை பெறவும்.

5 comments:

Anonymous said...

// நம் ஊரில் திருநெல்வேலியை மாநகராட்சி ஆக்குவதை அறிவிக்கும் விழாவிற்கே

Boss,

அது தூத்துக்குடி மாநகராட்சி ஆக்கும் விழா

- தப்பு கண்டுபிடித்தால் மட்டுமே comment போடும் சங்கம் :)

gP said...

simply spectacular... and did u read that the fireworks we saw...are half of it computer graphics!!!! thats for home audiences only. this is too good.

Shobana said...

Simply amazing! I guess, they have raised the standard bar a lot higher for the rest of the countries. Let's see how it goes the next time in London(?). Will the rich west be able to generate such grandeur as the so called poor, ruthless east? Poruthu paarkallam.

gP said...

well shobana, it was an excess of the poor-rich China that made this possible. the west is not communist, so they cant rape peoples money for grandeur. purpose is much more relevant rather that grandeur.

KRTY said...

Vicky, thanks. Corrected.

GP, Shobana, innum 4 years dhaan. poruthirundhu paarpom.