
மீசை இல்லாத என் முகத்தைப் பதிவு செய்யச்சொன்ன நண்பர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம். மீசை மழித்தபின் யாரும் என்னை இன்னும் உருப்படியாக போட்டோ எடுக்கவில்லை. எடுத்தவுடன் போடுகிறேன்.
ஸ்கூல் யூனிபார்மில் ஜம்மென்று டை கட்டி, பாட்ஜ் குத்தி, வகிடெடுத்து தலை வாரி, பவுடர் பூசி, சாந்துப் பொட்டு வைத்துக்கொண்டு முறைத்துப் பார்ப்பது சாக்க்ஷாத் நானேதான். ஸ்கூல் ஐடென்டிடி கார்டுக்காக எடுக்கப்பட்ட படம்.
ஒருவேளை நான் பெரும் புகழ் பெற்று, பெரிய மனிதனாக ஆகிவிட்டால், இந்த போட்டோவை யாராவது ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்து, "இந்த கோடீஸ்வர தத்துவமேதை யார்.. விடை பதினெட்டாம் பக்கம் பார்க்க" என்று வெளிவரச் செய்யவும். அதை நானே செய்து கொள்ளலாம்தான் என்றாலும், சுயவிளம்பரம் எனக்குப் பிடிக்காது.
உங்களிடமும் அனேகமாக உங்கள் போட்டோவும் மக்கிய நிலையில் இருக்கக்கூடும். போட்டோ என்பது பேப்பர் வடிவில் இருந்தால் தான் அதை கொஞ்ச நேரம் ரசிக்கலாம். இருந்தாலும், காலத்தால் அழியக்கூடாது என்று நீங்கள் நினைக்கும் போட்டோக்களை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். அல்லது, உங்கள் டிஜிட்டல் கேமராவில் அழகாக போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (நல்ல வெயில் படும் இடத்தில், போட்டோவை படுக்க வைத்து, மேலே இருந்து க்ளிக் செய்யவேண்டும். )
5 comments:
"இந்த கோடீஸ்வர தத்துவமேதை யார்.. விடை பதினெட்டாம் பக்கம் பார்க்க" என்று வெளிவரச் செய்யவும். அதை நானே செய்து கொள்ளலாம்தான் என்றாலும், "
........சுயவிளம்பரம் எனக்குப் பிடிக்காது.
Suya vilambaram pidikaadhaa ? Appo idhu ellam enna SIr ?
Nice keerthi :)
boss, St.Johns's a?
Prakash, Yes. St. Johns Villiwakkam.
LKG to 12th.
Dear keerthi, I just seen UR Child photo. I couldnot believe ,,
Pl. let me know how to reach UR site to see all UR photos.
Suya Vilambaram avasyam, enru ennum entha kalathil, ippadium, ORUVAN irukkiran enral athu.......
Uncle
Post a Comment