Saturday, December 06, 2008
தேஜா பயணம்
"நான் சமத்தா இருக்கேன்... ஓகே ?" என்று சொல்லிவிட்டு தேஜா ஏரோப்ளேனில் ஏறிவிட்டாள். ஃப்ளைட்டிலிருந்து போன் செய்து "கீத்தி மாமா ! அந்த ஃப்ளைட் மூஞ்சியே காணொமே... இல்லே !!" என்றாள். அவள் முகத்தில் தோன்றும் அந்த சந்தேகரேகைகளை நான் கற்பனை செய்து கொண்டேன். இனி சில மாதங்களுக்கு, ஞாபகங்களிருந்துதான் அவள் குரலுக்கு முகம் கொடுக்க வேண்டும். சேகரித்த அத்தனை நினைவுகளையும் இனிமேல் பொக்கிஷங்கள்.
டெலிபோன் வயரின் இன்னொரு முனையின் தூரத்தில் வைத்து உறவு பாராட்டும் காலத்தில், தேஜாவையும் அந்த இன்னொரு முனையிலிருந்துதான் சந்திக்க முடியும் என நினைக்கும் பொழுது தழுதழுக்கிறது.
தேஜாவுக்கு அவள் விழித்திருக்கும்பொழுது, யாரும் தூங்கக்கூடாது.. அவளுடன் விளையாட வேண்டும். நான் யதேச்சையாக தூங்கச் சென்றால், மேலே தலையணை போட்டு, போர்வையை முகத்தில் போட்டு, காதில் "கூ" என்று கத்தி, கண்ணத்தை தடவி "கீத்தி மாமா ! யேந்திரு ..!" என்று கொஞ்சி... எழுப்பிவிடுவாள்.
நேற்றிரவு.. அவள் வேறெங்கோ பறந்துகொண்டிருந்தாள். என்னால் தூங்க முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
That’s very sweet of her, who won’t feel to missing her. wish happy journey to Theja :)
just stumbled upon your blogs da. Nice short and crisp writing. In case you are wondering who i am .. name is Manu :)
Jeevan, Thanks.
Manu, :) Thanks man
photograph is nice.
Post a Comment