Saturday, October 04, 2008

அடேங்கப்பா பிரபு அனுப்பிய ஒரு லின்க் ஒன்று விநோதமாக இருந்தது. அமெரிக்காவில் தந்தையாகப்போகும் ஒருவருக்கு எழுந்துள்ள நியாயமான சந்தேகம்.

தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தால், ஒருவேளை தான் திரும்பி இந்தியா வந்து அந்தக் குழந்தைக்கு இங்குள்ள கல்வி பயிலவைக்க நேர்ந்தால், அச்சமயம் அந்தக் குழந்தைக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.

மயிரிழையில் இந்தச் சந்தேகம் ஒரு மட்டமான கருத்தாக எண்ணப்படும் அபாயம் உள்ளது. ஆனால், இது நியாயமான சந்தேகமே. மிடில் க்ளாஸிலிருந்து அமெரிக்கா சென்று இரண்டு வருடங்களில் திரும்பும் ஒருவர், அதே நடுத்தர வர்கத்துக்குத் தான் திரும்புகிறார். கொஞ்சமாக வசதிகள் வந்தாலும் மிடில் க்ளாஸ் மிடில் க்ளாஸ்தான்.

அயல்நாட்டில் பிறந்த ஒரு குழந்தை, இங்கே வந்து ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளை அனுபவிக்க வழி உள்ளதா ? இந்தக் கேள்வி, வெறும் பதில் அறிந்து கொள்ள முற்படும் ஒரு கேள்விதான்.

4 comments:

Kavitha said...

I guess duel citizenship is an option to get the benefits. But never thought about it...good question though.

Anonymous said...

middle class eppo upper class aaga maarum?

KRTY said...

Poetry, it is !

PK, need some extraordinary in the equation. It is not difficult for the poor to become rich. Only for the middle class to become rich, it is tough.

KRTY said...

I mean, just my thought.