ஒரே மூச்சில் விகடன் தீபாவளி மலர் படித்து முடித்தாகிவிட்டது. ஒரு ஸ்வாரஸ்யமும் இல்லாத ஒரு இதழ். எங்குமே சுவை இல்லை. கதைகள், சிறுகதைகள், துணுக்குகள், விட்டுகள், கவிதைகள் என எல்லாமே பெரும்பாலும் சுமார் ரகம். ஏமாற்றம்.
தீபாவளி மலருக்கு பதிலாக தினமலர் வாசிக்கலாம். வெகு ஸ்வாரஸ்யம். குறிப்பாக இரண்டு மூன்று நாட்களாக வரும் செய்திகள். "இலங்கைத் தமிழர் படுகொலை" என்ற கேட்ச் ஃப்ரேஸ் போட்டுவரும் செய்திகள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதைக் கண்டித்து நம்ம இயக்குனர்கள் செய்த போராட்டமும், அதைத் தொடர்ந்த கைது சம்பவங்களும் வேடிக்கையான வேடிக்கை. யாராக இருந்தாலும், சரியோ தவறோ, நமது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறு. தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி மனிதச் சங்கிலி. இதனால் ஆய பயனென் என்று தெரியவில்லை. ஆனால், ஐந்து மணி நேரத்துக்கு சென்னையில் டிராஃபிக் ஜாம் நேர இதுவும் ஒரு காரணம். அரசு என்பது ஒரு இயந்திரம். அது இயக்க வேண்டும். சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும். போராட்டங்களை ஒடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசே முன்வந்து ஒரு போராட்டம் நடத்துவது வேதனையான விஷயம். "மத்திய அரசின் செவி சாய்ப்பதற்காக" என்று சொன்னால் நம்பத்தக்கதாக இல்லை. மத்திய அரசின் கணிசமான ஒரு அங்கமாக இருந்து கொண்டு, இப்படி போராட்டம் நடத்தித் தான் செவி சாய்க்க வைக்க வேண்டுமா என்ன ? ஆனால், அதை நம்பும் ஜனங்களும் நம்மூரில் இருக்கிறார்கள்.
'ஈழத் தமிழ் மக்கள் நலன்' என்பது 'தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு' என்று மாறும்போது தான் பிரச்சனை ஏற்படுகின்றது. நோக்கம் என்பது பிசகாமல் இருக்கவேண்டும். இந்த இன வெறித் தாக்குதல் பற்றிப் படித்துப்பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. மொழி என்ற ஒற்றுமை உணர்வு பொங்குவதும் இயற்கையே. ஆனால், 'ப்ராபர் சேனல்' என்று ஒன்று இருக்கிறது. தமிழ்நாடு - கர்னாடகா சண்டை மாதிரி இதையும் நினைப்பது முட்டாள்தனம். திரையுலகினர் ராமேஸ்வரம் சென்று ஒரு நாட்டை எதிர்த்துப் பேசுவது அரசின் விருப்பத்துக்கு மாறானது.
பொடா சட்டம் இன்னும் செயல்பாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும். அடுத்த அதிமுக ஆட்சியிலாவது அது வலியுறுத்தப்படட்டும்.
3 comments:
Wish you happy deepavali keerthi :)
சபாஷ்! விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை கண்டித்து எழுதியிருப்பதற்கு என் பாராட்டுக்கள். நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. தமிழக மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.
Jeevan, thanks.
Srikanth, Nandri.
Post a Comment